தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கபாலி படத்தை முதல் நாள் முதல் காட்சியை தியேட்டர்களில் பார்த்துவிட கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக கபாலி படத்தை ஹோட்டல்களிலும் ரிலீஸ் செய்கின்றனர்.
பெங்களூர், எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள க்ரவுன் பிளாஸா மற்றும் இலகங்காவிலுள்ள ராயல் ஆர்ச்ஸிட், குமரக்ருபா சாலையிலுள்ள லலித் அசோக் உள்ளிட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஒரு நாளைக்கு 4-5 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாகவும் முதல் 3 நாட்களுக்கு மட்டும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1,300 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
இதற்காக குறிப்பிட்ட சில துறைகளிடம் இருந்து அனுமதி பெற விநியோகஸ்தர்கள் முயற்சித்து வருகின்றனர்.