வாய் பேசாத காது கேளாத நடிகையை திருமணம் செய்யும் விஷால்.?!

வாய் பேசாத காது கேளாத நடிகையை திருமணம் செய்யும் விஷால்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

45 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஷால். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடித்த பின் தான் தனது திருமணம் என சபதம் எடுத்தவர் இவர்.

நடிகர் சங்க கட்டிடமும் முடிந்தபாடில்லை.. விஷால் கல்யாணமும் முடிந்தபாடில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் சரத்குமார் மகள் வரலட்சுமியை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் உறவில் பிரச்சினை வந்ததால் இருவரும் பிரிந்தனர்.

அதன்பின்னர் ஒரு தொழிலதிபரின் பெண் அனீஷா என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். அந்த திருமணமும் நடைபெற வில்லை.

இந்த நிலையில் தற்போது நடிகை அபிநயா என்பவரை விஷால் திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஈசன், நாடோடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அபிநயா. குற்றம் 23 படத்தில் அருண் விஜய்க்கு அண்ணியாக நடித்து பாராட்டுகளையும் பெற்றார். அழகும் திறமையும் நிறைந்தவர் இவர்.

அதே சமயம் அபிநயா காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதுபற்றி நாம் விசாரித்த வரையில் இது உறுதியான தகவல் இல்லை எனத் தெரிய வந்துள்ளது.

nadodigal-abinaya-stills-pics

Actor Vishal marriage news updates

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் ஹீரோ – ஹீரோயின் இவர்கள் தான்.!?

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் ஹீரோ – ஹீரோயின் இவர்கள் தான்.!?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்க்ஷி இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

இவர்கள் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர்.

இந்த படம் சாக்ஷியின் கருத்தாக்கம் கொண்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாகும்.

இந்த படத்தை ‘அதர்வா – தி ஆர்ஜின்’ எனும் முப்பரிமாண வடிவிலான கிராஃபிக் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Who will be Hero and Heroine in Dhoni Entertainments first movie

கதிர் நரேன் நட்டி ஆகியோருடன் 3 நாயகிகள் இணைந்த ‘யூகி’

கதிர் நரேன் நட்டி ஆகியோருடன் 3 நாயகிகள் இணைந்த ‘யூகி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர் – ஆனந்தி மீண்டும் ஜோடியாக இணைந்துள்ள படம் ‘யூகி’.

இந்த ஜோடி ஏற்கெனவே இணைந்து நடித்த படம் ‘பரியேறும் பெருமாள்’.

அந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது இணைந்துள்ளனர்.

இவர்களுடன் நரேன், நட்டி, பவித்ரா லக்ஷ்மி, ஆத்மியா ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 11:11 புரொடக்ஷன்ஸ் சார்பாக Dr.பிரபு திலக் வெளியிடுகிறார்.

Kathir Anandhi Narain Natty starrer Yugi

@am_kathir @natty_nataraj @itsNarain @anandhisocrates @itspavitralaksh @athmiyainsta @prabhuthilaak @ranjinraj_ @FilmUan #JuvisProduction @aaarproductions @ZacHarriss @shijualex09 @DoneChannel1

‘AK 62’ படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகை…

‘AK 62’ படத்தில் மீண்டும் அஜித்துடன் இணையும் பிரபல நடிகை…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தனது 61வது படமான ‘துணிவு’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் அஜித்.

இப்படம் 2023 இல் பொங்கலுக்கு முன்னர் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்குப் பிறகு, இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் ‘ஏகே 62’ என்ற தற்காலிகத் தலைப்பில் அஜித் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது, ​​நடிகை த்ரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘ஏகே 62’ படத்தின் கதாநாயகியாக நடிக்க த்ரிஷாவை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜித்துடன் ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ ஆகிய படங்களில் இணைத்துள்ளார் நடிகை த்ரிஷா.

த்ரிஷா

Ajith starring ‘AK 62’ joins trisha

OLD IS GOLD மீண்டும் சினிமா சரித்திரத்தை புரட்டிப்போட்ட ‘விக்ரம்’.; இதாண்டா கமல்!

OLD IS GOLD மீண்டும் சினிமா சரித்திரத்தை புரட்டிப்போட்ட ‘விக்ரம்’.; இதாண்டா கமல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த திரைப்படம் ‘விக்ரம்’.

அனிருத் இசையில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படம் கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி வெளியானது.

இந்த படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி பகத் பாஸில் நரேன் சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படம் உலகளவில் மாபெரும் மசூலை எட்டி ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்று தமிழ் சினிமாவுக்கு பெருமையை தேடித் தந்தது.

பான் இந்தியா படங்களாக கன்னடம் மலையாளம் தெலுங்கு ஹிந்தி படங்கள் தமிழகத்தில் சக்கை போடு போட்ட நிலையில் விக்ரம் படத்தின் இமாலய வெற்றி ரசிகர்களால் பெரிதும் போற்றப்பட்டது.

மேலும் திரையுலகினருக்கும் அதிக உற்சாகத்தை கொடுத்தது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் 100வது நாள் வெற்றி விழா கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 -12 வருடங்களாக பெரும்பாலான படங்கள் 100 நாட்கள் தியேட.டரகளில் ஓடுவதில்லை. ஆனால் 1970 – 1980 – 90களில் படத்தின் 100-வது நாள் 150 வது நாள் வெள்ளி விழா என பிரம்மாண்டமான விழாக்கள் கொண்டாடப்பட்டது.

தற்போது மீண்டும் பழைய சினிமா சரித்திரத்தை கமல்ஹாசன் சாத்தியமாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொன்னின் செல்வன்’ எனக்கு மிகவும் பிடித்த ஆல்பம் – செல்வராகவன்..

‘பொன்னின் செல்வன்’ எனக்கு மிகவும் பிடித்த ஆல்பம் – செல்வராகவன்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மணிரத்னம் இயக்கி தயாரித்திருந்த படம் ‘பொன்னியின் செல்வன்’.

இந்த திரைப்படம் ஒரு வரலாற்று காவிய நாடகம் மற்றும் கதை சோழ வம்சத்தின் எழுச்சியை மையமாகக் கொண்டது.

‘பொன்னியின் செல்வன்’ இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் மொத்த ஆல்பமும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் செல்வராகவன் ‘பொன்னியின் செல்வன்’ தான் தனக்கு மிகவும் பிடித்த இசை ஆல்பம் என்று கூறினார்.

மேலும், தனது ட்விட்டரில், “எனது அனுபவத்தில் பிடித்த சிறந்த இசை ஆல்பம் இப்படம் என்பதில் சந்தேகமில்லை” என பதிவிட்டார்.

ponnyin selvan is my fav album says selvaragavan

More Articles
Follows