‘குற்றம் 23’ படத்தயாரிப்பாளரின் ‘சலூன்’..; யோகி பாபு முடியை வெட்டுவாரா சிவா..?

‘குற்றம் 23’ படத்தயாரிப்பாளரின் ‘சலூன்’..; யோகி பாபு முடியை வெட்டுவாரா சிவா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரெதான் – தி சினிமா பீப்பிள் இந்தர்குமார் தயாரிப்பில் சிவா கதாநாயகனாக நடிக்க – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் முத்துக்குமரன் இயக்கத்தில் “சலூன்”

‘குற்றம் 23’, ‘தடம்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து இந்தர்குமாரின் ரெதான் – தி சினிமா பீப்பிள் தயாரித்துள்ள படம் ‘கொம்புவச்ச சிங்கம்டா’.

எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகனாக சிவா – காமெடியனாக யோகி பாபு நடிப்பில் ‘தர்மபிரபு’ வெற்றிப் படத்தை இயக்கிய முத்துக்குமரன் இயக்கத்தில் புதிய நகைச்சுவை படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார் இந்தர்குமார்.

‘சலூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் சிவா – யோகி பாபு இணைந்து நடிக்க கதாநாயகி மற்றும் நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

‘சலூன்’ பின்னணியில் கடையின் முதலாளியாக மிர்ச்சி சிவா, தொழிலாளியாக யோகி பாபு நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க சரவெடி நகைச்சுவையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கி கோடை விடுமுறையில் வெளிவருகிறது.

படக்குழுவினர் விவரம்:
தயாரிப்பு – இந்தர்குமார்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முத்துக்குமரன்
ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன்
இசை – சாம்.சி.எஸ்
எடிட்டிங் – சான் லோகேஷ்
கலை – சி.எஸ்.பாலசந்தர்
பாடல்கள் – யுகபாரதி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Yogi Babu and Mirchi Shiva joins for Saloon

yogi babu saloon

இறுதிக் கட்டத்தை நெருங்கியது விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் ‘அக்னிச் சிறகுகள்’

இறுதிக் கட்டத்தை நெருங்கியது விஜய் ஆண்டனி & அருண் விஜய்யின் ‘அக்னிச் சிறகுகள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay and vijay antonyவிஜய் ஆண்டனி, இயக்குநர் நவீன், நடிகை அக்‌ஷராஹாசன் மற்றும் “அக்னி சிறகுகள்” படத்தின் மொத்தப்படக்குழுவும் கொல்கத்தாவின் சூழலை கொண்டாடி எடுத்துக்கொண்ட செல்ஃபி சமீபத்தில் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

படத்திற்கு கிடைத்த வரவேற்பு மற்றும் தற்போது முழுப்படப்பிடிப்பும் முடிந்ததில் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது படக்குழு.

இயக்குநர் நவீன் இது குறித்து கூறியதாவது….

உலகம் முழுவதுமே படப்பிடிப்பு செய்வது என்பதே தற்போது மிகவும் நெருக்கடியான சூழலாக இருந்து வருகிறது.

படக்குழுவின் அயராத ஒத்துழைப்பே அனைவரும் இணைந்து இயங்குவதற்கு பெரும் ஊக்கமாக இருந்தது.

“அக்னி சிறகுகள்” படத்திற்கு இப்படியானதொரு படக்குழு கிடைத்திருப்பதற்கு நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகள் சிலவற்றை கொல்கத்தாவில் தற்போது படமாக்கினோம்.

இத்துடன் படத்தின் முழுப்டப்பிடிப்பும் முடிவடைந்துவிட்டது. விஜய் ஆண்டனி மற்றும் அக்‌ஷரா ஹாசன் இருவரும் காட்சிகளில் வெளிப்படுத்திய அற்புத நடிப்பில் அசந்து போனேன்.

படத்தின் மொத்த படபிடிப்புமே பேரனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் துவக்கப்பட்டு விட்டது.

இந்நேரத்தில் படக்குழு அனைவருக்கும் தேவையான பாதுகாப்பு மற்றும் உடல்நலம் பேணும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமைத்து தந்ததற்காக தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T. சிவா அவர்களுக்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

மல்டி ஸ்டார் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன், சம்பத், J சதீஷ்குமார், ரைமா சேனா செண்ட்ராயன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.

நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். K S பாச்சா ஒளிப்பதிவு செய்ய, வெற்றிவேலன் K படத்தொகுப்பு செய்துள்ளார். கிஷோர் கலை இயக்கம் செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைப்பயிற்சி செய்துள்ளார்.

பரஞ்சோதி எக்சிக்யூட்டிவ் புரடியூசராக பணியாற்ற சௌபர்னிகா உடை வடிவமைப்பு செய்துள்ளார்.

மிகப்பெரும் பட்ஜெட்டில், இதுவரை தமிழ் சினிமா கண்டிராத பூலோகத்தின் வித்தியாசமான பல லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ள, இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் T. சிவா தயாரிக்கிறார்.

பரபர திரில்லராக, பல அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது..

