ஆண்ட்ரியாவின் NO ENTRY.; அஜிஸ் இசையில் நாளை பாடல்கள் வெளியீடு

ஆண்ட்ரியாவின் NO ENTRY.; அஜிஸ் இசையில் நாளை பாடல்கள் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகை பாடகி என பன்முகத் திறமையாளர் ஆண்ட்ரியா.

தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், தரமணி, வடசென்னை என பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் இவர்.

பல நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பல பாடல்களை இவர் பாடியுள்ளார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய… ” ஊ சொல்றியா மாமா…” பாடல்… சூப்பர் ஹிட்டானது.

தற்போது மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் நாஞ்சில் இயக்கும் ‘கா’ என்ற படத்தில் புகைப்பட கலைஞராக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.

இத்துடன் NO ENTRY படமும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு ரெடியாகியுள்ளது.

இயக்குநர் அழகு கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். இவர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

‘நீயா 2’ படத்தை தயாரித்த ஜம்போ சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது,

ஒளிப்பதிவாளராக ரமேஷ் சக்கரவர்த்தி, இசையமைப்பாளராக அஜிஸ், எடிட்டராக பிரதீப் ஈ.ராகவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இதில் ஆண்ட்ரியா உடன் ரண்யா, மும்பை சாக்‌ஷி, ஜெயஸ்ரீ, சதீஷ், ஆதவ் கண்ணதாசன், டில்லி, கோகுல் ‘மானாட மயிலாட’ மானஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்காகப் பயிற்சி அளிக்கப்பட்ட15 ஜெர்மன் ஷெப்பர்டு நாய்கள் பயன் படுத்தப்பட்டுள்ளன. சிரபுஞ்சியில் 45 நாட்கள் தங்கி முழு படப்பிடிப்பையும் முடித்துள்ளது படக்குழு.

இந்த நிலையில் நாளை NO ENTRY படத்தின் இசை வெளியீடு நடைபெறவுள்ளது.

Andrea starrer no entry album will be out tomorrow

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா.; தயாரிப்பாளர் & இயக்குனர் இவர்களா.?

சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஜோடியாகும் சமந்தா.; தயாரிப்பாளர் & இயக்குனர் இவர்களா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் மே மாதம் திரைக்கு வருகிறது.

இதன் பின்னர் அவரது நடிப்பில் ‘அயலான்’ படம் திரைக்கு வரத் தயாராகி வருகிறது.

நேரடி தெலுங்கு படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்பட படப்பிடிப்பு காரைக்கால் & புதுச்சேரி பகுதிகளில் நடைபெற்றது.

இதனையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பிலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார்.

ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனலும், சோனி பிக்சர்ஸ் ஃபிலிம்ஸ் இந்தியாவும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் 22 வது படத் தகவல்கள் வெளியாகியுள்ளது .

நாயகியாக சமந்தா நடிக்க வேல்ஸ் பிலிம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோனி அஸ்வின் இயக்கவிருக்கிறாராம்.

ஏற்கெனவே சீமராஜா படத்தில் சமந்தா & சிவகார்த்திகேயன் ஜோடி இணைந்து நடித்திருந்தனர்.

எனவே விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என காத்திருக்கலாம்.

Sivakarthikeyan and Samantha joins for a new film?

ஆண்களை வெறுக்கும் பெண்களின் காதல்..; லெஸ்பியனை ஊக்குவிக்கும் ராம் கோபால் வர்மா

ஆண்களை வெறுக்கும் பெண்களின் காதல்..; லெஸ்பியனை ஊக்குவிக்கும் ராம் கோபால் வர்மா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரைப்பட வரலாற்றில் வியத்தகு மாற்றங்களை தந்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் லேட்டஸ்ட் திரைப்படம் ‘காதல் காதல்தான்’ .

ஆண்களை வெறுக்கும் இரு பெண்களுக்குள் காதல் வர, ஓர் பாலின காதலை காப்பாற்றிக்கொள்ள அவர்கள் போராடுவதே இந்தப்படம். இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. Artsee Media / Rimpy Arts International இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தி மொழியில் தயாரான இப்படம் ஏப்ரல் 8 ஆம் தேதி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பின் முன் வெளியீட்டை ஒட்டி இயக்குநர் ராம் கோபால் வர்மா நாயகிகள் நைனா கங்குலி, அப்ஷரா ஆகியோர் இன்று சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.

