IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

IPL தீம் – வாரணம் ஆயிரம் – துப்பாக்கி கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களுக்கு கிட்டார் வாசித்த பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ்.

2008 ஆம் ஆண்டு விக்ரம் நடித்த ‘பீமா’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கிடாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பிறகு கௌதம் மேனனின் ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் கிடாரிஸ்டாக பணியாற்றினார்.

விஸ்வரூபம், துப்பாக்கி, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், டி இமான் மற்றும் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 2015- வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இவர் கடந்த சில மாதங்களாக மூளைக் கட்டியால் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில், நேற்று இரவு கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Guitarist Steeve Vatz passes away

லைக்கா தயாரிப்பில் 2 ஹீரோயினுடன் ‘தீராக் காதல்’ செய்யும் ஜெய்

லைக்கா தயாரிப்பில் 2 ஹீரோயினுடன் ‘தீராக் காதல்’ செய்யும் ஜெய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’.

இந்தப்படத்தில் நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா, பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் ரோகின் வெங்கடேசன் மற்றும் G. R. சுரேந்தர்நாத் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார்.

தீராக் காதல்

கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை பிரசன்னா G.K. மேற்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு G.R.சுரேந்தர்நாத் வசனம் எழுத, T. உதயக்குமார் ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

சுப்ரமணியன் நாராயணன் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், G.K.M. தமிழ் குமரன் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருக்க,ரொமான்டிக் ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் தலைப்பும், தோற்றமும், லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இதனிடையே தமிழகத்தின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘தலைவர் 170’ என பிரம்மாண்ட பொருட் செலவில் திரைப்படங்கள் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தீராக் காதல்

Theera Kaadhal movie first look released of lyca

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் அப்டேட்டை வெளியிட்ட லைக்கா

பொன்னியின் செல்வன் 2 டிரைலர் அப்டேட்டை வெளியிட்ட லைக்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பொன்னியின் செல்வன் 2’ இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. சமீபத்தில் ‘அக நக’ என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் மார்ச் 29-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. டிரெய்லரின் நேரம் சுமார் 3 நிமிடங்கள் மற்றும் 25 வினாடிகள் என்று கூறப்படுகிறது.

Mani Ratnam’s ‘Ponniyin Selvan 2’ trailer to arrive on this date?

மூத்த நடிகையை திருமணம் செய்த ‘பசங்க’ கிஷோர்

மூத்த நடிகையை திருமணம் செய்த ‘பசங்க’ கிஷோர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பசங்க’ புகழ் நடிகர் கிஷோர் சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்டார். ​​’வானத்தைப் போல’ சீரியல் மூலம் பிரபலமானவர் டிவி நடிகை ப்ரீத்தி குமார், ‘ப்ரீத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது திருமண புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார், புதுமணத் தம்பதிகளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சென்னையில் ப்ரீத்தி மற்றும் கிஷோர் திருமணம், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்டமாக நடந்தது.

கிஷோர் அவரை விட நான்கு வயது மூத்த ப்ரீத்தியை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘Pasanga’ fame Kishore and serial actress Preethi Kumar get married

JUST IN அஜித் தந்தை மறைவுக்கு நேரில் விஜய் அஞ்சலி?!; கமல் – விக்ரம் சிம்பு இரங்கல்

JUST IN அஜித் தந்தை மறைவுக்கு நேரில் விஜய் அஞ்சலி?!; கமல் – விக்ரம் சிம்பு இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்.

நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம். இவருக்கு மோகினி என்கிற மனைவியும், அனில் குமார், அனூப் குமார் மற்றும் அஜித் குமார் என மூன்று மகன்களும் உள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அஜித்தின் தந்தை சுப்ரமணியம்.

எனவே சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார்.

தந்தையின் மரணத்தால் சோகத்தில் மூழ்கியுள்ள அஜித்திற்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

சுப்ரமணியத்தின் உடல் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் சக போட்டியாளராக சினிமாவில் கருதப்படும் நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என தகவல் வந்தது.

ஆனால் விஜய் நேரில் வரவில்லை என்றும் அவரது காரில் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி ஆனந்த் வந்தார் எனவும் கூறப்படுகிறது.. விஜய் சார்பாக அவர் அஞ்சலி செலுத்தி விட்டு சென்றார் என சொல்லப்படுகிறது.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அதில்…

தம்பி #Ajithkumar அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

‘விக்ரம் தன் ட்விட்டர் பதிவில்…

My heartfelt condolences to Ajith, his mother and family. The loss of one’s dad .. especially someone as caring and sweet as Subramaniam uncle can never be compensated. May his soul rest in peace. Stay strong Ajith. https://t.co/eY081S4WQG

சிம்பு தன் ட்விட்டர் பதிவில்…

My sincere condolences to Ajith sir & his family on the demise of his father
MR P.S Mani.

May god give you & your family strength through this difficult time & may his soul rest in peace

Vijay and Kamal Haasan condolence message for Ajith’s father

JUST IN புரிந்துக் கொள்ளுங்க ப்ளீஸ்.; தந்தையை இழந்த நடிகர் அஜித் அறிக்கை

JUST IN புரிந்துக் கொள்ளுங்க ப்ளீஸ்.; தந்தையை இழந்த நடிகர் அஜித் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணி என்ற எஸ் மணி இன்று காலமானார்.

தந்தையை இழந்த அஜித்திற்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பல திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் & அவரது சகோதரர்கள் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில்….

எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி (85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர். தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.

எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்.

அனுப் குமார்
அஜீத் குமார்
அனில் குமார்

Ajith statement regarding his father death

More Articles
Follows