பிக்பாஸ் வீட்டில் விஸ்வரூபம்-2 சிங்கிளை வெளியிடும் கமல்

பிக்பாஸ் வீட்டில் விஸ்வரூபம்-2 சிங்கிளை வெளியிடும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal going to launch single track of Viswaroopam 2 in Bigg Boss houseகமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2.

இதன் முதல் பாகம் கடந்த 2013ம் ஆண்டு வெளியானது.

முதல்பாகம் எடுக்கும்போதே இரண்டாம் பாகத்திற்கான பல காட்சிகளும் எடுக்கப்பட்டுவிட்டதாக பட குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது.

இந்த ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய பாடலை அடுத்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார்.

நாயகிகளாக ஆண்ட்ரியா, பூஜாகுமார் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையைமத்துள்ளார்.

Kamal going to launch single track of Viswaroopam 2 in Bigg Boss house

அங்கீகாரத்தை தருமா ஆர்.கே.நகர்.? காத்திருக்கும் இசை சுனாமி பிரேம்ஜி

அங்கீகாரத்தை தருமா ஆர்.கே.நகர்.? காத்திருக்கும் இசை சுனாமி பிரேம்ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Nagar movie and Isai Tsunami Premji music newsஇசை சுனாமி என்று பெயரிட்டுக் கொண்டு நடிகர் பிரேம்ஜி அவர்கள் சமீபத்தில் ஆர்.கே.நகர் படத்தில் ‘பப்பர மிட்டாய்’ என்ற ஒரு சென்சேஷனல் பாடலை கொடுத்திருக்கிறார்.

ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது யூடியூப் பார்வைகள் மற்றும் ஹாஷ்டேக் மூலம் மட்டுமே வரையறுக்கப்படுவதில்லை. மக்களை உடனடியாக முணுமுணுக்க,பாட வைப்பதிலும், விழாக்களில் ஒலிபரப்புவதிலும் இருக்கிறது.

இந்த பாடல் கல்லூரி மாணவர்களிடமும், டீனேஜர்களிடமும் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. ரயில் பயணங்களில் குழுவாக இணைந்து பாடி மகிழ்ச்சி அடைகிறார்கள்.

ஆம்,அது சம்பிரதாயமான கானா பாடல், அந்த ட்ரெண்ட் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது.

காஞ்சனா லோகன் எளிமையான பாடல் வரிகளும், கானா குணா அதை பாடிய விதமும் நிச்சயமாக அதை ஒரு வெற்றி பாடலாக்கி இருக்கிறது.

வடகறி இயக்குனரான சரவண ராஜன் இயக்கத்தில் வைபவ், சனா அல்தாஃப் மற்றும் சம்பத் ராஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

அஞ்சனா கீர்த்தி, சந்தனா பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ பிரபாகரன், கருணாகரன், அரவிந்த் ஆகாஷ், டி.சிவா மற்றும் சில முக்கிய நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள்.

“பிரேம்ஜி இசைத்திறமை மிகுந்த ஒரு கலைஞர். மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட ஒரு இசையமைப்பாளராகவே நான் அவரை உணர்கிறேன். இன்றைய ட்ரெண்டில் இருப்பது அவரின் பலம்.

அவருடைய வெளித்தோற்றத்துக்கு மாறாக, பிரேம்ஜி மிகவும் தீவிரமான இசையமைப்பாளர். பின்னணி இசை கோர்ப்பில் பிரேம்ஜி மிகச்சிறந்தவர்.

அவருக்கு ஒரு இசையமைப்பாளராக கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை ஆர் கே நகர் நிச்சயம் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன் என்றார் இயக்குனர் சரவண ராஜன்.

பிரேம்ஜி அமரன் தவிர்த்து, ஒளிப்பதிவாளராக எஸ்.வெங்கடேஷ் மற்றும் படத்தொகுப்பாளராக பிரவீன் கே.எல் ஆகியோரும் பணியாற்றியுள்ளனர்.

ஷ்ரத்தா எண்டர்டெயின்மெண்ட், பத்ரி கஸ்தூரிடன் இணைந்து, பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வி. ராஜலட்சுமி படத்தை தயாரிக்கிறார்.

RK Nagar movie and Isai Tsunami Premji music news

ரஜினியின் அறிமுக பாடலுக்கு மீண்டும் எஸ்பி. பாலசுப்ரமணியம் வாய்ஸ்

ரஜினியின் அறிமுக பாடலுக்கு மீண்டும் எஸ்பி. பாலசுப்ரமணியம் வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SP Balasubrahmanyam to croon for Rajinikanth in Anirudh musicரஜினிகாந்த் படங்களில் அவரது ரசிகர்கள் ஸ்டைல், ஆக்சன், பன்ச் டயலாக், உள்ளிட்ட பலவற்றை எதிர்பார்ப்பார்கள்.

அதில் முக்கியமாக அவரது அறிமுகப்பாடல் ஹைலைட்டாக இருக்க வேண்டும் என்பதுதான்.

