‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

‘பிக்பாஸ்’ ஷனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய நபர்..; நடிகை என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanam shettyமாடலிங் நடிகை என பெயர் பெற்றவர் நடிகை ஷனம் ஷெட்டி.

இவர் பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் என்பவரை காதலிப்பதாக கூறினார்.

இவரும் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக காதலனை பிரிந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் கமலுக்கு ஆதரவாக சில மாதங்களுக்கு முன்பு பேசினார்.

அதாவது சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகியவர்களை கடுமையாக சாடியிருந்தார்.

இவர் சென்னை திருவான்மியூரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அடிக்கடி அனுப்பி தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இவரின் புகாரினை பெற்றுக் கொண்ட திருவான்மியூர் போலீசார், சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

Sanam shetty filed police complaint against her follower

விஷாலை மிரட்டும் வில்லனாக அஜித்-விக்ரம் பட நடிகர்

விஷாலை மிரட்டும் வில்லனாக அஜித்-விக்ரம் பட நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baburaj actorரஜினி கமல் உள்ளிட்ட ஜாம்பவான்களே தங்கள் படத்தின் பெயரை அறிவித்துவிட்டு தான் பட சூட்டிங்குக்கு செல்கிறார்கள்.

தற்போது உருவாகி வரும் ‘அண்ணாத்த’ & ‘விக்ரம்’ ஆகிய படங்களும் அப்படித்தான்.

ஆனால் விஜய் அஜித் சூர்யா தனுஷ் முதல் தற்போது விஷால் வரை படத்திற்கு பெயரே வைக்காமல் ரேஸ் குதிரை போல நம்பரிலேயே அழைக்கின்றனர்.

சரி விஷயத்துக்கு வருவோம்…

தற்போது து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விஷால் 31’

விஷால் பிலிம் ஃபாக்டரி சார்பில் விஷாலே இந்த படத்தை தயாரிக்கிறார்.

டிம்பிள் ஹயாதி, யோகிபாபு, ரமணா, நந்தா, உள்ளிட்டோர் நடிக்க யுவன் இசையமைக்க இந்த படத்துக்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்ய எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இப்பட சூட்டிங் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.

இவர் ஏற்கெனவே தமிழில் ஜனா, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Babu Raj to play antogonist in Vishal 31

சூர்யா பிறந்த நாளில் பாண்டிராஜ் தரவிருக்கும் மெகா ட்ரீட்

சூர்யா பிறந்த நாளில் பாண்டிராஜ் தரவிருக்கும் மெகா ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து வரும் அவரது 40வது படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

இதில் சூர்யாவுடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா, திவ்யா துரை உள்ளிட்டோர் நடிக்க இமான் இசையமைத்து வருகிறார்.

சூர்யா படத்திற்கு இமான் இசையமைப்பது இதுதான் முதன்முறையாகும்.

இப்படம் தொடர்பாக 2 சூர்யா ஸ்டில்கள் வெளியாகி வைரலானது.

இந்த ஜூலை மாதம் 23ம் தேதி சூர்யாவின் (46வது) பிறந்த நாள் வருகிறது.

அப்போது சூர்யா 40் பட பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகின்றது.

சூர்யாவுக்கு கொரோனா மற்றும் ஊரடங்கு ஆகிய காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

தற்போது ஜூலை 12 முதல் மீண்டும் காரைக்குடியில் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

Director Pandiraj’s treat to Suriya fans

JUST IN தமிழ்நாடு புஃல் டாஸ்மாக் ஓபன்.. இ-பதிவு ரத்து.. பஸ் போலாம் ரைட்.. பள்ளிகள் & தியேட்டர்கள் தடை.; ஜூலை 12 வரை ஊரடங்கு.

JUST IN தமிழ்நாடு புஃல் டாஸ்மாக் ஓபன்.. இ-பதிவு ரத்து.. பஸ் போலாம் ரைட்.. பள்ளிகள் & தியேட்டர்கள் தடை.; ஜூலை 12 வரை ஊரடங்கு.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு என ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியாக தளர்வுகள் அறிவிப்பு.

ஹோட்டல்களில் 50% அளவிற்கு வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி.

தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி

50% வாடிக்கையாளர்கள் தேநீர் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி.

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்க அனுமதி.

ஏற்கனவே 27 மாவட்டங்களில் மதுக்கடைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது எஞ்சிய 11 மாவட்டங்களிலும் மதுக்கடைகளை திறக்க அனுமதி

காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மதுக்கடைகளை திறக்க அனுமதி.

மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் பயணிக்க அனுமதி

பொதுப்போக்குவரத்துக்கான பேருந்துகளில் குளிர்சாதன வசதிக்கு அனுமதி கிடையாது.

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க நடைமுறையில் இருந்த இ.பதிவு முறை ரத்து.

உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி

உணவகங்கள், பேக்கரிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட அனுமதி.

லாட்ஜ் தங்கும் விடுதிகளில் உள்ள உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி

ஜிம், உணவகம், விளையாட்டு வசதிகளுடன் கிளப்புகள் செயல்பட அனுமதி.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து துணிக்கடைகள் & நகைக்கடைகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி.

