தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1995 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் ‘முத்து’ படமும் 2001ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
கடந்த டிசம்பர் 8ம் தேதி இந்த இரண்டு படங்களும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட போது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்து புதிய படத்தை போல கொண்டாடி வருகின்றனர்.
‘முத்து’ படம் 4k தொழில்நுட்பத்தில் வழக்கமான காட்சிகளை கொண்டே வெளியானது. ஆனால் ‘ஆளவந்தான்’ படம் 45 நிமிடங்களில் குறைக்கப்பட்டு 4k தொழில்நுட்பத்தில் 1000 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
தற்போது 3 நாட்களை கடந்துள்ள நிலையில் வசூல் விவரங்கள் தெரிய வந்துள்ளது.
இதில் ‘முத்து’ படத்தை விட ‘ஆளவந்தான்’ படம் வசூலில் முந்தி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
‘ஆளவந்தான்’ தமிழகத்தில் ரூ.15 லட்சம் வசூலையும் ‘முத்து’ ரூ. 10 லட்சத்திற்கு குறைவான வசூலையும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த படங்கள் முதல் முறையாக வெளியானபோது ‘முத்து’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. ‘ஆளவந்தான்’ படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை ரீ-ரீலீசில் ரசிகர்களின் மனநிலை மாறி உள்ளதா என்ற கேள்வியில் இங்கு எழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.
Muthu and Aalavandhan rerelease Box office Collection