தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொதுவாக கமல்ஹாசனின் படங்கள் சர்ச்சைக்குள்ளாகும்.
ஆனால் சர்ச்சையின் உச்சகட்டமாக மாறிய படம் விஸ்வரூபம்.
இப்படம் தமிழகத்தில் வெளியாகவிட்டால், இந்த நாட்டை விட்டே வெளியேறுவேன் என கமல் தெரிவிக்கும் அளவுக்கு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.
பல கட்ட பிரச்சினைகளுக்கு பின்னர் இது கடந்த 2013ஆம் வெளியானது.
இதன் இரண்டாம் பாகம் இந்தாண்டு 2017ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த செப்டம்பர் மாதம் இதன் பாடல்கள் வெளியாகவுள்ளதாம்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.