குழந்தைகளை அலறவிடும் ‘அரண்மனை-4’.: குலுங்கி குலுக்கி சிரிக்கும் குடும்பங்கள்

குழந்தைகளை அலறவிடும் ‘அரண்மனை-4’.: குலுங்கி குலுக்கி சிரிக்கும் குடும்பங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குழந்தைகளை அலறவிடும் ‘அரண்மனை-4’.: குலுங்கி குலுக்கி சிரிக்கும் குடும்பங்கள்

கடந்த வாரம் மே மூன்றாம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது அரண்மனை 4.

சுந்தர் சி இயக்கிய இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு கோவை சரளா சந்தோஷ் பிரதாப், விடிவி கணேஷ், உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சுந்தர் சி நடித்துள்ளார்.

இந்த படம் வெளியான நாள் முதலே குழந்தைகளையும் குடும்பங்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் 4 நாள் இந்த படம் நான்கு நாட்களில் ரூபாய் 23 கோடியை இந்த படம் வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அளவில் ₹ 20 கோடியையும் உலக அளவில் மொத்தம் 23 கோடியை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

குழந்தைகளை கவரும் வகையில் கிராபிக்ஸ் காட்சிகளும் குழந்தைகளுக்கான காட்சிகளும் அதிகம் உள்ளன.. இதை பார்க்கும் குழந்தைகள் குஷியில் மகிழ்வதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைவேளைக்கு பின்னர் காமெடியில் படம் களைகட்டி இருப்பதால் குடும்பங்கள் ரசித்து மகிழ்கின்றன… மேலும் கிளைமாக்ஸ் அம்மன் பாடலில் குஷ்பூ சிம்ரனும் இணைந்து ஆடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது எனலாம்..

ஏப்ரல் இறுதிவரை கிரிக்கெட் மேட்ச் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் காணப்பட்டதால் தியேட்டரில் கூட்டம் பெரிய அளவில் இல்லை.. ஆனால் தற்போது கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் தியேட்டரில் குடும்பங்களின் கூட்டம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Aranmanai 4 movie getting good response from family audience

ரஞ்சித் – மாரி மீண்டும் கூட்டணி..; துருவ் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’

ரஞ்சித் – மாரி மீண்டும் கூட்டணி..; துருவ் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்க, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உருவாகும் ‘பைசன் காளமாடன்’ திரைப்படம் இனிதே துவங்கியது !!*

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, தமிழ் திரையுலகில் பல புதிய திரைப்படங்களை வழங்கவுள்ளன. இந்நிலையில் தற்போது தங்களின் முதல் திரைப்படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இளம் நட்சத்திர நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில், முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘பைசன் காளமாடன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று மே 6ஆம் தேதி தொடங்குகிறது. பரியேறும் பெருமாள் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்திற்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துடன் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து, அமைதிக்கான பாதையைத் தேடிய, ஒரு போர்வீரனின் கதையை, நம் கண்களுக்கு விருந்தாகக் கொண்டுவருகிறது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் மற்றும் அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.

இசையமைப்பாளர் நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார், எழில் அரசு K ஒளிப்பதிவு செய்கிறார், எடிட்டிங் சக்திகுமார், கலை இயக்கம் மூத்த கலை இயக்குநர் குமார் கங்கப்பன், ஸ்டண்ட் திலீப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம் ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் வழங்கும், “பைசன் காளமாடன்”, அற்புதமான படைப்பாளியான மாரி செல்வராஜின் இயக்கத்தில், மனித ஆத்மாவின் வெற்றி வேட்கையைப் பேசும் கலைப்படைப்பாக, மிக உன்னதமான அனுபவத்தை வழங்கவுள்ளது.

Dhruv Vikram

‘Bison’ is ready to roar!🦬

Applause Entertainment and Neelam Studios have joined forces to bring to you ‘Bison Kaalamaadan’! With Mari Selvaraj steering the ship and Dhruv Vikram like you have never seen him before. Brace yourself for an unforgettable cinematic experience!

#BisonKaalamaadan #BisonKaalamaadanFilmingNow

@ApplauseSocial @NeelamStudios_ @nairsameer @deepaksegal @mari_selvaraj @beemji @Tisaditi
#DhruvVikram @anupamahere @LalDirector @PasupathyMasi @rajisha_vijayan @KalaiActor
@gobeatroute @aimsathishpro @pro_guna @proyuvraaj

Dhruv Vikram next titled Bison Kaalamadan

பாட்ஷா – மாணிக்கம் – தாவூத்.: ஜாபர் குற்றத்துடன் தொடர்பா.? இல்லைடா வெண்ணைகளா.; அமீர் ஆவேசம்

பாட்ஷா – மாணிக்கம் – தாவூத்.: ஜாபர் குற்றத்துடன் தொடர்பா.? இல்லைடா வெண்ணைகளா.; அமீர் ஆவேசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாட்ஷா – மாணிக்கம் – தாவூத்.: ஜாபர் குற்றத்துடன் தொடர்பா.? இல்லைடா வெண்ணைகளா.; அமீர் ஆவேசம்

உயிர் தமிழுக்கு முன் வெளியீட்டு நிகழ்வும்… பத்திரிகையாளர் சந்திப்பும்…

*“குற்றப்பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை” ; தெளிவுபடுத்திய அமீர்*

*“ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி செல்லக்கூடாது என நினைப்பவர் அமீர்” ; இயக்குநர் சரவண சக்தி*

*”மதுரையில் பாட்ஷா.. சென்னையில் மாணிக்கம்..; அமீர் குறித்து நடிகர் பொன்வண்ணன்*

*“மீண்டும் ஒரு அமைதிப்படை’ ; உயிர் தமிழுக்கு படம் குறித்து கவிஞர் சிநேகன் *

*”ரஜினிக்கு ஏற்பட்ட மாற்றம் போல அமீருக்கும் நிகழும்” ; உயிர் தமிழுக்கு விழாவில் கரு. பழனியப்பன் உறுதி*

*”அமீரால் தயாரிப்பாளரானவரே உயிர் தமிழுக்கு படத்தை வெளியிட விடாமல் தடுத்தார்” ; இயக்குநர் ஆதம்பாவா*

*”அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள்” ; உயிர் தமிழுக்கு விழாவில் இயக்குநர் ஆதம்பாவா வேதனை*

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா.

அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது.. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது,…

“அமீர் அண்ணன் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நானும் இயக்குனர் ஆதம்பாவாவும் அவரிடம் கதை சொல்வதற்காக சென்றோம். ஆனால் அன்று அவரை சந்திக்கவே முடியவில்லை. இன்று அவரை வைத்து படம் இயக்கும் அளவிற்கு நண்பர் ஆதம்பாவா உயர்ந்திருக்கிறார். ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி சென்று விடக்கூடாது என நினைக்கிற ஒரு மனிதர் தான் அமீர் அண்ணன்.. அவரது சுய ஒழுக்கத்தை பார்த்து நான் பல விஷயங்களை திருத்திக் கொண்டேன்” என்று கூறினார்.

