தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் மலையாள நடிகர் ஜெயராம்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்களில் ஜெயராமின் நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது.
தற்போது கன்னட பட உலகிலும் நுழைந்துள்ளார் ஜெயராம்.
ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் மாஸ் காட்டிய சிவராஜ்குமார் நடித்து வரும் ‘கோஸ்ட்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ஜெயராம்.
மேலும் மலையாளத்தில் ‘ஆப்ரஹாம் ஒஸ்லர்’ என்கிற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார் ஜெயராம்.
இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.
அதன்படி ஒரு புகைப்படத்தில் ‘ஆப்ரஹாம் ஒஸ்லர்’ பட சூட்டிங் கில் மம்முட்டி கலந்து கொண்ட படங்கள் வெளியாகி உள்ளது.
‘அஞ்சாம் பாதிரா’ பட இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.
தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயராம் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Jayaram acting with Sivarajkumar and Mammotty