Agni Siragugal shoot has been wrapped up at Kolkata

எழுந்து வா இசையே… எஸ்பிபி-க்காக இலங்கை இசைக்கலைஞர்களின் இசையஞ்சலி

எழுந்து வா இசையே… எஸ்பிபி-க்காக இலங்கை இசைக்கலைஞர்களின் இசையஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலக இசை ரசிகர்களின் உள்ளத்தில் நீங்காத இடம்பிடித்த மறைந்த பாடகர், அமரர் பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவாக இலங்கையின் பிரபல இசைக்கலைஞர்கள் இணைந்து அஞ்சலி பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் இலங்கை இசையமைப்பாளர் அருண் குமாரசுவாமி பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

பாடல் வரிகளை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபோது “வானே இடிந்ததம்மா” என்ற இரங்கல் பாடலை எழுதி கவனம் பெற்ற தமிழ் சினிமா பாடலாசிரியர், கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

பாடலை இலங்கையின் பிரபல பாடகர்களான எம்.சிவகுமார், கே.மகிந்தகுமார், பிரேமானந்த், சுருதி பிரபா, நிலுக்ஸி ஜெயவீரசிங்கம், நித்தியாந்தன், கிருஸ்ண குமார், கந்தப்பு ஜெயந்தன், கே.சுஜீவா, மடோனா, அருண்குமாரசுவாமி ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் வொன்டர் மீடியா புரடக்ஸன் தயாரித்துள்ள இப்பாடலின் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம். ஒலிக்கலவை கோகுல் கிருஸ்ணா, ஒளிப்பதிவு நியாஸ் ஹம்ஸா,சுமதி குமாரசுவாமி,
வெங்கட் முரளி, செம்மையாக்குனர் இமானுவல் பிலிப் ஜோன்ஸன், கணனிவரைகலை,சிராஜ் பரபுராத், ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா காரணமாக வெளியீடு தாமதமான இப்பாடல் இன்று வெளியாகியுள்ளது.

*எழுந்து வா இசையே… பாடல்*

*SPB OFFICIAL TRIBUTE SONG Link*

SPB Official Tribute Song by Arunkumarasamy and Pottuvil Asmin

IMG-20201116-WA0058

IMG-20201116-WA0057

தியேட்டரில் வெளியாகி தீபாவளி போட்டியில் வெற்றி..; ‘மரிஜுவானா’ ஹீரோ ரிஷி மகிழ்ச்சி.!

தியேட்டரில் வெளியாகி தீபாவளி போட்டியில் வெற்றி..; ‘மரிஜுவானா’ ஹீரோ ரிஷி மகிழ்ச்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rishi Rithvikதீபாவளி என்றாலே புத்தாடை, மத்தாப்பூ, இனிப்பு, விருந்து இவையனைத்தையும் தாண்டி நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தியேட்டரில் புது சினிமா பார்ப்பதென்பது காலந்தோறும் மாறாத பழக்கம்.

இந்த வருடம் பண்டிகை திருநாளில் குறைந்த படங்களே திரையரங்கில் வெளியாகியுள்ளது.

அதில் அனைவர் கவனத்தையும் ஈர்த்து ரசிகர்களின் பேராதரவில் வெற்றி பெற்றுள்ளது “மரிஜீவானா” திரைப்படம்.

“அட்டு” திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த ரிஷி ரித்விக் நடிப்பில் இயக்குநர் M D ஆனந்த் இந்த “மரிஜீவானா” படத்தை இயக்கியுள்ளார்.

Third Eye Creations சார்பில் M D விஜய் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

நடிகர் ரிஷி இது குறித்து கூறியதாவது…

இந்த தீபாவளிக்கு என்னுடைய படம் “மரிஜீவானா” வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

“அட்டு” திரைப்படத்தின்போது ரசிகர்கள் எனக்கு பெரும் வரவேற்பு தந்தார்கள்.

ஒரு புதுமுக நடிகனாக இல்லாமல் அவர்களில் ஒருவனாக என்னை கொண்டாடினார்கள்.

“அட்டு” திரைப்படத்தில் முழு ரௌடியாக நடித்திருந்தேன். “மரிஜீவானா” படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறேன்.

“அட்டு” போலவே ரசிகர்கள் இப்படத்திலும் எனக்கு பெரும் வரவேற்பு தந்திருக்கிறார்கள்.

தீபாவளிக்கு வெளியான படங்களில் எங்கள் படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதே பெரு மகிழ்ச்சியாக உள்ளது.

கண்டிப்பாக இப்படம் அனைவரையும் கவரும் அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

இயக்குநர் M D ஆனந்த் கூறியதாவது….

இந்த தீபாவளிக்கு எங்கள் படம் வெளியாகிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படம் போதைப்பொருள் சம்பந்தமாக இதுவரையிலும் தமிழ் சினிமாவில் இல்லாத கோணத்தில் புதுவிதமாக, சமூக நோக்கோடு ஒரு கதையை கூறியுள்ளோம்.

அனைவருக்கும் பிடிக்கும் படியான வகையில் இப்படம் இருக்கும்.