நாயகி சாந்தினி ஸ்ரீதரன் பேசும்போது..

“இந்த படத்தின் ஹீரோ அமீர், இயக்குனர் ஆதம்பாவா உள்ளிட்ட அனைவருடனும் படப்பிடிப்பு தளத்தில் செம ஜாலியாக இருந்தது. ஒரு குடும்பமாகத்தான் இந்த படக்குழுவை நான் உணர்ந்தேன். நிச்சயமாக இந்த படம் உங்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

நடிகர் இமான் அண்ணாச்சி பேசும்போது…

“நகைச்சுவை கலந்த ஒரு காதல் கதையை இயக்குனர் ஆதம்பாவா இதில் கொடுத்துள்ளார். படத்தில் அமீருடன் கூடவே வரும் கதாபாத்திரத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என இயக்குனர் ஆதம்பாவா கூறினார். ஆனாலும் பருத்திவீரன் படத்தில் ஒரு காட்சி சரியாக வரவில்லை என்றால் பல டேக்குகள் எடுப்பார் என கேள்விபபட்டுள்ளேன்.

என்னுடன் அவர் சரியாக பழகுவாரா என்கிற ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் ஒரே நாளில் என் எண்ணத்தை மாற்றிவிட்டார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை புரட்சித்தலைவர் பற்றிய பாடல் இனி அவருக்கான தேசிய கீதம் ஆக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. படம் முடிவதற்குள் கதாநாயகி சாந்தினி தமிழில் நன்றாக பேசிவிட்டால் ஒரு மோதிரம் தருவதாக கூறி இருந்தேன். இப்போது நன்றாக பேசியுள்ளார். படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த பாக்கியை செட்டில் பண்ணி விடுகிறேன்” என்றார்

நடிகர் கஞ்சா கருப்பு பேசும்போது…

“அமீர் அண்ணன் படங்களில் எனக்கு நல்ல வேடங்கள் கொடுத்து நடிக்க வைத்தார். வாழவந்தான் என எனக்கு ஒரு பட்டம் கொடுத்து நல்லா வாழ்ந்துக்கடா என்று கூறினார். அவருக்கு நான் புரட்சி வேந்தன் என்கிற ஒரு பட்டத்தை இந்த இடத்தில் கொடுக்கிறேன்” என்றார்.

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் பேசும்போது…

“அமீர் அண்ணன் எனது மானசீக குருநாதர். வாழ்க்கையில் ஏதாவது ஒரு இக்கட்டான பிரச்சனை என்றால் கூட துணையாக வந்து நில்லுங்கள் என அழைக்கும் முதல் நபர் என்றால் அது அமீர் அண்ணன் தான். அப்படி வெளியே தெரியாத பல தருணங்களில் அவரிடம் சென்று நின்று இருக்கிறேன்.. எந்தவித நிபந்தனையும் இன்றி அன்புக்காக மட்டுமே அவரும் வருவார். என்னுடைய பல பட விழாக்களில் கடைசி நேரத்தில் அழைத்தால் கூட தனது வேலையை ஒத்தி வைத்து விட்டு தவறாமல் வந்து விடுவார். அதனால் இந்த படத்தின் விழாவிற்கு என்னை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வரவேண்டும் என நான் முடிவு செய்து வைத்திருந்தேன்.

ஆனால் என்னை மறக்காமல் அவரை அழைத்து விட்டார். உடனே வருகிறேன் எனக் கூறிவிட்டேன். இதுபோன்ற ஒரு சூழலில் அவர் அருகில் என்னை போன்றவர்கள் இருக்க வேண்டியதை ஒரு கடமையாக நினைக்கிறேன். அவருடன் இருந்த சில பேர் அவரை விட்டு இப்போது சென்று விட்டார்கள் என வெளியில் சில பேர் கூறி வருகிறார்கள். ஆனால் யாரும் அவரை விட்டு எங்கேயும் போகவில்லை. அவருடனேயேதான் இருக்கிறோம்.

இந்த படத்தின் டிரைலர், பாடல்களை பார்க்கும்போது அமீர் சாருக்கு இது இரண்டாவது ரவுண்டு ஆரம்பிப்பது போன்று எனக்கு தோன்றுகிறது.

இந்த படத்தைத் தொடர்ந்து பி அண்ட் சி சென்டர்களுக்கான கதைகள் அமீர் அண்ணனை நோக்கி நிறைய வரும். அதை தவிர்க்காமல் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் பல ஹீரோக்கள் தற்போது பான் இந்தியாவை நோக்கி நகர்ந்து விட்டார்கள். மண் சார்ந்த கதைகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள். அமீர் அண்ணன் அப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும்” என்று பேசினார்.

நடிகர் பொன்வண்ணன் பேசும்போது…

“சினிமாவுக்கு வருவதற்கு முன் நல்லவர்களாக இருந்து இங்கே வந்து பாதை மாறியவர்கள் பலர் உண்டு. ஆனால் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு எல்லாத் தவறுகளையும் பண்ணியவர்தான் அமீர்.

ஆனால் சினிமா துறைக்குல நுழைந்த போது மிகச்சிறந்த ஆன்மீகவாதியாகவும் தனிமனித ஒழுக்கம் கொண்டவராகவும் அப்படியே மாறிவிட்டார். மதுரையில் ஒரு வாழ்க்கை, மதுரைக்குப் பிறகு ஒரு வாழ்க்கை என ஒரு பாட்ஷா போல அமீர் எப்போதும் ஒரு நேர்மையுடன் தான் பயணிக்க விரும்பி இருக்கிறார்.

பணத்திற்காக மற்றும் வேறு எதற்காகவும் அவர் தனது தனிமனித ஒழுக்கத்தை விட்டுக் கொடுத்தது இல்லை. அதனால் தான் காலம் இன்று அவருக்கு ஒரு செக் வைக்கும்போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவர் மீது கூறப்படும் எந்த ஒரு தவறுக்கும் அவர் நிச்சயம் உடந்தையாக இருந்திருக்க மாட்டார். இப்படி ஒரு எதிர்பாராத தாக்குதல் வரும்போது நம்மில் பலர் நிலை குலைந்து போய் விடுவோம்.

ஆனால் அவர் மிக நிதானமாக தன் மீது உள்ள மிகப்பெரிய நம்பிக்கையோடு அதை கடந்து சென்ற விதம் பிரமிக்க வைக்கிறது. ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தக் கதையில் எனது கதாபாத்திரமும் இருந்தது. நானும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தேன். ஆனால் கிராமத்திலிருந்து நகரத்திற்கு என கதை மிகப்பெரிய அளவில் மாற்றம் அடைந்தபோது எங்களது கதாபாத்திரங்கள் அதிலிருந்து விடுபட்டு விட்டன. ஆனால் ஆதம்பாவா ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் மிகப்பெரிய போராட்டத்திற்கு இடையில் இந்த படத்தை முழுமையான படமாக உருவாக்கியுள்ளார்” என்று கூறினார்.