இந்நிகழ்வில்

நாயகி நைனா கங்குலி பேசியதாவது…

ராம் கோபால் வர்மா சாருக்கு நன்றி, என் மீது நம்பிக்கை வைத்து என்னை தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இப்போது புதுமையான முயற்சியான இந்தப்படத்தில் நடிக்க வைத்துள்ளார். இந்த மாதிரி கதையை எடுப்பது மிகவும் கடினம். வழக்கமாக நாயகன் நாயகி காதலிப்பார்கள், ஆனால் இதில் இரண்டு பெண்கள் காதலிக்கிறார்கள். இதில் நடிப்பது எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது. இந்தப்படம் ஆரம்பித்த போது, நான் ஆண் போல் நடிக்க வேண்டும் என்றார், அதற்காக நான் சில பயிற்சிகளை மேற்கொண்டேன், ஆண்களின் உடல் மொழிகளை பார்த்து கற்றுக்கொண்டு நடித்திருக்கிறேன்.

இங்கு லெஸ்பியன் உறவு குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அது அவர்கள் குற்றம் இல்லை, அது ஹார்மோன் சம்பந்தப்பட்டது. அவர்களின் கதையை சொல்லும் இந்தபடத்தில் நடித்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நாயகி அப்ஷரா பேசியதாவது…

இங்கு இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தெலுங்கு, தமிழில் இந்தப்படம் வெளியாவது மிக மகிழ்ச்சி. காதல் காதல் தான் மூலம் நான் இங்கு அறிமுகமாவது மிகவும் உற்சாகம் அளிக்கிறது. இங்கு நிறைய பெரிய நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். படம் ஓரின சேர்க்கையாளர்கள் பற்றியது.

இது நம் சமூகத்தில் குற்றமாக பார்க்கப்படுகிறது. ராம் கோபால் வர்மா சாரின் தெளிவான பார்வை என்னை வியக்க வைத்தது. ஓரின சேர்க்கையாளர்கள் குற்றவாளிகள் அல்ல அவர்களும் கடவுளின் குழந்தைகள் தான்.

இது ஒரு கமர்ஷியல் படம், இதில் இரண்டு பெண்களுக்கிடையேயான காதல் இருக்கிறது. பார்வையாளர்கள் அவர்களின் காதலை புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். இரண்டு ஹிரோயின்களுக்கிடையே டூயட் சாங் இருப்பது இதுவே முதல் முறை. ஒரு புதுமையான படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. ராம் கோபால் சாருக்கு நன்றி. எல்லோரும் படம் பாருங்கள் நன்றி.

இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியதாவது…

இந்தப்படத்தின் ஐடியா எனக்கு வந்ததே ஒரு வித்தியாசமான அனுபவம், ஓரின சேர்க்கையாளர்களை நாம் பரிதாபமாக தான் பார்க்கிறோம், அரசாங்கமே அனுமதி அளித்தாலும் நம் பார்வை மாறுவதில்லை.

ஒரு காதல் ஜோடியை வைத்து நிறைய க்ரைம் திரில்லர் கதைகள் வந்துள்ளது, அதை மாற்றலாம் என்று தான் இதை எழுதினேன்.

இரண்டு இளம் பெண்கள், அவர்கள் ஏன் லெஸ்பியன் உறவுக்கு செல்கிறார்கள், அவர்களை சமூகம் எப்படி பார்க்கிறது அவர்களின் பிரச்சனை என்ன என்று யோசிக்கும்போது அதனை மையமாக வைத்து இதை உருவாக்கலாம் என்று இப்படத்தை எடுத்தோம். முதலில் நைனா கங்குலி இதற்கு தயங்கினார் அவருக்கு ஐடியா பிடித்திருந்தது ஆனாலும் தயக்கம் இருந்தது.

