மூன்று ஹீரோயின்களுடன் ‘தடம்’ பதிக்கும் அருண்விஜய்

thadam 3 heroinesஎன்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண்விஜய் அவர்கள் குற்றம்-23 படத்தில் மீண்டும் தன் ஹீரோயிசத்தை நிரூபித்தார்.

தற்போது ‘மீகாமன்’ பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் தடம் படத்தில் நடித்து வருகிறார்.

இதன் சூட்டிங்கின்போது அருண்விஜய்க்கு காலில் சிறு விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்படத்தில் இவருடன் 3 நாயகிகள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தெலுங்கில் ஜெகபதி பாபுவுடன் ‘பட்டேல் S.I.R.’ படத்தில் நடித்த தன்யா ஹாப் மற்றும் புதுமுகம் ஸ்மிரிதி ஆகியோர் நடிக்கின்றனர்.

மூன்றாவது நாயகியாக ‘சைவம்’ படப்புகழ் வித்யா நடிக்கிறார்.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ஒவ்வொரு நாயகியாக இணைவார்கள் என கூறப்படுகிறது.

அருண் ராஜ் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

‘குற்றம்-23’ தயாரிப்பாளர் இந்தர்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்.

இவர் தற்போது ‘கொடிவீரன்’ படத்தில் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

3 heroines romance with Arun Vijay in Thadam movie

Overall Rating : Not available

Latest Post