ஐ.டி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.

மால்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி

மால்களில் உள்ள தியேட்டர்கள், விளையாட்டு கூடங்களை திறக்க அனுமதி கிடையாது

மால்களில் உள்ள உணவகங்களில் 50% இருக்கைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிப்பாட்டு தலங்களும் செயல்பட அனுமதி.

*எதற்கெல்லாம் தடை தொடரும்..??*

பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி கிடையாது

உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்ட வன பூங்காக்களைத் திறக்க அனுமதி கிடையாது.

தியேட்டர்களுக்கு அனுமதி கிடையாது

பார்களுக்கு அனுமதி கிடையாது

நீச்சல் குளங்களுக்கு அனுமதி கிடையாது

சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி கிடையாது

மாநிலங்களுக்கு இடையே தனியார், அரசு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.

பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது.

கோயில்களில் குடமுழுக்கு & திருவிழாவுக்கு அனுமதியில்லை.

Lockdown in Tamil Nadu extended for another week till July 12 with additional relaxations:

Dine-in allowed in hotels, restaurants with 50% occupancy till 8pm.

Tea shops allowed with 50% occupancy.

IT companies can function with 50% workforce.

Permitted shops allowed till 8pm.

Hotels, lodges, guest house can be opened with 50% occupancy.

Museums and ASI sites will be open till 5pm.

All places of worship can be opened by following SOPs.

Gyms and Yoga studios can function with 50% occupancy.

Liquor shops will be kept open from 10am-8pm.

Intra district and inter district public transport will be allowed with 50% seating capacity.

Amusement parks can function without water games.

E-registration stands cancelled.

50 guests allowed at weddings, 20 at funeral.

என் ஹீரோ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டால்……..; தற்கொலைக்கு முயற்சித்து மிரட்டிய ரசிகை

என் ஹீரோ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டால்……..; தற்கொலைக்கு முயற்சித்து மிரட்டிய ரசிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய படம் ‘அசுரன்’.

இதில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, அம்மு, நிதீஷ் வீரா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்திருந்தனர்.

பெயருக்கு ஏற்றார் போல படமும் அசுர வெற்றிப் பெற்றது. தனுஷுக்கு 2வது முறையாக தேசிய விருதினை பெற்றுக் கொடுத்தது.

தற்போது தாணு தயாரிப்பில் இப்படம் ‘நாரப்பா’ என்ற பெயரில் தெலுங்கில் வெங்கடேஷ், பிரியாமணி நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்க இன்னும் தாமதமாகும் என்பதால் ‘நாரப்பா’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய போவதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதற்கு வெங்கடேஷ் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திராவிலுள்ள ஒரு ரசிகை நாரப்பாவை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துஉள்ளூர்

இத்துடன் அவர் தன் கையை அறுத்து கொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.

இச்சம்பவம் தெலுங்கு சினிமா திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Fan Attempts Suicide Opposing Narappa OTT Release

narappa-poster

நாலு படம் என்னாச்சுனே தெரியல..; லோகேஷுடன் 1.. வெற்றிமாறனுடன் 1.. அடுத்த ப்ளானில் கமல்ஹாசன்

நாலு படம் என்னாச்சுனே தெரியல..; லோகேஷுடன் 1.. வெற்றிமாறனுடன் 1.. அடுத்த ப்ளானில் கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanகடந்த சில மாதங்களாக அரசியல் பணிகளில் ஆர்வமாக இருந்தார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அவ்வப்போது ட்விட்டரில் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார் கமல்.

எனவே மீண்டும் சினிமா பக்கம் தன் கவனத்தை திருப்பியுள்ளார் நடிப்பு உலக நாயகன்.

தற்போது கமல் கைவசம் ‘இந்தியன் 2, விக்ரம், தலைவன் இருக்கின்றான்’ ஆகிய படங்கள் உள்ளன.

இதற்கு முன்பே சபாஷ் நாயுடு என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார். அது என்ன நிலைமையில் இருக்கிறது என்பது கமலுக்கே வெளிச்சம்.

‘தலைவன் இருக்கின்றான்’ படமும் நிலுவையில் உள்ளது.

கமலின் கனவுப் படமான ‘மருதநாயகம்’ படம் மர்மமாகவே உள்ளது.

இந்த நிலையில் இன்று ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என கோர்ட் உத்தரவிட்டது.

எனவே இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்குவது கேள்விக்குறி தான்.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கவுள்ளார் கமல்.

இதனையடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் ஒரு படத்தில் கமல் நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இதை கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் தயாரிக்க உள்ளாராம்.

இதுகுறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

கூடுதல் தகவல்..: சூரியை வைத்து விடுதலை & சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன்.

இந்த இரு படங்களை முடித்ததும் கமல் படத்தை இயக்கலாம் வெற்றிமாறன்.

Ulaga Nayagan Kamal haasan movie updates

More Articles
Follows