தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜெயிலர்’ படத்தை தொடர்ந்து ‘தலைவர் 170’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த படத்தை ‘ஜெய் பீம்’ புகழ் ஞானவேல் இயக்க லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ரஜினியுடன் இந்தியாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
அபிதாப்பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் ரஜினியுடன் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை ரித்திகா சிங்குக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…
“இது பார்க்க ஓநாயுடன் சண்டைபோட்டது போல இருக்கிறது? கண்ணாடி இருக்கிறது. கவனமாக இருக்கும்படி என்னை எச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். பரவாயில்லை. இது நடக்கூடியது தான்.
சில நேரங்களில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாது. அதனால் ஏற்பட்ட விபத்து இது. ஆனால் காயம் மிகவும் ஆழமாக இருப்பதால் வலிக்கிறது.
சிகிச்சைக்காக சூட்டிங் செட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்கிறேன். இது விரைவில் சரியாகவிடும் என நம்புகிறேன்”.
என பதிவிட்டுள்ளார் ரித்திகா சிங்.
Actress Ritika Singh met accident at Thalaivar 170 shooting spot