ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடும் சிம்பு.; பரவசத்தில் ‘பத்து தல’ படக்குழு

ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடும் சிம்பு.; பரவசத்தில் ‘பத்து தல’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கிய ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சௌந்தரராஜா, மது குருசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் ராவடி என்ற பாடலுக்கு சாயிஷா நடனமாடி இருந்தார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார்.்

மார்ச் 30ல் இப்படம் வெளியான நிலையில்
முதல் நாளில் மட்டும் உலகளவில் ரூ 12.3 கோடியை படம் வசூலித்துள்ளதாக அறிவித்து இருந்தனர்.

இது சிம்புவின் சினிமா கேரியரில் முதல் நாளின் அதிகபட்ச வசூல் என கூறப்படுகிறது.

மேலும் படத்திற்கு நள்ளிரவு ஒரு மணி காட்சியில்லை.. அதிகாலை 4 மணி காட்சிகள் இல்லை.. வார நாட்களில் (வியாழன்) வெளியானது. அப்படி இருந்த போதிலும் வசூல் வேட்டையாடியுள்ளது என படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான நாயகன் சிம்புவை சந்தித்து அவருக்கு மாலை அணிவித்து படக்குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

‘மாநாடு’ மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ ஆகிய இரு வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது ‘பத்து தல’ படம் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கொண்டாடி உள்ளார் சிம்பு.

Simbu celebrates his hat-trick succes on their films

கீழடி அகழ்வாராய்ச்சியை குடும்பத்துடன் பார்வையிட்ட சூர்யா! – புகைப்படங்கள் வைரல்

கீழடி அகழ்வாராய்ச்சியை குடும்பத்துடன் பார்வையிட்ட சூர்யா! – புகைப்படங்கள் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சூர்யா சமீபத்தில் தனது குடும்பத்துடன் கீழடி அகழ்வாராய்ச்சி தளம் மற்றும் பாரம்பரிய அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார்.

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட எல்லையில் கீழடி கிராமம் உள்ளது.

இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு தொல்லியல் துறை அங்கு அகழாய்வு செய்து, ரேடியோ கார்பன் டேட்டிங் மூலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க காலக் குடியேற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன.

சூர்யா, ஜோதிகா, அவர்களின் மகள் தியா மற்றும் சூர்யாவின் தந்தை சிவக்குமார் ஆகியோரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Suriya visits the Keezhadi excavation site and heritage museum with his family!

JUST IN ஆருத்ரா கோல்டு மோசடியை மறைக்க ஆர்கே.சுரேஷ் வாங்கிய ரூ 12 கோடி.; போட்டுக் கொடுத்த இயக்குநர்

JUST IN ஆருத்ரா கோல்டு மோசடியை மறைக்க ஆர்கே.சுரேஷ் வாங்கிய ரூ 12 கோடி.; போட்டுக் கொடுத்த இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஆருத்ரா கோல்டு நிறுவனத்திற்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிளைகள் உள்ளன.

இந்த நிறுவனத்தில் நீங்கள் முதலீடு செய்தால் அதிக வட்டி கொடுக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

25 முதல் 30% வரை வட்டி தருவதாக அறிவித்து இருந்தனர்.

இதனை நம்பி பொதுமக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர்.

முதலீடு தொகை மட்டும் ரூ.2438 கோடியை கடந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் வட்டி எதுவும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.

ஒரு கட்டத்தில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வரவே ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் வங்கி கணக்குகள் , சொத்துக்கள் முடக்கப்பட்டன.

இதுவரை இந்த மோசடி தொடர்பாக 21 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

8 நபர்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷிற்கு தொடர்பு இருப்பதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனவே ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி வழக்கில் நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் தீவிரம்.

ஆருத்ரா நிறுவன இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரிடம் நடத்திய விசாரணையில் இந்த வழக்கை ஒன்றிய அரசின் மூலம் ஒன்றும் இல்லாமல் செய்வதற்காக ரூ.12 கோடி கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை வாங்கிய ஆர்.கே.சுரேஷ் ஏமாற்றி விட்டு துபாய்க்கு சென்றுவிட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

மேலும் விசாரணையில் இருந்து தப்பிக்கவே 2 மாதமாக ஆர்.கே.சுரேஷ் வெளிநாட்டில் தங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Aarudhra financial scam actor RK suresh involved?

