அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது

அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Arivazhagan and Arun Vijayதமிழ் திரையுலகில் எப்போதுமே வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்தால், படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகும். அப்படியொரு வெற்றிக் கூட்டணியை மீண்டும் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள். ஆம், அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்தக் கூட்டணி மீது நம்பிக்கை வைத்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார் ‘ஆல் இன் ஆல் பிக்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா. ‘செக்கச்சிவந்த வானம்’, ‘தடம்’ ஆகிய படங்களின் வெற்றியால் சக்சஸ் நாயகனாக வலம் வரும் அருண் விஜய், இந்தப் படத்துக்காக தற்போது தயாராகி வருகிறார். இன்னும் ஒருசில நாட்களில் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கவுள்ளது. படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்கள் தேர்வில் தற்போது தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் இயக்குநர் அறிவழகன்.அருண் விஜய்யை வைத்து ‘குற்றம் 23’ என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய அறிவழகன், இம்முறை ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது. அறிவழகன் இயக்கத்தில் உருவான படங்களில் இது தான் பொருட்செலவில் அதிகம். சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்தப் படம் தொடர்பாக அறிவழகன், “‘குற்றம் 23’ படத்துக்குப் பிறகு மீண்டும் அருண் விஜய் சாரை இயக்கவிருப்பதில் மகிழ்ச்சி. தமிழ் திரையுலகில் இதுவரை வந்திராத புதுமையான ஒரு ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் கதை. எனது முந்தைய படங்களை விட இதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம். கண்டிப்பாக அது பேசப்படும். ரெஜினா நாயகியாக நடிக்கவுள்ளார். மீதமுள்ள நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

அறிவழகனின் நெருங்கிய நண்பராக ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார். இவர் ‘ஆர்யா 2’, ‘ஆரஞ்ச்’ உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் பணிபுரிந்தவர். தற்போது இசையமைப்பில் தனிமுத்திரை பதித்து வரும் சாம் சி.எஸ் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ‘குற்றம் 23’ படத்துக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த சக்தி வெங்கட்ராஜ் இதிலும் கலை இயக்குநராக ஒப்பந்தமாகியுள்ளார்.டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கி 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இந்தப் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

தேசிய விருது வாங்கிய படத்தை கையில் எடுத்த வெற்றி மாறன்

தேசிய விருது வாங்கிய படத்தை கையில் எடுத்த வெற்றி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baaram stills‘ஆடுகளம்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘வடசென்னை’ என்று தொடர் வெற்றிகளைக் கொடுத்ததுடன், தற்போது தனுஷ் நடிப்பில் வெளிவந்து அசுர வெற்றியுடன் ஓடிக்கொண்டிருக்கும் ‘அசுரன்’ படத்தைக் கொடுத்த இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, இந்த ஆண்டுக்கான தேசிய விருதை வென்ற ஒரே தமிழ்ப் படம் என்ற பெருமையைப் பெற்ற பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ படத்தை வெளியிடுகிறது.
இரண்டு முறை தேசிய விருதை வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இது குறித்து கூறியதாவது….
கிராப்புறங்களில் உள்ள தலைக்கூத்தல் என்ற உறுதியான நம்பிக்கையை பற்றி பேசும் படம்தான் ‘பாரம்’. உண்மையில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதை படமாக்க ஆரம்பித்தோம்.

இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருது ‘பாரம்’ படத்துக்கு கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்கள் கனவு எளிதில் நிறைவேறும். இதற்ககாக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அனைத்து வகையான படங்களையும், அவற்றை சொல்லக்கூடிய முறைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் மிக்கவர்களாக இருப்பதால், நான் தமிழ்ப்பட ரசிகர்களை பெரிதும் மதிக்கிறேன். எந்த வகைப் படமாக இருந்தாலும் சரி, அதில் நல்ல கதை இருக்கிறதா என்று மட்டும் பார்க்கக்கூடிய தமிழ் ரசிகர்கள் எந்த இயக்குநருக்கும் உகந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

