ஆயுதபூஜைக்கு தியேட்டர்களில் ‘அண்ணாத்த’ டீசர் விருந்து..: அனுமதி இலவசம்

ஆயுதபூஜைக்கு தியேட்டர்களில் ‘அண்ணாத்த’ டீசர் விருந்து..: அனுமதி இலவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தாண்டு 2021 தீபாவளிக்கு ரஜினி நடித்த ‘அண்ணாத்த‘ படம் உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதனிடையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அன்று மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டரும் வெளியாகி இணையத்தை அதிர வைத்தது.

இதன்பின்னர் அண்ணாத்த பாடல்… சாரல் சாரல் காத்து ஆகிய படங்களும் வெளியானது. ரஜினி மிக இளமையாக இருப்பதாக ரசிகர்கள் & மக்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது ”அண்ணாத்த’ டீசர் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 மாலை 6 மணிக்கு டீசர் என அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் அண்ணாத்த டீசர் வெளியீட்டு விழா*

தூத்துக்குடி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் தலைவரின் அண்ணாத்த திரைப்பட டீசர் *கிளியோபட்ரா திரையரங்கில் 14.10.21 வியாழன் இரவு 9 மணிக்கு சிறப்பு பாடல்களுடன்* கொண்டாடப்படுகிறது.

*அனுமதி இலவசம்*

ரசிகர்கள் அனைவருக்கும் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கிறோம்.

Annaatthe teaser will be screened in this theatre

சூர்யாவை அரசியலுக்கு அழைத்தவர்… இன்று திரைத்துறைக்கு வந்துவிட்டார்

சூர்யாவை அரசியலுக்கு அழைத்தவர்… இன்று திரைத்துறைக்கு வந்துவிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட இயக்குநரான இளம் காளைகள் கட்சி தலைவர் நேதாஜி கார்த்திகேயன்

ஜல்லிக்கட்டு போராடத்திற்கு பிறகு இளம் காளைகள் கட்சியை தொடங்கியவர் நேதாஜிகார்த்திகேயன்..

நீட் தேர்விற்கு எதிராக சூர்யா கருத்து தெரிவித்த போது சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என கூறி சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்

தற்போது N.K.Films Productions என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்..

தமுக்கம் வென்றான் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளதாக படத்தின் First look ஐ வெளியிட்டுள்ளார்…

மதுரையின் வரலாறு மற்றும் பழங்குடி போராளிகளின் கதை களத்தை வைத்து எடுக்கபட உள்ளதாக தெரிவித்துள்ளார்…

Politician Nethaji Karthikeyan turns hero

மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகளை பகிர்ந்த நடிகர் சிவக்குமார்

மறைந்த நடிகர் ஶ்ரீகாந்தின் நினைவலைகளை பகிர்ந்த நடிகர் சிவக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஶ்ரீகாந்த் 1965 இல் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், சிவக்குமார், முத்துராமன் , ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திரங்கள் கலைஞர்கள் போற்றக்கூடிய நடிகராக விளங்கினார்.

தற்போது 82 வயதான தங்கப்பதக்கம் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார். தன் நண்பரின் மறைவையொட்டி நடிகர் சிவக்குமார் அவர் குறித்து நினைவுக்குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

எனது அருமை நண்பர் திரு ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, K பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர் , மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும்போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார். நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார் , வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள் , ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார். என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை , நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த் , லீலாவதி , மீரா கணவர் zach அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம் , சினிமா என்று இரண்டு காஃபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன்.
இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
#RIPSrikanth

– நடிகர் சிவகுமார்

Sivakumar shared working experience with Actor Srikanth

பிக்பாஸ் வீட்டிலிருந்து திருநங்கை நமீதா வெளியேற்றம்.; வைல்டு கார்டு என்ட்ரீயாக சிவகார்த்திகேயன் பட நடிகை

பிக்பாஸ் வீட்டிலிருந்து திருநங்கை நமீதா வெளியேற்றம்.; வைல்டு கார்டு என்ட்ரீயாக சிவகார்த்திகேயன் பட நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 5 சீசன் அக்டோபர் 3-ந் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.

இதில் 10 பெண், 7 ஆண், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் பங்கேற்றுள்ளனர்.

முதல் வார முடிவதற்குள் திருநங்கை நமீதா மாரிமுத்து என்பவர் (கொரோனா தொற்று) உள்ளிட்ட மருத்துவ காரணங்களால் வெளியேறினார்.

எனவே தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

ஒரு மாதம் முடிவடைந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள் என்பதே வழக்கமாக இருந்தது.

இத கொஞ்சம் பாருங்க : ‘‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

தற்போது நமீதாவுக்கு பதிலாக ஒரு வைல்டு கார்டு மூலம் ஒரு போட்டியாளரை உள்ளே அழைக்கவிருக்கிறார்களாம்.

ஆயுதபூஜை முடிந்த பின்னர் அக்டோபர் 16-ந் தேதி முதல் நடிகை ஷாலு ஷம்மு பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ & ‘மிஸ்டர் லோக்கல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு என்பது குறிப்பிடத்தக்கது

Sivakarthikeyan film actress as wild card entry in Bigg Boss 5 house

மீண்டும் பிசாசு 2 கூட்டணி.; எஸ்ஜே. சூர்யாவை இயக்கும் மிஷ்கின்

மீண்டும் பிசாசு 2 கூட்டணி.; எஸ்ஜே. சூர்யாவை இயக்கும் மிஷ்கின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் மிஷ்கின்.

அவ்வப்போது படங்களில் நடித்தும் சில படங்களை தயாரித்தும் உள்ளார்.

தற்போது ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின்.

இப்பட இறுதிக்கட்ட பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தி வரும் நிலையில் அவரின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

இதில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க நடிகர் விதார்த் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளராம்.

பிசாசு 2 படத்தை தயாரித்து வரும் முருகானந்தமே இந்த படத்தையும் தயாரிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

எனவே விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

SJ Suryah’s next with Director Mysskin

JUST IN ஜெயலலிதாவின் முதல் ஹீரோ.. ரஜினியின் முதல் வில்லன்.. நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்.: ரஜினி இரங்கல்

JUST IN ஜெயலலிதாவின் முதல் ஹீரோ.. ரஜினியின் முதல் வில்லன்.. நடிகர் ஸ்ரீகாந்த் மரணம்.: ரஜினி இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்.

1965-ல் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். இதில் தான் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நாயகியாக அறிமுகமானார்.

தங்கப்பதக்கம், பைரவி உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீகாந்துக்கு தற்போது வயது 82.

ஆரம்பகாலங்களில் வில்லனாக நடித்த ரஜினிகாந்த் ‘பைரவி’ என்ற படத்தில் தான் நாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்தார் ஸ்ரீகாந்த்.

மேலும் ரஜினியுடன் சதுரங்கம் & தம்பிக்கு எந்த ஊரு படங்களிலும் நடித்துள்ளார்.

எம்ஜிஆர் உடன் இவர் நடிக்கவில்லை. சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

200 படங்களில் நடித்த இவர் 50 படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சற்றுமுன் தன் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில்…

“என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்…”

என பதிவிட்டுள்ளார்.

Veteran Actor Srikanth passed away at 83.

More Articles
Follows