ஜெயலலிதா பிறந்தநாளில் ‘பார்டர்’ தாண்டும் அருண்விஜய் – அறிவழகன்

ஜெயலலிதா பிறந்தநாளில் ‘பார்டர்’ தாண்டும் அருண்விஜய் – அறிவழகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குற்றம் 23’ மற்றும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ ஆகிய படங்களுக்கு பிறகு அருண் விஜய் – அறிவழகன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘பார்டர்’.

ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதன் வெளியீட்டு உரிமையை பிரபு திலக் கைப்பற்றி இருந்தார்.

பார்டர்

சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இதன் சாட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி பெற்றுள்ளது.

இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2022ல் பலமுறை அறிவிக்கப்பட்டது. ஆனாலும் தள்ளிக் கொண்டே போனது.

இந்த நிலையில் ‘பார்டர்’ படம் 2023 பிப்ரவரி 24ல் ரிலீசாகும் என அறிவித்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

மேலும் இந்த அறிவிப்புடன் சேலம் கோவை உள்ளிட்ட மாவட்டங்களின் விநியோக உரிமையை கிரீன் கலர் கிரியேசன்ஸ் நிறுவனம் எனவும் அறிவித்துள்ளனர்.

பிப்ரவரி 24 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்டர்

Arun Vijay s Borrder release date is here

தனுஷ் பட இயக்குனருக்கு திருமணம் … கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு

தனுஷ் பட இயக்குனருக்கு திருமணம் … கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல டோலிவுட் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கு இன்று ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னணி ஹீரோ நிதின், அவரது மனைவி ஷாலினி மற்றும் இயக்குனர் வெங்கி குடுமுலா ஆகியோருடன் பிஸியான நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார். இந்த ஜோடி சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்கள் வைரலாக பரவியது.

வெங்கி அட்லூரி தனது தமிழ் முதல் திரைப்படமான ‘வாத்தி’ பிப்ரவரி 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்களில் தமிழிலும் பிரபலமான ஆளுமையாக மாற உள்ளார்.

Dhanush’s new movie director gets married – Pic with Keerthy Suresh go viral

‘இந்தியன் 2’ படப்பிடிப்பிற்கு மாஸ்ஸாக வந்த கமல்ஹாசன்…!

‘இந்தியன் 2’ படப்பிடிப்பிற்கு மாஸ்ஸாக வந்த கமல்ஹாசன்…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன் 2’.

இந்தப் படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இயக்குனர் ஷங்கர் ஆந்திராவின் காந்திகோட்டா கிராமத்தில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

கமல்ஹாசன் சமீபத்தில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு செட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து தரையிறங்கினார்.

கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தை முடித்த பிறகு இயக்குனர் எச் வினோத்துடன் தனது அடுத்த படத்திற்காக கைகோர்க்கிறார்.

கமல்ஹாசன்

Kamal Haasan lands on the sets of ‘Indian 2’ in a helicopter

‘பையா 2’ படத்தை கையில் எடுக்கும் லிங்குசாமி . ஹீரோ, ஹீரோயின் இவர்களா?

‘பையா 2’ படத்தை கையில் எடுக்கும் லிங்குசாமி . ஹீரோ, ஹீரோயின் இவர்களா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பையா’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க லிங்குசாமி முடிவு செய்துள்ளதாகவும், ஸ்கிரிப்டை தயார் செய்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

பையா முதல் பாகத்தில் கார்த்தி மற்றும் தமன்னா ஆகியோர் ஜோடியாக இருந்தனர். யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசை பரவலாக பேசப்பட்டது .

ஆனால் இதன் தொடர்ச்சியான பையா 2 படத்தில் ஆர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும், மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது .

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Lingusamy to make ‘Paiyaa 2’ replacing hero and heroine?

‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் எமி ஜாக்சனின் தோற்றத்தை வெளியிட படக்குழு…!

‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் எமி ஜாக்சனின் தோற்றத்தை வெளியிட படக்குழு…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘யானை’ படத்திற்குப் பிறகு நடிகர் அருண் விஜய், இயக்குநர் விஜய்யுடன் இணைந்து ‘அச்சம் என்பது இல்லை’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் நிமிஷாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜனவரி 31 அன்று படத்தில் இருந்து நடிகரின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர்.

நேற்று எமி ஜாக்சனின் பிறந்தநாளை கொண்டாடிய படக்குழுவினர் படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளியிட்டனர்.

மேலும், எமி ஜாக்சன் இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மீண்டும் வரவுள்ளார்.

எமி ஜாக்சன்

Makers reveal Amy Jackson’s look from ‘Achcham Enbathu Illayae’

2 தோல்விக்கு பிறகு நம்பிக்கையுடன் விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நிறுவனம்

2 தோல்விக்கு பிறகு நம்பிக்கையுடன் விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பேஷன் ஸ்டுடியோஸ் இந்த வருடம் 2023-ல் பல படங்களுக்கான திட்டங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், தற்போது அதன் புதிய புராஜெக்ட் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘புரொடக்‌ஷன் நம்பர் 20’ எனத் தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இதில் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ‘குரங்கு பொம்மை’ படப்புகழ் நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய பூஜையுடன் தொடங்கியது. நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

சில முன்னணி நடிகைகளிடம் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகன் போலவே எதிர்கதாநாயகன் கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால் அதில் முக்கிய நடிகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

கதாநாயகி மற்றும் எதிர்கதாநாயகன் யார் என்பது குறித்து தயாரிப்புத் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள்.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் முழுக்க முழுக்க க்ரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்‌ஷன் ட்ராமாவாக உருவாக உள்ளது.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

கன்னடத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான பி. அஜ்னீஷ் லோக்நாத் ‘காந்தாரா’ பட வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இவர் நித்திலனின் ‘குரங்கு பொம்மை’ படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபிலோமின் ராஜ் (மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், தளபதி 67) இந்தப் படத்தின் படத்தொகுப்பாளர். ’லவ் டுடே’ மற்றும் ‘விலங்கு’ இணையத்தொடர் மூலம் விஷூவல் மேஜிக் கொடுத்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘மதராசப்பட்டினம்’ மற்றும் பல படங்களில் அற்புதமான செட் வொர்க் செய்த செல்வகுமார் கலை இயக்குநராக இதில் பணியாற்றுகிறார்.

பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி. ஜெயராம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

‘சீதக்காதி’ மற்றும் ‘அனபெல் சேதுபதி’ ஆகிய படங்களுக்குப் பிறகு 3வது முறையாக இந்தப் படம் மூலம் விஜய்சேதுபதியுடன் இணைகின்றனர்.

சீதக்காதி’ மற்றும் ‘அனபெல் சேதுபதி’ ஆகிய இரு படங்களும் தோல்வியை தழுவிய நிலையில் நம்பிக்கையுடன் வெற்றி கொடுக்க இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

விஜய்சேதுபதி

2 Famous company associated with Vijay Sethupathi after failure

More Articles
Follows