தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி.. பேர கேட்டாலே பாக்ஸ் ஆபிஸே ச்சும்மா அதிருமுல்ல… என்கிற அளவுக்கு வசூல் மழை பொழிந்து வருகிறது.
இப்படம் வெளியாகி ஆறு நாட்களை கடந்துள்ள நிலையில் இப்படத்தின் வசூல் என்ன? என்பதை தயாரிப்பாளர் தாணுவே உறுதி செய்துள்ளார்.
கபாலி படத்தின் சக்ஸஸ் தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.
ரஜினி, ராதிகா ஆப்தே மற்றும் தன்ஷிகா தவிர மற்ற நட்சத்திரங்கள் அனைவரும் அங்கே ஆஜர்.
இப்படம் உலகம் முழுவதும் 6 நாட்களில் ரூ 320 கோடி வரை வசூல் செய்துள்ளதாக இச்சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் சென்னையில் மட்டும் 7 நாட்களில் ரூ. 7 கோடியை எட்டியுள்ளதாம்.
இப்படத்தின் வசூலை வேறு படங்கள் நெருங்குமா? முடியுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒருவேளை அடுத்த ரஜினி படம் வரும்போது சாத்தியமாகலாம்.