தீபாவளி திருநாளில் ரசிகர்கள் தியேட்டர்களில் எங்கள் படத்திற்கு பெரிய வரவேற்பு தந்துள்ளார்கள். விமர்சகர்களும் தரமான மதிப்பீடு தந்துள்ளார்கள்.

எங்கள் படம் ரசிகர்கள் மனதையும் விமர்சகர்கள் பாராட்டையும் பெற்றது பெரு மகிழ்ச்சி. இந்த “மரிஜீவானா” உங்களை கண்டிப்பாக திருப்தி படுத்தும் அனைவரும் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.

இந்த “மரிஜீவானா” திரைப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாக நடித்துள்ளார் ஆஷா பார்த்தலோம் நாயகியாக நடித்துள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் குரு இசையமைக்க பால ரோசைய்யா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

M D விஜய் படத்தொகுப்பு செய்துள்ளார். Third Eye Creations இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.

தமிழ்த்தாய் கலைக்கூடம் நிறுவனத்தார் தமிழகம் முழுவதும் இப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

Actor Rishi Rithvik is happy with Marijuana result

ஒருவனின் மனைவி இன்னொருவரின் காதலியானால்..?!. கவிதையாக சொல்ல வரும் ‘காகித பூக்கள்’

ஒருவனின் மனைவி இன்னொருவரின் காதலியானால்..?!. கவிதையாக சொல்ல வரும் ‘காகித பூக்கள்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kagitha Pookkalகொரோனா காலமான இக்கால கட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்கள் முழு நலத்துடன் கொரோனா அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் ஸ்ரீ சக்திவேல் சினி கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகும் படம் ” காகித பூக்கள்”.

இந்த படக் குழுவினர் பொள்ளாச்சி அருகே உள்ள .கிராமத்திற்கு சென்றனர். ஆனால் அந்த கிராம மக்கள் படக் குழுவினரை ஊருக்குள் வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்து வர விடாமல் தடுத்து விட்டனர்.

எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மொத்த யூனிட்டையும் பொள்ளாச்சியில் தங்க வைத்துவிட்டு இயக்குனரும் தயாரிப்பாளருமான . முத்துமாணிக்கமும் தயாரிப்பு நிர்வாகியான சுப்ரமணியமும் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று மொத்த யூனிட்டையும் அங்கு வர வழைத்து ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடித்தனர்.

அந்த ஊர் அப்படி என்றால்
இந்த ஊர் இப்படி . . . (நாகரீகம் கருதி பொள்ளாச்சி – அருகே உள்ள கிராமத்தின் பெயரை குறிப்பிடவில்லை)

முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்ட “காகித பூக்கள் ” திரைப்படம் விரைவில் பெரிய திரையில் வர உள்ளது.

மேலும் படத்தைப் பற்றி கதை , திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகும் முத்துமாணிக்கம் கூறியவதாவது…

” ஒருவனின் காதலி இன்னொருவனின் மனைவியாகலாம். அதே சமயம் ஒருவனின் மனைவி இன்னொருவனின் காதலியாக முடியாது.

அப்படி ஆனால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை கவிதையாக சொல்லும் படம் தான் “காகித பூக்கள் “.

இதில் புதுமுகங்கள் லோகன் – பிரியதர்ஷினி இருவருடன் ப்ரவீண்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தில்லைமணி, தவசி , பாலு, ரேகாசுரேஷ் இன்னும் பலர் நடிக்கின்றனர்.

இத்தோஷ் நந்தா இசையமைக்க, சிவபாஸ்கர் கேமராவை கையாள, சுதர்சன் படத்தொகுப்பையும், பாலசுப்ரமணியம் கலையையும், ஸ்ரீ சிவசங்கர் – ஸ்ரீ செல்வி இருவரும் நடன பயிற்சியையும், சுப்ரமணியன் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனிக்கின்றனர்.

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது..

இது என்னோட முத லாவது படம்.” என்றார் முத்துமாணிக்கம்.

Kagitha Pookkal movie story revealed

தனுஷ் வெளியிட்ட ‘சாணிக் காயிதம்’ போஸ்டர்..; அழுக்கான உடையில் செல்வராகவன் & கீர்த்தி சுரேஷ் லுக்

தனுஷ் வெளியிட்ட ‘சாணிக் காயிதம்’ போஸ்டர்..; அழுக்கான உடையில் செல்வராகவன் & கீர்த்தி சுரேஷ் லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Saani Kayitham posterதமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான திரைப்படங்களை தந்தவர் இயக்குனர் செல்வராகவன்.

இவரும் தற்போது நாயகனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

‘சாணிக் காயிதம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

தற்போது இரண்டாவது போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த போஸ்டரில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் ரத்தக் கறையுடன் குற்றவாளிகளைப் போல குத்த வைத்து அமர்ந்துள்ளனர்.

இருவரின் முன்பு கத்தி & சில ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதுவும் வித்தியாசமான படைப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Dhanush revealed Saani Kayitham second poster

More Articles
Follows