கோவா சர்வதேச திரைப்பட விழா : பொன்னியின் செல்வன் 2 – விடுதலை உள்ளிட்ட படங்கள் தேர்வு அப்டேட்

கோவா சர்வதேச திரைப்பட விழா : பொன்னியின் செல்வன் 2 – விடுதலை உள்ளிட்ட படங்கள் தேர்வு அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்த ஆண்டு 2023 நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற உள்ளது. இது 54 ஆவது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவாகும்.

இந்த திரைப்பட விழாவிற்கு மணிரத்தினம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 2’ & வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ உள்ளிட்ட படங்கள் தேர்வாகியுள்ளன.

இந்த படங்களுடன் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘காதல் என்பது பொதுவுடைமை’, சம்யுக்தா விஜயனின் ‘நீல நிற சூரியன்’ ஆகிய படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும் குறும்படங்களின் பட்டியலில், பிரவீன் செல்வன் இயக்கிய ‘நன்செய் நிலம்’ படம் தேர்வாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச திரைப்பட விழாவில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸிற்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Viduthalai and Ponniyin Selvan 2 selected 54th International film festival

OFFICIAL விஜய்யுடன் இணைந்த பிரசாந்த் – மோகன் – பிரபுதேவா – சினேகா – லைலா.; வீடியோ வைரல்

OFFICIAL விஜய்யுடன் இணைந்த பிரசாந்த் – மோகன் – பிரபுதேவா – சினேகா – லைலா.; வீடியோ வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 25-வது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அர்ச்சனா கல்பாத்தி பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘பிகில்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தளபதி விஜய்யுடன் இரண்டாவது முறையாக அவரது 68-வது படத்திற்காக ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இணைகிறது.

தளபதி 68

#Thalapathy68 என்று அழைக்கப்படும் இத்திரைப்படமானது ஏஜிஎஸ்-ன் 25-வது படைப்பு என்பதோடு இதுவரை இந்நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான வகையில் உருவாக உள்ளது.

ஏஜிஎஸ், விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரின் இந்த கூட்டணிக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

மிக முக்கியமான வேடத்தில் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் மோகன் முதல் முறையாக தளபதி விஜய் உடன் இணைந்து நடிக்கிறார்.

இவர்களுடன் பிரசாந்த், பிரபுதேவா, யோகி பாபு, ஜெயராம், அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும், சினேகா மற்றும் லைலா சுவாரசியமான வேடங்களில் நடிக்கின்றனர்.

தளபதி 68

சித்தார்த்த நுனி ஒளிப்பதிவு செய்ய, ராஜீவன் கலை இயக்கத்தை கவனிக்க, வெங்கட் ராஜன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்க, திலீப் சுப்பராயன் சண்டை காட்சிகளை வடிவமைக்கிறார்.

படத்தலைப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தயாரிப்பு நிறுவனத்தால் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

ஏற்கனவே இது குறித்த செய்திகளை நாம் நம் FILMISTREET தளத்தில் வெளியிட்டிருந்தோம். தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இவை தற்போது இணைய மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அர்ச்சனா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பு: எஸ். எம். வெங்கட் மாணிக்கம். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவுள்ள #தளபதி68, 2024-ம் ஆண்டு வெளியாகும்.

தளபதி 68

Thalapathy 68 movie pooja videos trending in social media

தீபாவளி திருநாளில் ‘கிடா’ விருந்தளிக்கும் காளி வெங்கட்

தீபாவளி திருநாளில் ‘கிடா’ விருந்தளிக்கும் காளி வெங்கட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது.

இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

‘கிடா’ திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.

உலகளவில் பாராட்டுக்களை குவித்த இப்படம் இறுதியாக, நம் தமிழக ரசிகர்களை தீபாவளி திருநாளில் மகிழ்விக்கவுள்ளது.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை & அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் : ஏகாதசி
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இயக்கம் : ரா. வெங்கட்

கிடா

Kida movie release in november 11

அவரை நம்பினேன் என்னை ஏமாற்றிட்டார்..; பாஜகவில் இருந்து விலகிய கௌதமி கடிதம்

அவரை நம்பினேன் என்னை ஏமாற்றிட்டார்..; பாஜகவில் இருந்து விலகிய கௌதமி கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி – பிரபு இணைந்து நடித்த ‘குரு சிஷ்யன்’ படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கௌதமி.

அதன் பின்னர் கமல், பிரபு, சத்யராஜ், ராமராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

பின்னர் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டிலானார்.

ஒரு கட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் உடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் தன் மகளின் எதிர்காலத்திற்காக கமல்ஹாசனை விட்டு பிரிகிறேன் என அறிவித்தார் கௌதமி.

