தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா காலத்தில் பல உயிர்களை காப்பாற்றியவர் சித்த மருத்துவர் வீரபாபு. இவர் தற்போது நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘முடக்கறுத்தான்’.
இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில்.. விழா நிறைவாக படக்குழுவை வாழ்த்திப் பேசிய தமிழறிஞரும் அரசியல்வாதியுமான தமிழருவி மணியன்…
” நான் வீரபாபுவிற்கு மிகவும் கடமைப் பட்டுள்ளேன். கரோனா பெருதொற்றில் பாதிக்கப் பட்டிருந்த போது அவர் அளித்த சிகிச்சையால் தான் நான் இப்போது உயிருடன் உள்ளேன்.ஆங்கில மருத்துவத்தால் நான் நிறைய இன்னல்களை சந்தித்தேன்.
என் மனைவி இதய நோயால் பாதிக்கப்பட்டாள். அவளுக்காக சிகிச்சை செய்ய நான் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டை கூட விற்று விட்டேன். அப்போது நடிகர் ரஜினிகாந்த் உதவுவதாக முன் வந்தார்.
ஆனால் அவரின் உதவியும் தவிர்த்து விட்டேன் நான் உண்மையாக நேர்மையாக வாழ வேண்டும் என நினைப்பவன். எந்த உதவியும் எதிர்பார்க்காதவன்.
லட்சக்கணக்கில் உதவி செய்தும் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு முறை பிரச்சனை வந்து கொண்டே இருந்தது. மிகப்பெரிய டாக்டர்கள் சிகிச்சை செய்தும் இந்தப் பிரச்சனை தொடர்ந்தது.
ரமணா படத்தில் விஜயகாந்த் சொன்னது போல.. நம்மிடம் பணம் பறிக்கும் கும்பல் தான் இந்த டாக்டர்கள்..
அதனால் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்”, என்று கேட்டு கொண்டார்.
விழா நிறைவாக படக்குழுவினர் அனைவருக்கும் மூலிகைகள் நிறைந்த பைகள் வழங்கப்பட்டன.
‘முடக்கறுத்தான்’ திரைப்படம் ஜனவரி-25 திரையரங்குகளில் வெளியாகிறது.
Tamilaruvi Maniyan praises Siddha treatment and Doctor Veerababu