கவிஞர் சினேகன் பேசும்போது…

“இந்த படம் முடிந்த பிறகு தான் இந்த படத்திற்குள்ளே நான் வந்தேன். இந்த படத்திற்கு புரமோஷன் பாடல் ஒன்றை தயார் செய்ய வேண்டும் என ஆதம்பாவா இந்த படத்தின் காட்சிகள் பலவற்றை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபோது மீண்டும் ஒரு அமைதிப்படை படம் மாதிரி இது அமைந்திருக்கிறது என தோன்றியது.

அமைதிப்படை-க்குப் பிறகு ஒரு அரசியல் நக்கல் கலந்த படம் வரவில்லையே என்கிற குறையை இந்த உயிர் தமிழுக்கு போக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிகப்படியான படைப்புகளை கொடுக்காவிட்டாலும் ஆளுமையான படைப்புகளை கொடுத்து அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார் அமீர். சத்யராஜ் சொன்னது போல சொல்ல வேண்டும் என்றால் ‘பாண்டியர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ’ என்பது போல நடித்துள்ளார் அமீர். நிரபராதியாக இருந்து விட்டால் எங்கேயுமே அச்சப்பட தேவையில்லை.

ஓடி ஒளிய வேண்டிய தேவை இல்லை. ஒரு மனிதன் அமைதியாக இருப்பதனாலேயே என்ன வேண்டுமானாலும் இந்த உலகம் பேசுமா என்கிற பெரிய வருத்தம் இருக்கிறது. அமீரும் ஆதம்பாவாவும் இந்த படத்தில் துணிந்து இருக்கிறார்கள். நிச்சயம் வெல்வார்கள்” என்று கூறினார்.

இயக்குநர் ஆதம்பாவா பேசும்போது…

“என்னை உயிர் தமிழுக்கு படம் மூலம் இயக்குநராக்கி அழகு பார்த்த எனது குரு, மக்கள் போராளி அமீர் சாருக்கு நன்றி. அவருடைய மௌனம் பேசியதே பட இசை வெளியீட்டு விழா தான் எனது சினிமா வாழ்க்கையின் முதல் என்ட்ரி. எனக்கு விவரம் தெரிந்து அவரை நாற்பது வருடங்களாக எனக்கு தெரியும். நான் நான் சினிமாவில் உதவி இயக்குநராக நுழைய முடிவெடுத்தபோது எங்களது உறவினர் மூலமாக இயக்குநர் பாலாவிடம் சேர்த்து விட சொன்னேன். பாலாவும் என்னை சென்னைக்கு வரச் சொல்லிவிட்டார்.

காரை எடுத்துக் கொண்டு சென்னைக்கு வந்த உதவி இயக்குநர் நானாகத்தான் இருக்கும். அண்ணா நகரில் உள்ள பாலாவின் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன்.. அவர் மாடியில் இருந்தாலும் பல மணி நேரம் கீழே காத்திருந்தேன். அப்போது நான் கடவுள் பட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதில் முதலில் பேசப்பட்ட அந்த மிகப்பெரிய ஹீரோ அந்த சமயத்தில் அங்கே வந்தார். ஆனால் அங்கே சாப்பிட சொல்லாமல் கூட பல மணி நேர காத்திருப்பு ஏற்பட்டதால் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். ஆனால் பாலா எனக்கு வைத்த பரீட்சை அது என்று உறவினர் கூறினாலும் பாலாவிடம் வேலை பார்க்கும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு அமீரிடம் சேர்த்து விடுமாறு உறவினரிடம் கூறினேன்.

அந்த சமயத்தில் பருத்திவீரன் படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. நான் அமீரை பார்க்க சென்றதும் அவர் எனக்காக காத்திருப்பார், நான் வந்ததுமே பருத்திவீரன் ஸ்கிரிப்ட்டை கொடுத்து படித்துவிட்டு வா என்று கூறி மதியம் என்னுடன் டிஸ்கஷன் செய்வார் என்கிற நினைப்பில் சென்றேன். ஆனால் அமீரும் என்னை வரச் சொல்லிவிட்டு பல மணி நேரம் காக்க வைத்தார். அதன் பிறகு வெளியே வந்தவர் என்னை பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் சென்று விட்டார். இந்த இரண்டு இடங்களிலும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் நானே தனியாக ஒரு அலுவலகத்தை துவங்கினேன்.

அதன் பிறகு இயக்குனர் சரவண சக்தியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது என்பதை இங்கிருந்து கற்றுக் கொண்டேன். ஆனாலும் இந்த படம் இவ்வளவு நேர்த்தியாக வந்ததற்கு கூடவே இருந்து வழி நடத்திய அமீர் சார் தான் காரணம். இன்று கூட இந்த படத்தை பார்த்த கதாநாயகி சாந்தினி இப்படி ஒரு படத்திலா நான் நடித்தேன் என ஆச்சரியப்பட்டார். அந்த அளவிற்கு இந்த படத்தை எடுத்து முடித்து ரிலீசுக்கு கொண்டு வந்து விட்டோம்.

ஆனால் இந்த சமயத்தில் மதுரையில் பாஷாவாக சென்னையில் மாணிக்கமாக இருந்த அமீரை இப்போது தாவூத் இப்ராஹீமாக மாற்றி விட்டார்கள். அதனால் இந்த படத்தின் வியாபாரமே பாதிக்கப்பட்டது. அமீரால் உருவாக்கப்பட்ட ஒரு தயாரிப்பாளரே இந்த படத்தின் ரிலீஸை எவ்வளவு தடுக்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை பார்த்தார். ஆனால் என்னிடம் நன்றாக தான் பேசுவார். அவர் இந்த படத்தை பற்றி பேசிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. ஆனால் காலம் தான் அவருக்கு பதில் சொல்லும்.

தமிழ் சமூகத்திற்காக சிறைக்கு சென்றவர் அண்ணன் அமீர். அவருடன் கூடவே சிறைக்கு சென்ற சீமான் இன்று ஒரு கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் சினிமா மீது இருக்கும் காதலால் இங்கேயே இருந்து கொண்டு பத்து வருடம் அந்த வழக்குக்காகவே அலைந்தார். அவரை விடுதலை செய்த நீதிபதியே இதற்காக நீங்கள் பயந்து விட வேண்டாம், தொடர்ந்து மக்களுக்காக குரல் கொடுங்கள் என்று நற்சான்றிதழ் கொடுத்தார். தமிழக மக்களின் இதயங்களில் இருக்கிறார் அமீர். மக்கள் போராளி அமீர் என்கிற ஒரு புத்தகமே எழுதிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அது வெளியாக இருக்கிறது.

