தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விக்ரம் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிய ‘பொன்னியின் செல்வன் 2’ படம் மாபெரும் வெற்றிப் பெற்று வருகிறது.
விக்ரம் தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ நடித்து வருகிறார்.
இப்படத்தில் விக்ரம், பார்வதி திருவோடு, மாளவிகா மோகனன், பசுபதி மாசிலாமணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், சென்னையில் ‘தங்கலான்’ படப்பிடிப்பில் பயிற்சியின் போது நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காயம் காரணமாக ‘தங்கலான்’ படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்து கொள்ளவில்லை.
நடிகர் விக்ரம் விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
மேலும், ‘தங்கலான்’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vikram suffers injury at thangalaan shooting