தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘தலைவர் 170’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் ரஜினிகாந்த். இதன் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட உள்ள நிலையில் ரஜினிகாந்த் அங்கு சென்றுள்ளார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை ஞானவேல் இயக்க அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அக்டோபர் 4 தேதி ரஜினியின் லுக்கை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் ரஜினியின் ஹேர் ஸ்டைல் வித்தியாசமாக உள்ளது.
பொதுவாகவே 1980 90 ஆண்டுகளில் ரஜினியின் ஹேர் ஸ்டைலை பின்பற்றி பல ரசிகர்கள் தங்கள் சிகை அலங்காரத்தை மாற்றி அமைத்து இருந்தனர்.
தற்போது இந்த பட பூஜை புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி, மஞ்சு & இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் உள்ளனர். இவர்களுடன் பிரபல டிவி நடிகர் ரக்சனும் பங்கேற்றுள்ளார்.
TV Actor Rakshan joins with Thalaivar 170 team