மக்களுக்கான எல்லா போராட்டங்களிலும் எப்போதும் முன்னால் நின்றிருக்கும் இவருக்கு இந்த மக்கள் போராளி பட்டத்தை கொடுக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கொடுப்பது ? அரசியல் நையாண்டி பின்னணியில் இழையோடினாலும் முழுக்க காதல் படம் தான் இது. சிவகார்த்திகேயனுக்கு டப் கொடுத்திருக்கிறார் அமீர் அண்ணன். அவர் அடுத்தடுத்து எந்த மாதிரி கதைகளை படமாக்க போகிறார் என்பது எனக்கு தெரியும். அவரை வேலை செய்ய விடுங்கள்.. மக்களுக்கு பயனுள்ள திரைப்படங்கள் வரும்..

கதாநாயகி சாந்தினி தயாரிப்பாளருக்கு எந்த வித கஷ்டமும் கொடுக்காத ஒரு நடிகை.. மன்னன் விஜயசாந்தி, சவாலே சமாளி ஜெயலலிதா போல இதில் அமீருக்கு இணையாக காதலியின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா அவரை பயன்படுத்தி கொள்ளும் என நினைக்கிறேன். இந்த படத்தில் படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இமான் அண்ணாச்சிக்கு இதில் ஃபுல் மீல்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இனி பல படங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வரும். கஞ்சா கருப்புவும் பல காட்சிகளில் காமெடியில் பட்டையை கிளப்பி இருக்கிறார். பல பிரச்சினைகள் காரணமாக இந்த படத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை நீங்கள் தான் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசும்போது, “இயக்குநர் ஆதம் பாவாவின் பேச்சு எப்படி சிரிக்க சிரிக்க இருந்ததோ அதேபோலத்தான் இந்த படமும் இருக்கும். நான் சினிமாவிற்குள் வந்த காலகட்டத்தில் தன்னுடைய இஸ்லாமிய பெயரை மறைக்காமல் அதே பெயரில் படம் இயக்கிய அமீரை பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது. இரவு நேரத்தில் யாரோ ஒருவர் குரல் தழும்ப பேசினாலே அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு ஏதோ பிரச்சனை, தான் அவருடன் சென்று நிற்க வேண்டும் என கிளம்பி வந்துவிடுவார் அமீர். அவரை பார்த்து தான் இப்போதும் நான் அதை பின்பற்றுகிறேன். இந்த மேடையில் எஸ்.பி ஜனநாதன் இருந்தால் நன்றாக இருந்திருக்கும். எங்கள் மூவருக்கு எப்போதுமே எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்ததில்லை.

தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் கதையில் தம்பிக்கு எந்த ஊரு படத்தில் ரஜினிகாந்த் நடித்த போது இந்த படம் நமக்கு செட் ஆகுமா என்கிற சந்தேகம் அவருக்கு இருந்தது. ஒரு கட்டத்தில் அதை தயாரிப்பாளரிடமும் கேட்டு விட்டார். ஆனால் பஞ்ச அருணாசலம் இந்த படம் தோல்வியடைந்தால் எனக்குத்தான் நட்டம்.. உனக்கு என்ன பிரச்சனை..? ஆனால் இந்த படம் வெற்றி பெற்றால் இனி நீ கடைசியாக நடிக்கும் படம் வரை 15 நிமிடம் காமெடி பண்ணிவிட்டு தான் மற்ற வேலைகளை பார்க்க முடியும் என்று கூறினார். அது இப்போது வரை தொடர்கிறது. அப்படித்தான் சீரியஸான அமீரை, இயக்குநர் ஆதம்பாவா, என்னுடைய படத்தில் நீங்கள் காமெடியாக தான் நடிக்கிறீர்கள்.. இது வெகுஜனத்தால் ரசிக்கப்படும் என என முழுதாக நம்பி அவரை முழுதாக மாற்றி இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு ஆதம்பாவா முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கும் இயக்குநராக மாறிவிடுவார்” என்று கூறினார்.

இயக்குனர் அமீர் பேசும்போது, “என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். மாய வலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது தான் பருத்திவீரன் பிரச்சனை துவங்கியது. அதன் பிறகு இப்போது வேறு ஒரு பிரச்சனையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. என்னை சுற்றி என்ன நடக்கிறது ? ஒன்றுமே புரியவில்லை.

கோகுலம் ஸ்டுடியோவில் இறைவன் மிக பெரியவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பிற்காக ஒரு செட் ஒன்றை போட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தினோம். மறுநாள் மாலையில் இருந்து இந்த பிரச்சனை துவங்கியது. தன்னிலை விளக்கமாக ஒரு அறிக்கை ஒன்று கொடுக்கலாமா என கரு. பழனியப்பனிடம் கேட்டேன்… அப்படி ஒரு அறிக்கை கொடுத்த பிறகு எங்கிருந்து அதற்கு எதிர்ப்பு வருகிறது என பார்த்தால் கடந்த 15 வருடங்களில் என்னை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆட்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னிடம் நேரில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு அவர்களுடன் நட்பு இருக்கிறது. ஆனால் இன்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், சிலர் வயிற்றுப் பசிக்காக ஏதேதோ செய்ய வேண்டி இருக்கிறது.

இறைவன் மிக பெரியவன் தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன்.

அந்த தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.. ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அது தான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ?

2007ல் பருத்திவீரன் முடித்த சமயத்தில் கமல் ரஜினி சார் ஆகியோர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்றார்கள். ஆனால் ஹீரோக்களுடன் பயணிக்காமல் நான் எனக்காக ஒரு பாதையை தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

பணம் சம்பாதிப்பதா என் நோக்கம் ? ஜாபர் ஒருத்தன் தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரனா ? ஜாபர் வந்த பிறகு தான் இவரது வாழ்க்கையை மாறிவிட்டது என்கிறார்கள். 2014ல் தான் அவர் வந்தார்.

ஆனால் விருமாண்டி ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பு நடந்தபோது மதுரைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படம் பார்க்க வந்தவன் நான்.. என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? உதவி இயக்குனர்களாக நானும் பாலாவும் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டப்பட்டவர்கள் என்பதால் ஏதோ சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள்.

சினிமாவிற்கு வந்ததால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையுடன் வந்தவர்கள் நாங்கள்..

ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான வரித்துறையினரா ? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்த பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்த திரையுலகத்திற்கு வந்தேன் ? அதற்காக நான் வரவில்லை.. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன்.

கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்த பழக்கங்களும் எனக்கு இல்லை. இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதை கூறவில்லை.

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன். என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரபபோகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது ? அந்த நபர் சொல்லும் போய் செய்தியை தினசரி 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சிறை என்ன எனக்கு புதிதா ? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன்.. ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதை தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது.