வெற்றி மாறனுடன் நடந்த முதல் சந்திப்பிலேயே அவர் ‘பாரம்’ படத்தை வெளியட முன்வந்தபோது ஒரு கனவு நனவானதைப்போல்தான் இருந்தது. ஏனென்றால் வெற்றி மாறனை நான் பல ஆண்டுகளாக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பலமான கதைகள், பளீர் வசனங்கள், நேர்த்தியான திரைக்கதை, அற்புதமான நடிப்பு என்று பயணிக்கும் வெற்றி மாறனின் படங்கள் என் ரசனைக்கேற்ற படைப்புகளாகும். சர்வதேச உணர்வுகளுக்கு ஈடுகொடுப்பது வெற்றி மாறன் படங்கள் என்பது என் கருத்து.

வெற்றி மாறனின் ஆதரவு, அவர் கொடுத்த ஊக்கம், அவரது அறிவு மற்றும் ஆற்றலை எங்களுடன் தாராளமாக பகிர்ந்துகொண்ட விதம் ஆகியவற்றுக்காக நாங்கள் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்போம். இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பினும் அவரது தொலை நோக்குப் பார்வையில் ‘பாரம்’ திரையரங்க வெளியீடு எங்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி பேசும் ‘பாரம்’ படத்தில் நடித்திருக்கும் 85க்கும் மேற்பட்டவர்களில் பலரும் இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள். படமும் காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து ‘பாரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறார். தேசிய விருது வழங்கப்படத் துவக்கியதிலிருந்து, கடந்த 65ஆண்டுகளில் தமிழில் சிறந்த படத்துக்கான தேசிய விருதைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெறுகிறார் பிரியா கிருஷ்ணசாமி.

இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத்.

‘பாரம்’ திரைப்படத்தை எஸ்பி சினிமாஸ் விநியோகிக்கிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழகம் முழுவதும் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது

‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vetri‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் இன்று (06.12.2019) துவங்கியது.

படத்தைப் பற்றிய மற்ற விபரங்களை தயாரிப்பு நிறுவனம் பின்னர் அறிவிக்கும்.

தயாரிப்பு – பார்த்தசாரதி இயக்கம் – குரு ராமானுஜம்
வசனம் – சி.முருகேஷ் பாபு
புகைப்படம் – பாஸ்கர்
ஒளிப்பதிவு – எஸ்.ராமலிங்கம் படத்தொகுப்பு – ராஜா முகமது (பருத்தி வீரன் & சுப்ரமணியபுரம்)
கலை இயக்கம் – எஸ்.பத்மநாபன்
சண்டை பயிற்சி – சுதேஷ்
தயாரிப்பு உருவாக்கம் – அபிமன்னன் எம்.ஏ.
தயாரிப்பு நிறுவனம் – ஜெ.என். சினிமாஸ்

தனுசு ராசி நேயர்களே படத்தில் தயாரிப்பாளர் & தாலிக்கு வந்த சோதனை

தனுசு ராசி நேயர்களே படத்தில் தயாரிப்பாளர் & தாலிக்கு வந்த சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Controversial dialogue scenes in Dhanusu Raasi Neyargale movieஹரிஷ் கல்யாண், டிங்கான்கனா சூர்யவன்சி, ரெபா மோனிகா ஜான் மற்றும் யோகிபாபு நடித்துள்ள படம் தனுசு ராசி நேயர்களே.

நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கோகுலம் சிட்பண்டு நிறுவனர் கோகுலம் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில வசனங்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரையும் அதே சமயத்தில் மற்றொரு வசனத்தில் தாலியின் புண்ணியத்தையும் கெடுப்பதாக உள்ளது.

ஒரு காட்சியில் குடிபோதையில் நாயகன் நாயகி செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். அதன்பின்னர் ஹீரோ தன்னை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்.

ஆனால் ஹீரோயினோ தனக்கு லட்சியம் இருக்கிறது. நான் செவ்வாய் கிரகம் செல்ல வேண்டும். திரும்பி வரப்போவதில்லை. எனவே உன்னை திருமணம் செய்துக் கொள்ள முடியாது.

