முதுகெலும்பு இல்லாத கோழை கமல்… எச். ராஜா கடும் தாக்கு

Kamal haasan and H Rajaகமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகளால், தமிழக அரசியல் களம் பயங்கர சூடுபிடித்துள்ளது.

மக்கள் பிரச்சினைகள் பல இருந்தாலும், அரசியல்வாதிகள் பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.

கமலை ஸ்டாலின், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள் ஆதரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜ கட்சியை சேர்ந்த எச். ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

முடிவெடுத்தால் நான் முதல்வர் என்று கமல் ட்விட்டர் போட்டு இருப்பதாக அறிந்தேன்.

எல்லாருக்கும் கனவு காண உரிமை உள்ளது. அதுபோல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் அச்சமில்லாதவர்களாக இருக்க வேண்டும்.

விஸ்வரூபம் படத்தின் பிரச்சினையின் போது, அழுது புலம்பி கதறியவர் கமல்.

பிரச்சினையை சந்திக்க தைரியமில்லாமல் இந்த நாட்டை விட்டே ஓடி விடுவேன் என கூறியிருந்தார்.

முதுகெலும்பில்லாத கோழை கமல். அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள். என பேட்டியளித்துள்ளார் எச் ராஜா.

Overall Rating : Not available

Related News

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில்…
...Read More
கமல்ஹாசன் இயக்கி தயாரித்து நடித்துள்ள படம்…
...Read More
பொதுவாக கமல்ஹாசனின் படங்கள் சர்ச்சைக்குள்ளாகும். ஆனால்…
...Read More

Latest Post