ஐஸ்வர்யா ரஜினி வீட்டைத் தொடர்ந்து தனுஷ் பட வில்லன் வீட்டிலும் திருட்டு

ஐஸ்வர்யா ரஜினி வீட்டைத் தொடர்ந்து தனுஷ் பட வில்லன் வீட்டிலும் திருட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில தினங்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் மற்றும் வைரங்கள் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து வீட்டுப் பணியாளர்கள் மீது சந்தேகம் கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் பணிப்பெண் ஈஸ்வரி என்பவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் இருந்து வைரங்களும் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.் மேலும் அவர் 1 கோடியில் வாங்கிய வீடும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு சினிமா பிரபலத்தின் வீட்டில் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு தென்னிந்தியாவில் முன்னணி பாடகராக இருப்பவர் யேசுதாஸின் 2வது மகன் விஜய் யேசுதாஸ்.

இவர் சில படங்களில் நடித்தும் வருகிறார். ‘மாரி’ படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய் யேசுதாஸ்.

இந்த நிலையில் சென்னை அபிராமபுரத்தில் உள்ள, பாடகர் விஜய் வீட்டில் இருந்து சுமார் 60 சவரன் நகைகள் கடந்த டிசம்பர் மாதம் திருடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த திருட்டு விவகாரம் பிப்ரவரியில்தான் தெரியவந்ததாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தில் வீட்டு பணியாளர்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுவதால், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Vijay Yesudas house burgled 60 sovereign gold stolen

‘கபாலி’ முதல் ‘அண்ணாத்த’ வரை வேற லுக்.; ‘ஜெயிலரில் ரஜினிக்கு நியூ லுக்

‘கபாலி’ முதல் ‘அண்ணாத்த’ வரை வேற லுக்.; ‘ஜெயிலரில் ரஜினிக்கு நியூ லுக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து வருகிறார்.

பான் இந்திய படமாக உருவாகி வரும் இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து வில்லன் நடிகர் சுனில், இந்தியில் இருந்து ஜாக்கி ஷெராப் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

நாயகிகளாக தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ரஜினி

இந்த படத்திற்காக ரஜினிகாந்த் தாடி வளர்த்து வந்தார். சமீப காலமாக நரைத்த தாடியில் கொஞ்சம் கருப்பு டை அடித்து பொது நிகழ்ச்சிகளில் கூட காணப்பட்டார்.

இந்த நிலையில் தாடி முழுவதையும் ஷேவ் செய்துவிட்டு புது லுக்கிற்கு மாறி உள்ளார் சூப்பர்ஸ்டார்.

அவரது நியூ லுக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் மும்பையில் நடைபெற்ற அம்பானி நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் தன் மகள் சௌந்தர்யாவுடன் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கபாலி, காலா பேட்ட தர்பார் அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினிகாந்த் தாடியுடன் காணப்பட்டார். தற்போது ‘ஜெய்லர்’ படத்தில் தாடி இல்லாத தோற்றத்திலும் ரஜினி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி

Nelson changed Rajini look for Jailer movie

OFFICIAL முதன்முறையாக பாலா & அருண் விஜய் இணையும் ‘வணங்கான்’ சூட்டிங் அப்டேட்

OFFICIAL முதன்முறையாக பாலா & அருண் விஜய் இணையும் ‘வணங்கான்’ சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்து விட்டதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் கன்னியாகுமரியில் தொடங்கியது.

மேலும் இந்த முதல் ஷெட்யூலில் படக்குழு முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் ஏப்ரல் 17ஆம் தேதி தொடங்குகிறது.

அருண் விஜய் நாயகனாக நடிக்க ​​ரோஷினி பிரகாஷ் நாயகியாக நடிக்கிறார். பிரபல நடிகர்களுடன் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, சில்வா இந்த படத்திற்கு ஆக்‌ஷன் காட்சிகளைக் கையாண்டுள்ளார்.

first time team up Bala and Arun Vijay

More Articles
Follows