சமூகத்தை சீரழிப்பது போதை. அதை நான் வெறுக்கிறேன். என்னுடைய உதவியாளர்கள் சிகரெட் பிடித்தாலே என்னுடைய அலுவலகத்திற்குள் நுழைய விட மாட்டேன். கரு பழனியப்பனும் ஜனநாதனும் என் முன்பாக சிகரெட் பிடிக்காமல் கீழே சென்று பிடித்துவிட்டு வருவார்கள். அப்படி நான் வெறுக்கின்ற ஒரு விஷயத்தில் என்னை தொடர்புப்படுத்தும் போது, அது என்னை மட்டும் அல்ல அதனால் என்னுடைய குடும்பத்தையும் பாதிக்கிறது. என்னுடைய பிள்ளைகள் வேலைக்கு போகும் இடத்திலும் கல்லூரி செல்லும் இடத்தில் பாதிக்கிறது. என்னை சந்தேகப்படாதீர்கள் என்று நான் சொல்லவில்லை. விசாரியுங்கள்.. நன்றாக கேள்வி கேளுங்கள். ஆனால் நீங்கலாக தீர்ப்பு எழுதாதீர்கள்.. கடுமையான விசாரணைகளை சந்தித்து விட்டு தான் இங்கே வந்து நிற்கிறேன். இத்தனை ஆண்டு வாழ்க்கையில் நான் சந்தித்திராத ஒரு புது அனுபவம். விசாரணை செய்த அதிகாரிகளை பொறுத்த வரை அவர்கள் என்னை கண்ணியமாகத்தான் தான் நடத்தினார்கள். என் மனது வலிக்கின்ற மாதிரியான கேள்விகளை கேட்டார்கள் என்பது உண்மைதான். ஓரிடத்தில் கலங்கிப் போய் நின்றேன் என்பதும் உண்மை. ஆனால் அவர்களுக்கு என்னை காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் கிடையாது. அது அவர்களுடைய வழக்கமான கடமை. பின் எப்படி குற்றவாளியை கண்டுபிடிப்பது ?

இந்த வழக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதிகாரிகளை தவிர வேறு யாருக்கும் தெரியாது ? வேறு யார் சொன்னாலும் நம்பாதீர்கள். இந்த வழக்கு குறித்த விவரங்களை நான் சேகரித்து கொண்டிருந்த சமயத்தில் ரமலான் நோன்பிற்காக என் குடும்பத்தினர் ஊருக்கு சென்று விட்டார்கள். ஒரு நாள் காலையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது விழித்து பார்த்தால் திடீரென அமலாக்கத் துறையினர் என் முன்னாடி துப்பாக்கியை நீட்டிக் கொண்டு நின்றார்கள். அதன் பிறகு என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார்கள். அதை முடித்துவிட்டு தான் ரமலான் நோன்புக்காக மதுரைக்கு சென்று வந்தேன்.

எனக்கு முதலில் வந்த சம்மனை கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது.. ? ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந் சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள்..

இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது. புலனாய்வு புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்த சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள்.. நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன்..

இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன்.. நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆக்குகிறீர்கள்.. அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ?

இந்த காலகட்டம் உண்மையிலேயே கடுமையான காலகட்டம் தான். என்னை சுற்றி இருந்த பல நண்பர்கள், உறவினர்கள் ரொம்ப தூரமாக சென்று விட்டனர். என்னிடம் இருந்த 2000 தொலைபேசி எண்களில் 1950 பேரிடம் இருந்து அழைப்பு வருவதே இல்லை.

ஒரு மரத்தின் அருகில் வெடி சத்தம் கேட்டதும் பறவைகள் அனைத்தும் சிதறி ஓடும். அதன்பிறகு வெகு சில பறவைகள் மட்டுமே மீண்டும் திரும்பி வரும். அதுபோலத்தான் என் வாழ்க்கையிலும் சில நண்பர்கள் மட்டுமே தேடி வந்தார்கள். ஆனால் இன்னும் பலர் சந்தேகப்பட்டு கொண்டு தூரமாகவே நிற்கிறார்கள். அவர்களை எல்லாம் தயவுசெய்து இங்கே வந்துவிடாதீர்கள். அங்கேயும் நின்றுவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன். என் வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதனால் இந்த வழக்கு, பிரச்சனைகள் எல்லாம் இதுவும் கடந்து போகும் என்று தான் நினைக்கிறேன்,

இந்த படம் பற்றி சொன்னால் பெரிய கலை நயத்துடன் காவியமாக இருக்கும் என்று எதிர்பார்த்து எல்லாம் வர வேண்டாம். ஆனால் உங்களை ஜாலியாக சிரிக்க வைக்கும் என்பது மட்டும் உறுதி. ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாபாவுக்கு நன்றி” என்று கூறினார்

அடுத்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமீரிடம்…

“பத்து வருடங்களாக உங்கள் நண்பராக ஒருவர் இருந்திருக்கிறார்.. ஆனால் அவரிடம் எப்படி இவ்வளவு பணம் வந்திருக்கிறது என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா? என்று கேட்கப்பட்டது.

இந்த கேள்வியை நீங்கள் லைக்கா நிறுவனம் சுபாஷ்கரனிடம் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா ?

ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் அவர்களிடம் கேள்வி கேட்க மாட்டீர்கள்.. ஒரு தனி நபர் எனும்போது கேள்வி கேட்பீர்கள் என்றால் என்ன நியாயம் ? அவர் மீதும் லண்டனில் ஒரு குற்றப்பதிவு இருக்கிறது. ஆனால் அது பற்றி ரஜினி, விஜய் யாராவது கேட்டார்களா ? என்னிடம் மட்டும் ஏன் கேட்கிறீர்கள் ? சமரசம் இல்லாத என்னுடைய வாழ்க்கை தான் இவ்வளவு பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது என நான் நம்புகிறேன். ஆனாலும் அதை நான் விரும்பி ஏற்றுக் கொள்கிறேன். நான் பிறருக்கு தொல்லை தருகிறேனா என்று பாருங்கள். இத்தனை ஆண்டுகளில் அப்படி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா ?” என்றார்.

தயாரிப்பாளர், இயக்குநர் ஆதம்பாவா பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசும்போது..

“காலில் விழாத அரசியல்வாதிகள் யாராவது இருக்கிறார்களா? சுயமரியாதை கட்சியாக இருக்கட்டும்.. பகுத்தறிவு பேசுகின்ற கட்சியாக இருக்கட்டும்.. அங்கேயே தலைவர்களின் கால்களில் விழுவதை நீங்கள் எல்லாம் பார்த்திருக்கிறீர்கள்.. அந்த நேரத்தில் அந்த காட்சி எடுக்கும் போது அப்படி ஒரு வசனம் மனதில் தோன்றியது. அதை படமாக்கி இருக்கிறோம். அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதில் சம்பந்தப்பட்டதாக நீங்கள் யாரை நினைக்கிறீர்களோ அவர்களே பார்த்தால் கூட சிரித்துக் கொண்டே சென்று விடுவார்கள். இந்த படத்தை வெளியிட விடாமல் தடுப்பவர்கள் யார் என நான் பெயர் குறிப்பிட விரும்பவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவது பேசட்டும்.. அதற்கு நான் அப்போது பதில் சொல்கிறேன்” என்றார்.

