ஒரே நேரத்தில் மூன்று.; ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ரூ.150 கோடி.; கல்லா கட்டும் கார்த்தி படங்கள்

ஒரே நேரத்தில் மூன்று.; ப்ரீ ரிலீஸ் பிசினஸில் ரூ.150 கோடி.; கல்லா கட்டும் கார்த்தி படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைத்துறையில் அனைத்துத் தொழில்நுட்பமும் அறிந்தவராக, பன்முக திறமையாளராக வலம் வரும் கார்த்தி தற்போது மூன்று பிரமாண்ட படங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார்.

கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பல விருதுகளை வென்ற திரைப்பட இயக்குநர் ராஜு முருகன், கார்த்தியின் இந்த 25 வது படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

K.E.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் (சூது கவ்வும், காதலும் கடந்து போகும்) புகழ் இயக்குநர் நலன் குமாரசாமியின் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ஆகஸ்ட் மாதம் கார்த்தி கலந்துக் கொள்ளவிருக்கிறார்.

இடையில், ஜப்பான் படத்தின் கடைசி பாடல் காட்சிக்காக நேரம் ஒதுக்கியுள்ளார். ஜப்பான் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், மேலும் இந்த பிரம்மாண்டமான பாடலை படமாக்க பல கோடி மதிப்பிலான செட் அமைக்கப்படுகிறது.

பாடல் படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதத்திற்குள் நலன் படத்தின் படப்பிடிப்பை முடிக்க கார்த்தி திட்டமிட்டுள்ளார்.

இந்த இரண்டு பெரிய படங்களை முடித்த பிறகு, நடிகர் கார்த்தி நவம்பரில் தனது 27வது பட இயக்குனர் பிரேம் குமார் உடன் இணைந்து பணியாற்றவுள்ளார். #கார்த்தி27 படத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னணி ஆளுமையான பிசி ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் #கார்த்தி27ஐ தயாரிக்கிறது.

2022 ஆம் ஆண்டில் PS1, விருமன் மற்றும் சர்தார் என மூன்று பிளாக்பஸ்டர்களை தந்ததன் மூலம் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளார் கார்த்தி.

மேலும் 2023 ஆம் ஆண்டை பொன்னியின் செல்வன் 2 எனும் ப்ளாக்பஸ்டர் வெற்றியுடன் துவங்கியுள்ளார். அடுத்ததாக ஜப்பான் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளிவரத் தயாராகி வருகிறது.

கார்த்தி இந்த ஆண்டிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதால், தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

படப்பிடிப்புக்கு முன்பாகவே சிறந்த OTT தளங்கள், சாட்டிலைட் சேனல்கள், மியூசிக் லேபிள்கள் மற்றும் முக்கிய விநியோகஸ்தர்களிடமிருந்து வியாபார அழைப்பு வரப்பெற்று, லாபகரமான ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எனப்படும், பட வெளியீட்டுக்கு முன்பான வியாபாரத்தில் தற்போது நடிகர் கார்த்தியின் படங்கள் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டுள்ளது. தொடர்ந்து, தீவிரமாகப் படங்களில் கார்த்தி நடித்து வருவது திரைத்துறையினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Karthi movie pre release business reaches 150c

ஷாருக்கானை ‘வந்த எட(ம்)த்திற்கு அழைத்துச் சென்ற அட்லி – அனிருத்

ஷாருக்கானை ‘வந்த எட(ம்)த்திற்கு அழைத்துச் சென்ற அட்லி – அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியா முழுதும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவான்’ படத்தின் முதல் பாடலான ‘வந்த எடம்’ இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்‌ஷன்-அதிரடி காட்சிகள் மற்றும் அட்ரினலின்-பம்பிங் சாகசத்தால் நிறைந்த ப்ரிவ்யூ பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய பிறகு, இப்படம் இப்போது அனிருத்தின் இசையமைப்பில் “வந்த எடம்” பாடல் இணையத்தைத் தீப்பிடிக்க வைத்துள்ளது.

கொண்டாட்டமிக்க ‘வந்த எடம்’ பாடல், அனிருத்தின் இசையில் உயிரை அதிரச் செய்யும் ஒலியோசையில், அனைவரையும் உற்சாக ஆட்டமாட வைக்கிறது. இந்த பாடலுக்குப் புகழ்பெற்ற நடன இயக்குநர் ஷோபி நடனம் அமைத்துள்ளார், அவரது நடன அமைப்பு பார்வையாளர்களைத் துள்ளல் நடனம் போட வைக்கிறது.

