தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் அடுத்தது வெளியாக உள்ள படம் ‘லால் சலாம்’. இந்த படம் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகி இருந்தது.
தற்போது ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தை ‘ஜெய் பீம்’ படப்புகழ் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படத்தில் மூலம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் அமிதாப்பச்சன்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே ஹிந்தியில் இணைந்து நடித்திருந்தாலும் நேரடி தமிழ் படத்தில் அமிதாப்பச்சன் நடிப்பது இதுவே முதன்முறையாகும்.
மேலும் ராணா ரகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் நாளை டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு ‘தலைவர் 170’ படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது.
இது ரஜினி ரசிகர்களுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாக கருதப்படுகிறது.
Thalaivar170 Title with Birthday Special Teaser Tomorrow at 5PM