தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் படம் ‘கோலமாவு கோகிலா’.
‘லைகா புரொடக்ஷன்ஸ்’ தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்க, அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முதலில் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் இப்போது ‘கோலமாவு கோகிலா’வின் ரிலீஸை ஒரு வாரம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியாகும் என்ற புதிய தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
கமலின் ‘விஸ்வரூபம்-2’ ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.