சீமராஜா-வுடன் இணைந்து ட்விட்டரில் கலக்கும் கடம்பவேல் ராஜா

Along with Seemaraja Kadambavel Raja too trending in twitter‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என்று தொடர்ந்து இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் – இயக்குநர் பொன்ராம் கூட்டணியின் மூன்றாவது படம் ‘சீமராஜா’.

இவர்களது கூட்டணியின் முந்தைய இரண்டுப் படங்களைக் காட்டில் மிகப்பெரிய பொருட்ச்செலவில், பிரம்மாண்டமான முறையில் இப்படம் உருவாகியுள்ளது.

சமந்தா ஹீரோயின், சிம்ரன், நெப்போலியன், மலையாள நடிகர் லால் என்று பெரிய நட்சத்திரப் பட்டாளம் என்று அனைத்திலும் பிரம்மாண்டத்தை கொண்டிருக்கும் இப்படம், கதைக்களத்திலும் சில வித்தியாசங்களோடு உருவாகியுள்ளது.
*தமிழர் மன்னனாக நடித்து *பாகுபலி* பாராட்டை பெற்ற சிவகார்த்திகேயன் *
சிவகார்த்திகேயன், பொன்ராம் படங்கள் என்றாலே இப்படி தான் இருக்கும், என்ற இமேஜ் உருவாகிவிட கூடாது, என்பதற்காக இப்படத்தின் கதையை சற்று வித்தியாசத்தை கையாண்டிருக்கும் பொன்ராம், படத்தில் சிவகார்த்திகேயனை தமிழ் மன்னனாக நடிக்க வைத்திருக்கிறார்.

படத்தில் சில நிமிடங்கள் வரும் மன்னர் காலத்து எபிசோட்டுக்காக பல கோடிகளை தயாரிப்பு தரப்பு செலவு செய்திருப்பதோடு, சிவகார்த்திகேயனும் தனது உருவத்தை மாற்றி, அந்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார்.
* யாரு மாஸ்ன்னு விவஸ்தை இல்லையா?; சிவகார்த்திகேயனை சீண்டினாரா அருண்விஜய்? *
சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலரில் இடம்பெற்ற அந்த ராஜா கெட்டப் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அந்த ராஜாவின் கதாபாத்திர பெயர் தற்போது வெளியாகியுள்ளது.

’கடம்பவேல் ராஜா’ என்ற மன்னராக சிவகார்திகேயன் நடித்திருக்கிறார். அவர் பரம்பரையை சேர்ந்த சீமராஜாவாக மற்றொரு வேடம், என்று சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.
* யாரை பார்த்தும் பொறாமையும் பயமும் இல்லை.. : சிவகார்த்திகேயன் *
இந்த கடம்பவேல் ராஜா என்ற பெயரை ‘சீமராஜா’ படக்குழு நேற்று இரவு வெளியிட்டது. வெளியான ஒரு நில மணி நேரங்களில் டிவிட்டரில் டிரெண்டாகிய கடம்பவேல் ராஜா, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

’சீமராஜா’ வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி உலகம் மூழுவதும் வெளியாகிறது.

Along with Seemaraja Kadambavel Raja too trending in twitter

Overall Rating : Not available

Latest Post