மேலும் தாலி என்பது நாய்க்கு கட்டப்படும் பெல்ட் போல. எனக்கு அந்த வாழ்க்கை செட்டாகாது. அதை கட்டிக்கொண்டு உன்னோடு வரமுடியாது என்கிறார்.

தமிழ் சினிமாவில் தாலி சென்டிமெண்ட்டில் எத்தனையோ படங்கள் ஓடியது. ஆனால் நாகரீகம் என்ற பெயரில் தாலியை நாய் பெல்ட்டுக்கு நிகராக பேசுவது தாய்மார்களின் மனதை புண்படுத்தும் வசனமாக மாறும்.

இந்த படத்திற்கு யோகிபாபுவின் கால்ஷீட் சரியாக கிடைக்கவில்லை. எனவே படத்தின் கலைஞர்களுடன் நடிக்காமல் அவரின் காட்சிகள் தனியாக படமாக்கப்பட்டுள்ளது.

அவரே படத்தின் ஹீரோ யார்? ஹீரோயின் யார்? என அடிக்கடி பேசிக் கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு பிரச்சினை எப்படி எல்லாம் உருவாகிறது என்பதையும் விளக்குகிறார்.

நான் சும்மா இந்த இடத்துக்கு வரல. பல வருசமாக கஷ்டப்பட்டேன். அதற்காக பலன் இப்போது கிடைத்துள்ளது என்கிறார்.

இறுதியாக க்ளைமாக்ஸில் கொடுத்த கால்ஷீட்டுக்கு பேசிட்டேன். என்ற டயலாக்கும் பேசுகிறார்.

என்ன இருந்தாலும் அவர் நிச்சயமாக சம்பளம் வாங்காமல் பேசியிருக்க மாட்டார். அப்படியிருக்கையில் ஏதோ கடமைக்காக செய்துவிட்டதை போல் பேசியிருக்கிறார்.

இது நிச்சயம் இந்த பட தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் மற்ற தயாரிப்பாளர்களையும் அவமானப்படுத்துவதாகவே உள்ளது.

மேலும் யோகிபாபு காட்சிகள் இல்லாமலே படம் சரியாக தான் செல்கின்றது. அப்படியிருக்கையில் இந்த வசனங்கள் தேவையா? என்பதே படம் பார்த்தவர்களின் கேள்வியாக உள்ளது.

Controversial dialogue scenes in Dhanusu Raasi Neyargale movie

ஒரே படத்தில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் & உலகநாயகன்

ஒரே படத்தில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் & உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lokesh kanagarajநடிகர் கமல் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதுதான் ரஜினி தன் சினிமா பயணத்தை தொடங்கினார்.

கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த். இதுதான் ரஜினிக்கு முதல் படம்.

ஆனால் அப்போதே கமல் சினிமாவில் உச்சத்தில் இருந்தார்.

இதன் பின்னர் மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது உள்ளிட்ட 10 படங்களில் இணைந்து நடித்தனர்.

அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிப்பதை விட்டு விட்டனர்.

தங்களுக்கென தனி தனி பாதையில் சென்றாலும் உலகமே வியக்கும் அளவுக்கு நட்புடன் பழகி வருகின்றனர்.

தற்போது சினிமாவில் கமல் 60 வருடங்களை கடநதுவிட ரஜினி 45 வருடங்களை நெருங்கி கொண்டிருக்கிறார்.

தற்போது இருவரும் அரசியல் களத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இணைந்து நடிக்கவில்லை. கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது-

தில்லு முள்ளு போல உலகநாயகன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பாரா? என்றுதானே கேட்கிறீர்கள்?

காத்திருப்போம் தலைவரே…

வீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “

வீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paramuகூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் ” புள்ளீங்கோ” என அழைக்கப்படும் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வாழ்க்கையில் தீடீர் புயல் போல் நடைபெறும் திகிலான சம்பவங்கள்
அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது ‘ இதன் உச்சகட்டம் என்ன ? என்பது தான் சக்சஸ் புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள ” ப ர மு ” என்றார் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய்.

பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.

மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர்.

இந்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வருகிறது. “பரமு

More Articles
Follows