வந்தேண்டா பால்காரன் (அண்ணாமலை), நான் ஆட்டோக்காரன் (பாட்ஷா), ஒருவன் ஒருவன் முதலாளி (முத்து), என் பேரு படையப்பா (படையப்பா), தேவுடா தேவுடா (சந்திரமுகி), புதிய மனிதா (எந்திரன்) உள்ளிட்ட பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அந்த பாடல்களை பெரும்பாலும் எஸ்.பி. பாலசுப்ரமணியமே பாடியிருப்பார்.

ஆனால் அண்மைக்காலமாக அறிமுகப்பாடல் இல்லாமல் போய்விட்டது.

ரஜினி படத்தை வித்தியாசமாக செய்கிறோம் என்கிற பெயரில் அவரை இயக்கிய ரஞ்சித் போன்ற இயக்குனர்கள் அறிமுகப்பாடல் இல்லாமலும் முக்கியமாக எந்த பாடலுக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் இல்லாமலும் செய்துவிட்டார்கள்.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு ரஜினியின் அறிமுகப் பாடலுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியம் குரல் கொடுக்கவுள்ளார்.

இப்பாடலுக்கு அனிருத் இசையமைக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது டார்ஜிலிங்கில் நடந்து வருகிறது.

SP Balasubrahmanyam to croon for Rajinikanth in Anirudh music

சர்கார் படத்திலும் ஆளப்போறான் தமிழன் சென்டிமெண்ட்

சர்கார் படத்திலும் ஆளப்போறான் தமிழன் சென்டிமெண்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar movie will have Mersal song sentimentஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து ஏஆர். ரஹ்மான் இசையமைத்த படம் மெர்சல்.

இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டாலும் பெரும் ஹிட்டான பாடல் ஆளப்போறன் தமிழன் என்ற பாடலாகும்.

தற்போது ‘மெர்சல்’ வெற்றியை தொடர்ந்து ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலாசிரியர் விவேக் அவர்கள் விஜய்யின் ‘சர்கார்’ படத்திற்கும் பாடல் எழுவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது… “மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைவது மிகப் பெருமையாக உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சேர்ந்து வேலை செய்து எனது கனவு. த்ரிலிங்கான வேலை, இரட்டிப்பான மகிழ்ச்சி” என குறிப்பிட்டுள்ளார்.

சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

Sarkar movie will have Mersal song sentiment

மைக்கேல் மதன காம ராஜன் ஸ்டைலில் உருவாகும் சூர்யா-37 படம்

மைக்கேல் மதன காம ராஜன் ஸ்டைலில் உருவாகும் சூர்யா-37 படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Suriya 37 will have connection with Michael Madana Kama Rajan movieசெல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘என்ஜிகே’ படத்தை முடித்து விட்டார் சூர்யா.

இதனையடுத்து தன் 37வது படத்திற்காக கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக முதற்கட்டப் படப்பிடிப்புக்காக படக்குழு லண்டன் செல்ல உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவின் வேடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

இதில் நான்கு கெட் அப்புகளில் சூர்யா நடிக்கவுள்ளாராம்.

ஏற்கெனவே மைக்கேல் மதன காம ராஜன் என்ற படத்தில் கமல் நான்கு வேடங்களில் நடித்திருந்தார். தற்போது சூர்யாவும் அவ்வாறு நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் மோகன்லால், சாயிஷா, அல்லு சிரிஷ் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தை லைகா தயாரிக்கிறது.

Suriya 37 will have connection with Michael Madana Kama Rajan movie

Michael Madana Kama Rajan

சினிமா பி.ஆர்.ஓ. சங்கத் தேர்தலில் தலைவரானார் விஜயமுரளி

சினிமா பி.ஆர்.ஓ. சங்கத் தேர்தலில் தலைவரானார் விஜயமுரளி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

PRO Vijaya Muralee selected as President in PRO Union electionசினிமா துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் பி.ஆர்.ஓ.க்கள்.

தமிழில் இவர்களை மக்கள் தொடர்பாளர்கள் என்போம்.

இவர்களது சங்கத் தேர்தல் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும்

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் செயலாளராக போட்டியின்றி பெருதுளசி பழனிவேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் டைமண்ட் பாபுவும், பொருளாளராக இருக்கும் விஜய முரளியும் போட்டியிட்டனர்.

இதில் விஜய முரளிக்கு விட்டுக்கொடுத்து டைமண்ட் பாபு வாபஸ் பெற்றார். அதனை தொடர்ந்து விஜய முரளி ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்:

துணை தலைவர்: இராமானுஜம் மற்றும் கோவிந்தராஜ்

இணை செயலாளர் : குமரேசன் மற்றும் ஆனந்த்

பொருளாளர்: யுவராஜ்

செயற்குழு உறுப்பினர்களாக வி. பி. மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில்முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
யூனியன் தேர்தலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கிரிதரன் நடத்தி கொடுத்தார்.

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் பிலிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்துக்கள்.

PRO Vijaya Muralee selected as President in PRO Union election

More Articles
Follows