தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ படத்தில் நடித்துவருகிறார்.
‘ஜெய்பீம்’ பட இயக்குனர் ஞானவேல் இயக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
இதில் ரஜினியுடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில், ‘தலைவர் 170’ படத்துக்காக அமிதாப் பச்சன் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதற்காக அவருக்கு ரூ.12 முதல் ரூ.15 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Will Amitabh Bachchan be paid so many crores to act with Rajini’s thalaivar 170