தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினி நடிப்பில் உருவாக உள்ள ‘தலைவர் 170’ படத்தில் இந்தியாவின் மிக பிரபல நட்சத்திரங்கள் இணைந்து வருவது திரையுலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
கடந்த ஓரிரு தினங்களில் ரஜினியுடன் நடிக்கும் கலைஞர்களை லைக்கா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
ஞானவேல் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் தெலுங்கு நடிகர் ரானா, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர்.
மேலும் நடிகைகள் மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் முதன்முறையாக ரஜினியுடன் இணைகின்றனர்.
இந்த நிலையில் ஹாலிவுட் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அமிதாப் பச்சனின் பல படங்களில் தமிழில் ரீமேக் செய்த ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
மேலும் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஹம் என்ற படத்தில் ரஜினிகாந்த் அமிதாப்பச்சன் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 32 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி அமிதாப்பச்சன் இணைந்து நடிக்க உள்ளநீர் என்பது குறிப்பிடத்தக்கது.
Amitabh Bachchan on board for Thalaivar170 with Rajini