மீண்டும் சசிகுமாரை மிரட்டும் வில்லனாக தயாரிப்பாளர் இந்தர் குமார்

sasi kumar and inder kumarஅருண் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் “குற்றம் 23″.

இந்த படத்தை ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர் குமார் தயாரித்திருந்தார்.

இவர் தற்போது மீண்டும் அருண் விஜய்யை வைத்து ‘தடம்’ படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

இதனை தொடர்ந்து சசிகுமார் நடிப்பில், எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் புதிய படத்தை இந்தர் குமார் தயாரிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளாராம்.

இவர் சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post