தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘ஜில் ஜங் ஜக்’ படத்தை தொடர்ந்து அதிரடியாக நான்கு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சித்தார்த்.இதில் சசி இயக்கத்தில் ஜிவி. பிரகாஷுடன் ஒரு படம்.
இதனையடுத்து, ‘கப்பல்’ இயக்குனர் கார்த்திக் ஜி.க்ரிஷ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு ‘சைத்தான் கி பச்சா’ என இந்தியில் பெயரிட்டுள்ளனர். (பப்ளிகுட்டிக்கா?)
இதனைத் தொடர்ந்து முதன் முறையாக ‘கம்மராசம்பவம்’ என்ற மலையாள படத்தில் திலீப்புடன் இணைந்து நடிக்கிறார்.இந்த இரு படங்களை தொடர்ந்து, ஒரு படத்திற்கு ‘The House Next Door’ என்ற தலைப்பிட்டுள்ளனர்.இது தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.
Viacom18 மற்றும் Etaki Entertainment இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மிலண்ட் ராவ் இயக்கவுள்ளார்.இதில் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கவுள்ளதாக சித்தார்த் தெரிவித்துள்ளார்.
கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் சிம்புவுடன் இது நம்ம ஆளு ஆகிய படங்களில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.ஏற்கெனவே ‘ஜில் ஜங் ஜக்’ படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு வேண்டாம் என தமிழ் மொழி அல்லாத வார்த்தைகளில் பெயரிட்டார் சித்தார்த்.
தற்போதும் அவரது படங்களுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.