தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அபுதாபியில் நடைபெற்ற IIFA விருது விழா நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் கடந்த ஓரிரு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனும் ஐ ஐ எப் ஏ விருது விழாவில் பங்கேற்ற நிலையில் செய்தியாளர்கள் அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்..
‘பொன்னியின் செல்வன் 2’ பார்த்துவிட்டு மனைவி ஐஸ்வர்யா ராயை வாழ்த்தினீர்களா? அவரை பாராட்டினீர்களா?’ என கேட்டனர்.
“ஐஸ்வர்யா ராய் இதுநாள் வரை நடித்த படங்களில் ஆகச் சிறந்த படம் என்றால் அது ‘பொன்னியின் செல்வன் 2’ தான் என அவரிடமே கூறிவிட்டேன்.
அவரைக் கண்டு நான் பெருமைப் படுகிறேன். இது போன்ற கதாபாத்திரத்தை கையாள்வது மிகவும் கடினம்.” என தெரிவித்தார்.
Aishwarya Rai’s best movie PS2.; Abhishek Bachchan interview in Abu Dhabi