கபாலி தன்ஷிகாவின் அடுத்த அதிரடி ஆரம்பம்

கபாலி தன்ஷிகாவின் அடுத்த அதிரடி ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhansika photosகபாலி படத்தில் ரஜினிக்கு அடுத்து நம் கவனம் ஈர்த்தவர் நடிகை தன்ஷிகா.

யோகி பாத்திரத்தில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருந்தார்.

இதனையடுத்து, தற்போது ராணி என்ற படத்தில் நடித்துள்ளார்.

எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி .முத்து கிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்க, சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளர்.

ஏ. குமரன் மற்றும் எஸ்.ஆர். சந்தோஷ்குமார் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை முழுக்க ஒரே கட்டமாக 40 நாட்களில் மலேசியாவில் படமாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள பிரசாத் லேப் ஸ்டுடியோவில் துவங்கியது.

அஜித்திடம் யூ டேர்ன் போட்டு சூர்யாவிடம் திரும்பிய நயன்தாரா

அஜித்திடம் யூ டேர்ன் போட்டு சூர்யாவிடம் திரும்பிய நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and nayantharaதென்னிந்தியாவின் முன்னணி நடிகை நயன்தாரா விரைவில் ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக வந்த செய்திகளை நம் தளத்தில் படித்தோம்.

இப்படத்தில் நடிக்க அஜித்தின் கால்ஷீட்டை பெற நயன்தாரா முயற்சி வருவதாக கூறப்பட்டது.

ஆனால் அந்த முயற்சி, நிலுவையில் இருப்பதால் தற்போது நயன்தாரா தன் பார்வையை சூர்யா பக்கம் திருப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யாவுக்கும் தமிழ்நாட்டை போல், ஆந்திராவிலும் ரசிகர் வட்டம் உள்ளதால் இவரை தேர்ந்தெடுத்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

விரைவில் இவர்களின் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ரஜினி தொடாத இடங்களை தொடும் விக்ரம்

ரஜினி தொடாத இடங்களை தொடும் விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and vikramதமிழ் சினிமாவை உலகில் பல நாடுகளுக்கும் கொண்டு சென்ற பெருமை ரஜினிகாந்தையே சேரும்.

தமிழ் மொழி பற்றி தெரியாதவர்கள் கூட ரஜினியை பற்றி தெரிந்து வைத்திருந்தனர்.

இதற்கு கபாலி படமே பெரும் சான்று.

இந்நிலையில் செப்டம்பர் 8ம் தேதி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள இருமுகன் படம் வெளியாகிறது.

இப்படம் Manila, Philippines போன்ற நாடுகளில் வெளியாக இருக்கிறதாம்.

இதுவரை அங்கே ரஜினி படங்கள் கூட வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

தனுஷ்-கீர்த்தி ரசிகர்களுக்கு இன்று செம விருந்து

தனுஷ்-கீர்த்தி ரசிகர்களுக்கு இன்று செம விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush keerthy sureshபிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள தொடரி விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் தனுஷுடன் கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன், தம்பி ராமையா, ஹரீஷ் உத்தமன், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பு ஆடியோ வெளியாகி பெரும் ஹிட்டடித்துள்ளது.

இந்நிலையில் இதன் தெலுங்கு பதிப்பிற்கு ரயில் என பெயரிட்டுள்ளனர்.

இதன் தெலுங்கு ஆடியோவை இன்று வெளியிடவுள்ளனர்.

ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா இல்லனா நயன்தாரா; தனுஷ் ரியாக்ஷன்?

ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா இல்லனா நயன்தாரா; தனுஷ் ரியாக்ஷன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

trisha or nayanthara may join in rajini dhanush movieகபாலிக்கு பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இப்படத்தை தனுஷ் தயாரிப்பதால், வுண்டர்பார் பிலிம்ஸின் ராசி நாயகி அமலா பால் நடிப்பார் என கூறப்பட்டது.

ஆனால் அது தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் என்பதால் முன்னணி நாயகிகள் பக்கம் ரஜினியின் பார்வையை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிந்தியாவில் நயன்தாராவுக்கு இருக்கும் வரவேற்பு நாம் அறிந்ததே. ஒரு வேளை இவர் நடிக்கலாம்.

அல்லது ரஜினியுடன் ஜோடி சேர பல வருடங்களாக காத்திருக்கும் த்ரிஷா நடிக்கக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது.

சூர்யாவின் ‘சிங்கம் 3’ பட டீசர் ரிலீஸ் தேதி

சூர்யாவின் ‘சிங்கம் 3’ பட டீசர் ரிலீஸ் தேதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam 3 suriyaஆறு என்று பெயரிடப்பட்ட படத்தில் சூர்யா-ஹரி கூட்டணி இணைந்தது.

இவர்களின் வெற்றிக் கூட்டணி தற்போது 5வது படத்தில் பணி புரிந்து வருகின்றது.

சிங்கம் படத்தின் 3வது பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், இதன் டீசரை விரைவில் வெளியிடவிருக்கிறார்களாம்.

இதற்கான இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் செப்டம்பர் 20ஆம் தேதி டீசரை வெளியிட உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இதில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், நாசர், ராதாரவி, ராதிகா, ரோபோ சங்கர், சூரி, சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

More Articles
Follows