Pre Release Event of Ameers Uyir Thamizhukku

என் வாய்ஸ் மைனஸ் சொன்னாங்க.. இப்போ பிளஸ் சொல்றாங்க.. இதான் சினிமா.. – அர்ஜுன் தாஸ்

என் வாய்ஸ் மைனஸ் சொன்னாங்க.. இப்போ பிளஸ் சொல்றாங்க.. இதான் சினிமா.. – அர்ஜுன் தாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் வாய்ஸ் மைனஸ் சொன்னாங்க.. இப்போ பிளஸ் சொல்றாங்க.. இதான் சினிமா.. – அர்ஜுன் தாஸ்

*நடிகர் அர்ஜூன் தாஸ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

‘கைதி’ படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து நிற்கிறார். அநீதி, போர் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களில் அசத்தி வருகிறார். விரைவில் அவரது நடிப்பில், மௌனகுரு சாந்தகுமார் இயக்கத்தில், ரசவாதி படம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் தனக்கு ஆதரவாக, தனக்கு ஊக்கமளித்துவரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்வினில்

நடிகர் அர்ஜூன் தாஸ் பேசும்பொழுது…

என்னுடைய இந்தத் திரைப்பயணத்தில் நீங்கள் எனக்கு மிகப்பெரும் உந்துதலாக இருந்துள்ளீர்கள், என் குரலைக் குறிப்பிட்டு பாராட்டி, தனித்தனியாக நான் செய்த எல்லாப்பாத்திரங்களின் நிறை குறைகளை பகிர்ந்து, எனக்கு பெரும் ஊக்கமாக இருந்துள்ளீர்கள்.

என் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணம் நீங்கள் தான் அதற்காக உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய இந்தப்பயணத்தில் எனக்கு வாய்ப்பளித்த அனைத்து இயக்குநர்களும் எனக்காக சிறப்பான பாத்திரங்கள் தந்துள்ளார்கள். அதற்குக் காரணமும் நீங்கள் தான் அதற்கும் நன்றி என்றார்.

மேலும் பத்திரிக்கையாளர்களுடன் உரையாடியவர், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

லோகேஷ் இயக்கும் எல்லாப்படத்திலும் நீங்கள் இருப்பீர்கள், ரஜினி சாரை வைத்து லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் நீங்கள் இருக்கிறீர்களா ?
லியோவிலேயே நான் இல்லையே சார், லோகேஷ் எப்போதும் எனக்கு சிறந்த நண்பர் தான், அவர் அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் ஆனால் இப்போதைக்கு அப்டேட் எதுவும் இல்லை. ரஜினி சார் படத்தில் இருக்கிறேனா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும்.

நீங்கள் முன்பு டப்பிங் செய்து கொண்டிருந்தீர்கள் ? இப்போது டப்பிங்கை தொடர்கிறீர்களா ?
இப்போதைக்கு நான் வாய்ஸ் டப்பிங், எதுவும் செய்யவில்லை. நடிப்பு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதில் கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் லோகேஷ் ஏதாவது காட்சிக்காக கூப்பிட்டால் மறுக்க முடியாது, கண்டிப்பாக செய்வேன்.

வில்லனாக புகழ் பெற்றீர்கள், இப்போது ஹீரோ ஆகிவிட்டீர்கள் மீண்டும் வில்லனாக கூப்பிட்டால் நடிப்பீர்களா ?
இப்போதைக்கு நான் வில்லன் இல்லை. நடிப்பில் வில்லன் என இப்போதைக்கு எதுவுமே வரவில்லை.

தொடர்ந்து பல படங்கள் மெயின் பாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. லோகேஷ் கூப்பிட்டால் வில்லனாகத்தான் கூப்பிடுவார், அவர் கூப்பிட்டால் கண்டிப்பாக செய்வேன்.

பல நல்ல இயக்குநர்களோடு வேலை பார்த்துள்ளீர்கள், எப்படி அவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள்?
நானாக தேர்ந்தெடுத்து எந்த இயக்குநருடனும் வேலை பார்க்கவில்லை. வசந்தபாலன் சார் முதல், அவர்களாக கூப்பிடுகிறார்கள் நான் நடிக்கிறேன் அவ்வளவு தான்.

எனக்கு மிகச்சிறந்த இயக்குநர்கள் அமைந்தது என் பாக்கியம். இப்போது தான், நிறைய கதைகள் கேட்டு வருகிறேன், எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து எல்லோரையும் மகிழ்விப்பேன்.

ரசவாதி எப்படி வந்துள்ளது ? சாந்த குமாருடன் வேலை பார்த்தது குறித்து கூறுங்கள் ?

இயக்குநர் சாந்தகுமார் உடன் வேலை பார்த்தது அட்டகாச அனுபவம். மௌனகுரு எனக்கு பிடித்த படம். அவர் கூப்பிட்ட போது சந்தோசமாக இருந்தது. கதை எனக்கு பிடித்திருந்தது. அவர் படத்தில் நடிப்பது உண்மையில் எனக்கு பெருமை. படத்தைப் பொறுத்தவரையில் ஒரு டாக்டர் ஓய்வுக்காக ஒரு இடத்திற்கு செல்கிறார், அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது. படம் பார்த்து நீங்கள் சொல்லுங்கள்.

லோகேஷிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டதாக ஒரு பேட்டியில் கூறினீர்கள், இயக்குநர் ஆகும் எண்ணம் இருக்கிறதா?
கமல் சாரை அவர் நடிப்பதை நேரில் பார்க்க வேண்டும் என்பது என் ஆசை.

விக்ரமில் நான் இருப்பது எனக்கு தெரியாது, அதனால் உதவி இயக்குநராக வேலை பார்த்தால் அவரைப் பார்க்கலாம், அதனால் தான் லோகேஷிடம் கேட்டேன். ஆனால் அவர் என்னை நடிக்க வைத்தார், கமல் சார் நடிப்பதை நேரில் பார்த்தேன். இயக்குநர் ஆகும் எண்ணம் எல்லாம் எனக்கு இல்லை.

தொடர்ந்து நெகடிவ் அல்லது ஆக்சன் கதாப்பாத்திரங்களாக செய்கிறீர்களே, ரொமான்ஸ் எப்போது ?
ரசவாதி படத்தில் ரொமான்ஸ் நிறைய இருக்கிறது. நானும் ரொமான்ஸ் செய்துள்ளேன், அடுத்து மதுமிதா மேடம் படத்திலும் ரொமான்ஸ் இருக்கிறது, பார்த்து விட்டு சொல்லுங்கள்.

