தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர் 170’ என்று தலைப்பிட்டுள்ளனர்.
பொதுவாகவே ரஜினி படங்கள் தொடங்கும் சமயத்தில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டும் இதுவரை தலைப்பு அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என சமீபத்தில் ரஜினிகாந்த் தெரிவித்து இருந்தார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார்.
இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இதன் படப்பிடிப்பு கேரளம் தலைநகர் திருவனந்தபுரத்தில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது.
ரஜினிகாந்த் பங்கேற்ற புகைப்படங்கள் கேரளாவை மட்டுமல்ல இந்தியாவை கலக்கி வருகிறது.
இந்த புகைப்படங்களில் ரஜினி இளமையாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி செல்லும் வழி எங்கும் ரசிகர்கள் திரண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இந்த வரவேற்பு ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு புறம் ரஜினிக்கு இப்போதே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது ரஜினிக்கு என்பதை விட இந்த படத்தின் இயக்குனர் ஞானவேலுக்கு எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது எனலாம்.
அதற்கான காரணம் சூர்யா நடிப்பில் உருவான ‘ஜெய்பீம்’ படத்தில் வன்னியருக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்று இருந்தன. அப்போதே எதிர்ப்பு கிளம்பியது.
அதன் பிறகு தற்போது தான் ஞானவேல் தனது 2வது படத்தை இயக்கி வருகிறார்.
எனவே *வன்னியர் பாய்காட் ரஜினிகாந்த்* ஹேஷ்டேக்குகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும் ரஜினிகாந்த் இதை சமாளித்து விடுவார் என்பது நமக்குத் தெரிந்த செய்திதான். அவர் பார்க்காத எதிர்ப்பு இல்லை..
இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் லைக்கா நிறுவன தமிழக சிஇஓ ஆக வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த பாமக. ஜி.கே.மணியின் மகன் ஜி கே எம் தமிழ் குமரன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே வன்னியர் சமுதாய எதிர்ப்பை லைக்கா நிறுவனம் சமாளித்து விடும் என நிச்சயமாக நம்பலாம்.
Thalaivar 170 expectation and opposition