தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெயிலர்’ படத்தை முடித்துவிட்டு ‘லால்சலாம்’ படத்தில் நடித்தார் ரஜினிகாந்த் .
இப்படம் அடுத்த ஆண்டு 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது. தற்போது ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.
இதன் படப்பிடிப்பு கேரள மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதி மக்கள் ரஜினியை மகிழ்ச்சியுடன் வரவேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தற்போது ‘தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இதற்காக ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினிகாந்த் அங்கு சென்றார்.
இந்த நிலையில் இன்று அக்டோபர் 25ஆம் தேதி அமிதாப்பச்சனின் உடன் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளதாவது…
” 33 வருடங்களுக்குப் பிறகு எனது வழிகாட்டி அமிதாப்பச்சனுடன் நடிக்கிறேன். என் இதயம் சந்தோஷத்தில் துடிக்கிறது” என ரஜினிகாந்த் அமிதாப்பச்சயுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தனது நெகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
Rajini excited with Amithab at Thalaivar 170 spot