வில்லனாக வந்து ஹீரோவாக வளர்ந்துள்ளீர்கள் எப்படி இருக்கிறது இந்த அனுபவம் ?
நான் வளர்ந்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. துபாயில் தியேட்டரில் தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு இங்கு வந்து, திரையில் நடிக்க முயற்சித்தேன்.

உங்கள் ஆதரவால் தான் எனக்கு வாய்ப்புகள் வருகிறது. எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்து வருகிறேன் என நினைக்கிறேன் அவ்வளவு தான். நான் பெரிதாக வளர்ந்ததாக நினைக்கவில்லை. இப்போது தான் என் பயணம் ஆரம்பித்துள்ளது. இன்னும் திரைப்பயணத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

திரைத்துறையில் ஆரம்ப காலகட்டங்களில் கஷ்டபட்டிருக்கிறீர்களா ?
நானும் நிறைய ரிஜக்சனை சந்தித்துள்ளேன். நிறைய பேர் என் வாய்ஸ் எனக்கு மைனஸ் என சொல்லியிருக்கிறார்கள், இப்போது அது ப்ளஸாக மாறியுள்ளது. இது எல்லார் வாழ்விலும் நடக்கும், திரைத்துறை அப்படித்தான். ஒவ்வொரு நாளும் திரைத்துறையில் நிறைய கற்றுக்கொண்டு வருகிறேன்.

நடிகராக இருப்பது மகிழ்ச்சியா ? இல்லை வேறு துறையில் விருப்பம் உள்ளதா?
நடிகராக இருப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. திரைத்துறையில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது, கண்டிப்பாக இது தான் எனக்கு சந்தோசம்.

ஏன் உங்கள் படங்கள் அதிகம் வருவதில்லை ?
ஒரு நேரத்தில் ஒரு படம் தான் செய்கிறேன் அது என் பழக்கம். கடந்த வருடம் நிறைய நடித்திருக்கிறேன். இந்த வருடம் நிறையப் படங்கள் தொடர்ந்து வரும்.

உங்கள் நண்பர் லோகேஷ் நடிகர் ஆகிவிட்டாரே? தொடர்ந்து நடிப்பாரா ?
அந்த ஆல்பம் சாங் வரும் முன்னரே என்னிடம் காட்டினார். உண்மைய சொல்லு மச்சி, எப்படி இருக்கிறது எனக்கேட்டார். நடிப்பதில் அவர் நெர்வஸாக இருந்தார்.

மாஸ்டரில் நடிக்கவே அவர் நிறையத் தயங்கினார். தொடர்ந்து நடிப்பது பற்றி அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் அவர் நடிப்பாரா எனத் தெரியவில்லை. நடித்தால் எனக்கு மகிழ்ச்சி.

லோகேஷ் பற்றி அதிகம் பேசுகிறீர்களே ஏன்?

அவரிடம் தான் இந்த என் நடிப்பு ஜர்னி ஆரம்பித்தது. கைதி தான் நான் இந்த மேடையில் இருக்கக் காரணம், அவர் எனக்கு நிறைய வாய்ப்புகள் தந்துள்ளார். அவர் எனக்கு மிகச்சிறந்த மெண்டார். எனக்கு வாய்ப்பு தரும் இயக்குநர்கள் தான் என் மெண்டார்.

விக்னேஷ் சாரும் என் மெண்டார் தான். லோகேஷுடன் அதிகம் வேலை செய்ததால் அவரைப் பற்றி அதிகம் சொல்கிறேன். என் திரைப்பயணம் முழுக்க அவர் இருக்கிறார் என்பது தான் காரணம்.

கைதி 2 வருகிறதா ?
கைதி 2 இருக்கிறது என லோகேஷும் சொல்லியிருக்கிறார். கார்த்தி சாரும் சொல்லியிருக்கிறார். விக்ரமில் உயிருடன் வந்ததால் நான் இருப்பேன் என நினைக்கிறேன்.

என்ன மாதிரியான பாத்திரங்கள் நடிக்க ஆசை ?
எனக்கு அப்படி வித்தியாசமாக எந்த ஆசையும் இல்லை. வரும் கதாப்பாத்திரங்களில் எனக்கு செட் ஆகும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் அவ்வளவு தான்.

உங்களுடைய அடுத்தடுத்த படங்கள் பற்றி?
மதுமிதா மேடம் உடன் ஒரு படம் செய்கிறேன். அதற்கடுத்து, விஷால் வெங்கட்டுடன் ஒரு படம் செய்கிறேன். இன்னும் சில படங்கள் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. இப்போது ரசவாதம் வெளியாகவுள்ளது. படம் பார்த்து உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்.

Actor Arjundass open talk about his movies

கோடை(வை)யில் மாபெரும் இசை நிகழ்ச்சி.: தேனிசை தேவா பாட்டுக்கு ஆட ரெடியா.?

கோடை(வை)யில் மாபெரும் இசை நிகழ்ச்சி.: தேனிசை தேவா பாட்டுக்கு ஆட ரெடியா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடையில் மாபெரும் இசை நிகழ்ச்சி.: தேனிசை தேவா பாட்டுக்கு ஆட ரெடியா.?

1990 களில் மெலோடி பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர் தேனிசை தென்றல் தேவா.

கானா மெட்டு போட்டு வயதானவர்களையும் ஆட வைத்தவர் இவர்.

இன்று வரை நாம் திரையில் பார்த்து ரசிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி டைட்டில் கார்டு தேவா இசையில் தான் உருவானது. அண்ணாமலை தொடங்கி ஜெயிலர் வரை இந்த ஆட்டம் ரஜினி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது..

அதன் பின்னர் ரஜினி படங்களுக்கு இளையராஜா ரகுமான் அனிருத் என எவர் இசையமைத்து வந்தாலும் தேவா இசை டைட்டில் கார்டு தான் ரஜினி ரசிகர்களின் ஃபேவரைட்.

விஜய்யின் ஆரம்ப கால படங்களில் தேவா இசை தான் ஹைலைட்டாக அமைந்திருக்கும். அதுபோல அஜித் படங்களுக்கும் தேவா இசை பக்க பலமாக இருந்து வெற்றிக்கு உதவியது.

கமல் – மீனா நடித்த ‘அவ்வை சண்முகி’ படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது. இப்படியாக தமிழில் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பணிபுரிந்தவர் தேவா.

சமீபகாலமாக இவர்து இசையில் பெரிய படங்கள் வரவில்லை. ஆனாலும் தேவா இசைக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஜூன் 15ஆம் தேதி கோவையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

‘நினைத்தேன் வந்தாய்’ என்ற பெயரில் இந்த இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.. இதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது

Music composer Deva music concert in Coimbatore

#ThenisaiTendral @ungaldevaoffl
makes his debut in #Coimbatore !!
Catch him live on June 15th for a night of unforgettable music.