அதன் பிறகு ஒப்புக்கொண்டார். படமாக்குவதில் நிறைய சவால்கள் இருந்தது. இரண்டு ஹிரோயின்களை வைத்து டூயட் பாடல் எடுப்பதே இந்திய சினிமாவில் வித்தியாசம் தான். நைனா கங்குலி, அப்சரா இருவருக்கும் அவர்களின் தைரியத்திற்கும் நன்றி. அவர்களால் தான் இப்படம் சாத்தியமானது. படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இப்படத்தில் நைனா கங்குலி, அப்சரா இருவரும் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ராஜ்பால் யாதவ், காஸி, மிதுன் புரந்தாரி முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப குழுவினர்
எழுத்து இயக்கம் – ராம் கோபால் வர்மா
ஒளிப்பதிவு – மல்ஹர்பத் ஜோஷி
எடிட்டர் – கமல் ரமடுகு
பாடல்கள் – பிரவீன் பால்
பின்ணனி இசை – ஆனந்த்
கலை இயக்கம் – மதுகர் தேவாரா
தயாரிப்பு – Artsee Media / Rimpy Arts International

குரபரன் இண்டர்நேஷனல் நிறுவனம் தமிழகத்தில் இப்படத்தை வெளியிடுகின்றனர். ஏப்ரல் 8 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

It’s not an easy thing to shoot a duet song featuring two women in love says director Ram Gopal Varma

நடிகர் ஆதியின் பாட்னராக மாறிய ஹன்சிகா.; வாழ்த்திய ஆர்யா

நடிகர் ஆதியின் பாட்னராக மாறிய ஹன்சிகா.; வாழ்த்திய ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் தயாராகியிருக்கும் ‘பாட்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் ஆர்யா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் ‘பாட்னர்’.

இதில் நடிகர் ஆதி நடிக்க அவருடன் இணைந்து நடிகை ஹன்சிகா மொத்வானி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகை பாலக் லால்வானி, யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, பாண்டியராஜன், முனிஷ் காந்த், தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சபீர் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கோமாளி’ படப்புகழ் பிரதீப் ராகவ் படதொகுப்பு செய்திருக்கும் இப்படத்தின் சண்டைக்காட்சிகளை ‘பில்லா’ ஜெகன் அமைத்திருக்கிறார்.

ராயல் ஃபர்சுனா கிரியேசன்ஸ் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

Adhi and Hansika joins for Partner

தரகர்களால் தரங்கெட்ட தனியார் கல்வி நிறுவனங்களை எச்சரிக்கும் ‘செல்ஃபி’ – தங்கர் பச்சான்

தரகர்களால் தரங்கெட்ட தனியார் கல்வி நிறுவனங்களை எச்சரிக்கும் ‘செல்ஃபி’ – தங்கர் பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலைப்புலி எஸ்.தாணு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் செல்ஃபி. இதில், ஜி.வி.பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கவுதம் வாசுதேவ் மேனன், வாகை சந்திரசேகர், சுப்பிரமணிய சிவா, டி.ஜி.குணாநிதி மற்றும் தொழிலதிபர் சாம் பால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான மதிமாறன் இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவையும், எஸ்.இளையராஜா படத்தொகுப்பையும் செய்துள்ளனர்.

இப்படம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக செல்ஃபி படத்தை பார்த்த இயக்குனர் தங்கர் பச்சான், படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்.

மேலும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

அதில்,

‘எச்சரிக்கை’

கல்விக்கூடங்கள் பணம் கொள்ளையடிக்கும் கூடங்களாக உருவாக்கப்பட்டப்பின் தமிழ் நாடு அதன் கல்வியின் தரத்தை இழந்து வருகின்றது.

இந்த தனியார் கல்விக்கூடங்கள் எப்படிப்பட்ட தரகர்களை உருவாக்கி வைத்துள்ளது.

இதில் அப்பாவி பெற்றோர்களும் மாணவர்களும் தொடர்ந்து பலியாகிக் கொண்டிருக்கிறார்கள் எனும் உண்மையை நேர்த்தியாக பொருள் உரைக்க பதிவு செய்வதுதான் “செல்பி” திரைப்படம்.