பிரபல முன்னணி பாடலாசிரியர் விவேக் எழுதிய பாடல் வரிகளுடன், அனிருத்தின் சமீபத்திய வெற்றிகளின் வரிசையில் ‘வந்த இடம்’, பாடலும் ஜொலிக்கிறது. ‘ஜவான்’ பட முழு ஆல்பத்திற்கும் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல் பாடலை தன் குரலில் பாடியுள்ளார் அனிருத்.

படத்தின் துடிதுடிப்பை, துள்ளலை, உணர்வாக வெளிப்படுத்தும் இந்த டான்ஸ் நம்பர் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு விருந்தாக அமைந்துள்ளது.

ஜவான்

தலைவர் அலப்பறை, கோவில், வாத்தி கம்மிங், அரபி குத்து போன்ற சமீப காலங்களில் மிகப்பெரிய ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த அனிருத் “வந்த எடம்” பாடல் குறித்துக் கூறுகையில்…

ஜவானின் “வந்த எடம்’’ பாடல் இப்படத்தில் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான பாடல். இந்தப்படத்திற்காக நான் இசையமைத்த முதல் பாடல் இது.

மேலும் நடிகர் ஷாருக்கானுக்கு நான் இசையமைப்பது இதுவே முதன்முறையாகும், அவர் எங்கள் தலைமுறையின் சின்னமாக விளங்குபவர் அவருடைய நட்சத்திர அந்தஸ்துக்கு நியாயம் செய்ய வேண்டுமென்பதில் நான் உறுதியாக இருந்தேன்.

இவ்வளவு திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணிபுரிவது உண்மையிலேயே மிக மகிழ்ச்சியாக இருந்தது, இந்த பாடலை இவ்வளவு பெரிய அளவில் மிகப்பெரிய விஷுவல் விருந்தாக மாற்றியதில், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு மிகப்பெரிது.

இது ஒரு சவாலான மற்றும் ஆக்கப்பூர்வமான, நிறைவான பயணம், மூன்று மொழிகளில் இந்தப் படத்திற்கான ஆல்பத்தை உருவாக்கியது சிறந்த அனுபவம். ‘ஜவான்’ படத்தின் இசையை நான் ரசித்த அளவுக்கு மக்கள் கண்டிப்பாக ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.”

ஜவான் படத்தில் இடம் பெற்றுள்ள ‘வந்த எடம்’ பாடலின் படப்பிடிப்பு ஐந்து நாட்கள் நடந்துள்ளது, நடிகர் ஷாருக்கானின் ஈடு இணையற்ற நடன ஆற்றல் மற்றும் 1000க்கும் மேற்பட்ட திறமையான பெண் நடனக் கலைஞர்களும் இணைந்து இந்த பாடல் பிரமாண்டமும் கொண்டாட்டமும் நிறைந்ததாக உருவாகியுள்ளது .

ஜவான்

முழு தேசத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் வசீகரிக்கும் காட்சிகள் மற்றும் அனிருத்தின் துள்ளல் இசையுடன் இணைந்து அனைவரும் ரசிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது,

இந்தப் பாடல் இந்தியாவின் அனைத்து முன்னணி மொழிகளிலும் வெளியாகியுள்ளது , குறிப்பாக இந்தப் பாடல் தமிழில் ” வந்த எடம் ” என்றும், ஹிந்தியில் ” ஜிந்தா பந்தா” என்றும் மற்றும் தெலுங்கில் ” தும்மே துலிபெளா ” என்றும் வெளியாகியுள்ளது.

ஜவான் படத்தின் இந்த ரசனை மிகுந்த பாடலை கேட்கும் அனுபவத்தைத் தவறவிட்டு விடாதீர்கள்.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜவான்

Shah Rukh Khan in Vandha Edam Jawan’s First Song out

தம்பதிகளின் காதலை ‘இறுகப்பற்று'(றி) சொல்ல வரும் விக்ரம் – ஷ்ரத்தா – விதார்த்

தம்பதிகளின் காதலை ‘இறுகப்பற்று'(றி) சொல்ல வரும் விக்ரம் – ஷ்ரத்தா – விதார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெவ்வேறு விதமான கதைக் களங்களைச் சொல்வதிலும், படைப்பாற்றலின் எல்லைகளை விரிவாக்குவதிலும் பெயர் பெற்ற தயாரிப்பு நிறுவனம் பொடன்ஷியல் ஸ்டூடியோஸ். ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் மூலம் இந்திய சினிமாவுக்குத் தரமானத் திரைப்படங்களைத் தருவதில் தொடர்ந்து தங்களின் பங்கைச் சிறப்பாக செய்து வருகிறது.

தற்போது பொடன்ஷியல் ஸ்டூடியோஸின் அடுத்தத் தயாரிப்பான ‘இறுகப்பற்று’ வெளியீடுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார்.

விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நதி, சானியா ஐயப்பன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் திறம்பட நடித்துள்ளனர்.