#DevaInCoimbatore 🎵 🎤
“நினைத்தேன் வந்தாய்”

Ticket link : https://www.ticketprix.com/l/nxgo?afId=giantfilmsninaithenvanthai

@GiantFilmworks @ticketprix @seedmediacompan @pro_thiru

OTT PLUS – தியேட்டரில் மிஸ் ஆச்சா.? ஒரு நாளைக்கு ₹1 செலவில் படம் பாருங்க

OTT PLUS – தியேட்டரில் மிஸ் ஆச்சா.? ஒரு நாளைக்கு ₹1 செலவில் படம் பாருங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

OTT PLUS – தியேட்டரில் மிஸ் ஆச்சா.? ஒரு நாளைக்கு ₹1 செலவில் படம் பாருங்க

*சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள ‘ஓடிடி பிளஸ்’

*புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்த இயக்குநர் சீனுராமசாமி*

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன. இதனால் பல நல்ல படைப்புகள் ரசிகர்களின் கவனத்திற்கு வராமலேயே போய் விடுகின்றன.

இதற்கு ஒரு தீர்வாக வந்தவை தான் ஓடிடி தளங்கள். இவற்றின் மூலம் தங்கள் மொழி மட்டுமல்லாது வேறு மொழிகளிலும் ஒருவரது படைப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெரும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனாலும் தற்போது முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் துவங்கியுள்ளது.

இதற்கு ஒரு புதிய தீர்வாக உருவாக்கப்பட்டுள்ளது தான் ‘ஓடிடி பிளஸ்’ என்கிற புதிய ஓடிடி தளம். அதே சமயம் இதன் பெயருக்கு ஏற்றபடி தன்னுள் இன்னும் சில ஓடிடி தளங்களை ஒன்றிணைத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் இயக்குநர்களாக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர் மற்றும் கேபிள் சங்கர் ஆகியோர் பொறுப்பு வகிக்கின்றனர்.

இந்த ‘ஓடிடி பிளஸ்’ துவக்க விழாவும் இதில் ஒளிபரப்பாகின்ற ‘ஃபெமினிஸ்ட்’ என்கிற வெப் சீரிஸின் முதல் பாகம் மற்றும் ‘சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆகியவற்றின் திரையிடலும் நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபிள் நடைபெற்றது. மேலும் அடுத்தடுத்து இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் இடம் பெற இருக்கும் படைப்புகளின் ட்ரெய்லர்களும் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனுராமசாமி கலந்து கொண்டார்.

மேலும் சமீப காலங்களில் சின்ன பட்ஜெட்டில் வெளியாகி அதே சமயம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற படைப்புகளை கொடுத்த இயக்குநர்கள் ஜான் கிளாடி (பைரி), மணிவர்மன் (ஒரு நொடி), ரா.வெங்கட் (கிடா), பாலாஜி வேணுகோபால் (லக்கி மேன்), கண்ணுசாமி ராஜேந்திரன் (வட்டார வழக்கு), யஷ்வந்த் கிஷோர் (கண்ணகி), விக்னேஷ் கார்த்திக் (ஹாட்ஸ்பாட்), சரத் ஜோதி மற்றும் எழுத்தாளர்கள் வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஸ்மி (கூஸ் முனுசாமி வீரப்பன் வெப்சீரிஸ்) ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டதுடன் இயக்குநர் சீனுராமசாமி கையால் நினைவு பரிசும் புத்தகமும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் சீனுராமசாமி பேசும்போது…

“இந்த ஓடிடி பிளஸ் தளம் எதிர்காலத்தில் உருவாகும் புதிய படைப்பாளர்களுக்கு நல்லதொரு வரப்பிரசாதமாக இருக்கும்” என்று கூறினார். இதில் கலந்துகொண்ட இயக்குநர்கள் அனைவருமே இப்படி தங்களது படைப்பை பெருமைப்படுத்தும் விதமாக தங்களுக்கும் அங்கீகாரம் அளித்து பாராட்டி நினைவு பரிசு வழங்கியதற்காக தங்களது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர்..

இந்த நிகழ்வில் திரையிடப்பட்ட, கேபிள் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ் முதல் பாகத்திற்கு பார்வையாளர்களிடமும் பத்திரிக்கையாளர்களிடமும் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்தன.

‘ஓடிடி பிளஸ்’ இயக்குநர்களில் ஒருவரான கேபிள் சங்கர் பேசும்போது…

“ஓடிடி தளங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ல் தற்போது ஐந்து ஓடிடி தளங்கள் இணைந்துள்ளன. இனிவரும் நாட்களில் பல ஓடிடி தளங்களையும் ஒரே தளத்தில் கொண்டு வருவது தான் இந்த ‘ஓடிடி பிளஸ்’-ன் நோக்கம்.

குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூபாய் 29 கட்டணத்திலிருந்து ரூ 99, ரூ 199 என அதிகபட்சமாக 299 ரூபாய் வரை ஒரே கட்டணத்தில் அதாவது ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணத்தில் அனைத்து ஓடிடி தளங்களிலும் உள்ள படைப்புகளை ரசிகர்கள் பார்த்து ரசிக்க முடியும்.

இதில் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது அதையும் தாண்டி பல மொழிகளில் வெளியான மற்றும் இனிமேல் வெளியாக இருக்கின்ற திரைப்படங்கள், வெப்சீரிஸ்கள் மற்றும் குறும்படங்கள் என அனைத்தும் இதில் இடம்பெற இருக்கின்றன.

அந்த வகையில் இயக்குனர் கீரா இயக்கத்தில் வெளியான ‘வீமன்’ என்கிற படம் நேரடியாக ஓடிடி பிளஸ்சில் வெளியாகிறது.

அதுமட்டுமல்ல ‘பிகினி சமையல்’ என்கிற கவர்ச்சிகரமான ரியாலிட்டி ஷோ ஒன்று ஏழு எபிசோடுகளாக ஆங்கிலத்தில் வர இருக்கிறது” என்று கூறினார்.

தற்போது ‘ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ், ‘சென்டன்ஸ்’ குறும்படம், ‘ஜெனி’ ஹாரர் திரைப்படம் மற்றும் ‘மது’ என்கிற 45 நிமிட படம் ஆகியவை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இதில் ‘மது’ என்கிற படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட இரண்டு நாட்களில் பத்தாயிரம் நிமிடங்களை தாண்டி ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. ‘ஃபெமினிஸ்ட்’ வெப் சீரிஸ் முதல் பாகம் ஸ்ட்ரீமிங் ஆன முதல் நாளிலேயே 5,000 நிமிடங்களை எட்டியுள்ளது.

Seenu Ramasamy wishes Cable Sankar for OTT PLUS

——-

More Articles
Follows