மதிமாறன் எனும் புதிய இயக்குநரின் ஆற்றலும் திறமையும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

அதே போன்று குணாநிதி எனும் அறிமுக நடிகரின் இயல்பான மனம் கவரும் நடிப்பாற்றல் நம்பிக்கை ஊட்டுகின்றன. GV பிரகாஷ் முதன்மை பாத்திரத்தை தாங்கி நிற்கின்றார்! இதுவரை இல்லாத அளவிற்கு இப்படம் அவரின் திரைப்பயணத்தை மேலும் விரிவுப்படுத்தும்!

முழு திரைக்கதையின் மையப்புள்ளியான எதிர் நாயகன் பாத்திரத்தில் கவுதம் மேனன் நடிப்புதான் இத்திரைப்படத்தின் கருவிற்கு மேலும் வலுவூட்டுகின்றது.

திரையில் தோன்றும் அனைத்து நடிகர்களும் சிறு பிசகில்லாமல் நடிப்பது ஒன்றே இயக்குநரின் திறனை பறை சாற்றும். கடலூர் மாவட்ட வட்டார வழக்கு மிக சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களைக் காப்பாற்றுவதாக கூறப்படும் நான்கு தூண்களும் அதன் மீதான நம்பிக்கையினை இழந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படங்கள் தான் அரிதாக எப்பொழுதாவது சமூகத்தின் சிக்கல் சீர்கேடுகள் குறித்து கேள்வி எழுப்புகின்றன.

“செல்பி” அதனை திறம்பட செய்திருக்கின்றது. வெறும் பணப்பைகளை நிரப்புவதற்காக மட்டுமே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இடையில் இப்படைப்பின் வரவு கவனத்துக்குறியது.

– தங்கர் பச்சான்.

Director Thangar Bachchan praises Selfie movie

A – 2 கட்ஸ் டூ U – 0 கட்ஸ்..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ படக்குழு

A – 2 கட்ஸ் டூ U – 0 கட்ஸ்..; மகிழ்ச்சியில் ‘மாயோன்’ படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகில் வலுவான கதைகளை மையப்படுத்தி சிறந்த திரைப்படங்களை உருவாக்கி வெளியிடுவதில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் பட நிறுவனம் முன்னணி நிறுவனமாக வலம் வருகிறது.

இந்த நிறுவனம் சார்பில் அடுத்ததாக ‘மாயோன்’ எனும் புதிய திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராக இருக்கிறார்கள்.

‘மாயோன்’ படத்தின் டீசர் வெளியாகி, அதில் இடம்பெற்ற புதிரான புராண இதிகாச கதையால், ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டு மயக்கும் மெட்டுகளுடனான பாடல்கள் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

தயாரிப்பு நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ‘சைக்கோ’ திரைப்படம் ஏ சான்றிதழ் பெற்றிருந்தது, அதிலிருந்து மாறுபட்டு, ‘மாயோன்’ படம் ‘யு’ சான்றிதழ் பெற்றுள்ளது.

இப்படம் சென்சாரில் எந்த ஒரு காட்சியும் வெட்டப்படாமல் முழுப்படமும் அப்படியே தணிக்கை பெற்று, பாரட்டுக்களை குவித்துள்ளது. இதற்காக மத்திய தணிக்கை வாரியத்திற்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் பார்வைத்திறன் சவால் உள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையில் – அவர்களுக்கு சௌகரியமான முறையில் திரைப்படத்தை அவர்கள் உணரும் அனுபவத்தை வழங்க, ஆடியோ விளக்கத்துடன் இந்திய அளவில் முதல் முறையாக ‘மாயோன்’ திரைப்படத்தின் டீஸர் வெளியானது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக பெரிய திரையில் முழு அனுபவத்தை பெறுவதற்காக தற்போது படக்குழு ‘ஆடியோ விளக்க’ பாணியிலான திரைப்பட பதிப்பில் ஈடுபட்டுள்ளது.

நடிகர் சிபி சத்யராஜ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் ஒரு புராண திரில்லர் திரைப்படம்’ மாயோன்’. இதன் கதை ஒரு பழமையான கோவிலின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் ‘மாயோன்’ படத்தின் திரைக்கதையை எழுத, மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா தெய்வீக பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார்.

மாயோனுக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sibiraj starrer Maayon gets “U” certificate

More Articles
Follows