மனித உறவுகளின் சிக்கலான தன்மைகளைப் பற்றி பேசும் இந்த படம், ஜஸ்டின் பிரபாகரனின் ஆன்மாவைத் தொடும் இசையையும், கார்த்திக் நேதாவின் கவிதையான வரிகளையும் கொண்டுள்ளது.

கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜேவி மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ், ஆடை வடிவமைப்பாளர்கள் பூர்ணிமா ராமசாமி, ஏகன் ஏகாம்பரநாதர் உள்ளிட்டோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

படத்தைப் பற்றி பேசுகையில்..

“நாங்கள் மீண்டும் ஒரு தனித்துவமான திரைப்படத்துடன் வருகிறோம், இது உணர்ச்சிகரமான, அழுத்தமான படைப்பாக இருக்கும். இயக்குநர் யுவராஜின் திரைக்கதை நிச்சயமாக பார்வையாளர்களுக்கு, குறிப்பாக ஜோடிகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்” என்று தயாரிப்புத் தரப்பு கூறியுள்ளது.

திருமணமான தம்பதிகளுக்கிடையேயான புரிதலைப் பற்றி தெரிந்து கொள்ள, தயாரிப்பாளர்கள் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

இந்த நிகழ்வின் மூலம் தம்பதிகளிடையே நேர்மறையான தாக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வைப் பற்றிய சிறப்பு வீடியோ விரைவில் வெளியிடப்படும்.

‘இறுகப்பற்று’ செப்டம்பர் மாதம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

Vikram Prabhu Shraddha Vidaarth starrer Irugapatru

‘மாமன்னன்’ படைக்கும் சாதனை.; மாரி செல்வராஜ் அறிவிப்பு

‘மாமன்னன்’ படைக்கும் சாதனை.; மாரி செல்வராஜ் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

‘மாமன்னன்’ படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது.

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாமன்னன்

‘மாமன்னன்’ திரைப்படம் தெலுங்கில் “நாயகுடு” (Nayakudu) என்ற பெயரில் ஜூலை 14-ம் திரையரங்குகளில் வெளியானது.

இப்படம், கடந்த ஜூலை 27ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளதாக இயக்குனர் மாரி செல்வராஜ் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மாமன்னன்

udhayanidhi’s maamannan trending no 1 in india on netflix ott

சமந்தாவை தொடர்ந்து ‘புஷ்பா 2’ படத்தில் குத்தாட்டம் போடும் நடிகை

சமந்தாவை தொடர்ந்து ‘புஷ்பா 2’ படத்தில் குத்தாட்டம் போடும் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான படம் ‘புஷ்பா-1 தி ரைஸ்’.

இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்.

இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான ‘புஷ்பா-2 தி ரூல்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.

இப்படத்தில் நடிகர் பகத் பாசில் காட்சிகள் நிறைவு பெற்றுள்ளதாக இயக்குனர் சுகுமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘புஷ்பா-2 ‘ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு கவர்ச்சி பாடலுக்கு பிரபல நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகத்தில் நடிகை சமந்தா ‘ஊ சொல்றியா’ மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘Pushpa 2’ item song dancing actress Sreeleela replacing Samantha

நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும்.; உதயநிதி படம் குறித்து சீனுராமசாமி சிலிர்ப்பு

நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும்.; உதயநிதி படம் குறித்து சீனுராமசாமி சிலிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணே கலைமானே’.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் திரைக்கு வந்து முதல் தொடர்ந்து விருதுகளை குவித்து வருகிறது.

ஏற்கனவே இந்த படம் பிரான்சில் 2023-ம் ஆண்டுக்கான இந்திய, பிரெஞ்சு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த தயாரிப்பாளர் விருது உதயநிதி ஸ்டாலினுக்கும், சிறந்த நடிகை விருது தமன்னாவுக்கும், சிறந்த துணை நடிகை விருது வடிவுக்கரசிக்கும் கிடைத்தது.

இந்நிலையில், தற்போது ‘கண்ணே கலைமானே’ படம் சிறந்த படத்துக்கான 17-வது அமெரிக்க சோகால் திரைப்பட விருதையும் வென்றுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 12-ந்தேதி நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது.

இதுகுறித்து டைரக்டர் சீனு ராமசாமி கூறும்போது, “நல்ல படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படும். அந்த வகையில் ‘கண்ணே கலைமானே’ படம் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகிறது. உலக படத்துக்கான தன்மைகள் இந்த படத்தில் இருப்பதால் சோகால் விருதை வென்று அமெரிக்க சர்வதேச பட விழாவில் திரையிடவும் தேர்வாகி உள்ளது. இது மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார்.

கண்ணே கலைமானே

international award for udhayanidhi’s kanne kalaimane

More Articles
Follows