அதன் பின்னர் தீவிர அரசியலில் ஆர்வம் காட்டி பாஜக கட்சியில் இணைந்து இருந்தார் கௌதமி.

இந்த நிலையில் திடீரென பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் கௌதமி.

அவரது கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:..

“கனத்த இதயத்துடனும், கடும் அதிருப்தியுடனும் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக முடிவு செய்திருக்கிறேன். தேசத்தின் வளர்ச்சியில் என்னுடைய பங்கை அளிக்க 25 ஆண்டுகளுக்கு முன்பு நான் அக்கட்சியில் இணைந்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் பல சவால்களை நான் சந்தித்தாலும், அந்த பணிக்கு நான் கவுரவம் செய்து வந்தேன். இன்று வரை என்னுடைய வாழ்க்கையில் கற்பனை செய்ய முடியாத இன்னல்கள் உள்ளன.

கட்சியிடமிருந்தோ அதன் தலைவர்களிடமிருந்தோ எனக்கு எந்த ஆதரவும் கிடைக்காத நிலையில், என்னுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்து, என்னுடைய வாழ்க்கை சம்பாத்தியங்களில் என்னை ஏமாற்றிய நபருக்கு அவர்களில் சிலர் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது குறித்து எனக்கு தெரியவந்துள்ளது.

என்னுடைய 17 வயதிலிருந்து நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். சினிமா, தொலைகாட்சி, வானொலி, டிஜிட்டல் மீடியா ஆகியவற்றில் 37 ஆண்டுகாலம் இருந்துள்ளேன்.

என்னுடைய இந்த வயதில் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாகவும், என்னுடைய மகளின் எதிர்காலத்துக்கு உதவுவதற்காகவும் நான் என்னுடைய வாழ்க்கை முழுக்க உழைத்துள்ளேன். நானும் என் மகளும் பாதுகாப்பாக செட்டில் ஆகியிருக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறோம்.

ஆனால் சி.அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டார்.

என்னுடைய பலவீனம் மற்றும் தனிமையை பயன்படுத்தி அழகப்பன் என்னை 20 ஆண்டுகளுக்கு முன்பு அணுகினார். அப்போது நான் என்னுடைய இரு பெற்றோரையும் இழந்த ஆதரவற்றவளாக மட்டுமின்றி, ஒரு கைக்குழந்தையை வைத்திருந்த தாயாகவும் இருந்தேன்.

என்னுடைய வாழ்க்கையில் ஒரு அக்கறையான மூத்த நபர் போல அவர் தன்னையும் தன் குடும்பத்தையும் நுழைத்துக் கொண்டார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த சூழலில் நான் என்னுடைய சில நிலங்களை விற்பதற்கான ஆவணங்கள் தொடர்பாக அவரை நம்பினேன்.

ஆனால் அவர் என்னை ஏமாற்றியது குறித்து சமீபத்தில்தான் கண்டுபிடித்தேன்.

நான் கஷ்டப்பட்டு உழைத்த பணம், சொத்து, ஆவணங்களை மீட்கும்விதமாக. எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் நம் நாட்டின் சட்டத்தையும், விதிமுறைகளையும் பின்பற்றினேன்.

என்னுடைய முதலமைச்சர், என்னுடைய காவல்துறை, என்னுடைய நீதித்துறை மீது முழு நம்பிக்கை வைத்து தொடர்ந்து பல புகார்களையும் அளித்தேன். ஆனால் அந்த நடைமுறை தொடர்ந்து இழுத்தடிக்கப்படுவதை அறிந்தேன்.

2021 தமிழக சட்டசபை தேர்தலின்போது, பாஜக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு தருவதாக வாக்களிக்கப்பட்டது. ராஜபாளையம் மக்களுக்காகவும், பாஜகவை அடித்தளத்திலிருந்து வலுப்படுத்தவும் வேண்டியும் நான் என்னை அர்ப்பணித்து பணியாற்றினேன்.

எனினும், அந்த வாய்ப்பு கடைசி நேரத்தில் ரத்தானது. ஆனாலும், நான் கட்சிக்கான என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்தேன். எனினும் 25 ஆண்டுகாலம் கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்தபோதும், எனக்கு முற்றிலுமாக ஆதரவு இல்லை என்பதையும், அழகப்பன் சட்டத்திலிருந்து தப்பிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 40 நாட்களாக அவர் தலைமறைவாக இருப்பதற்கும் சில மூத்த பாஜக உறுப்பினர்கள் உதவி செய்திருப்பதை அறிந்து நொறுங்கிப் போனேன்.

ஆனால் இப்போதும் என்னுடைய முதலமைச்சர், என் காவல்துறை, என் நீதித்துறை ஆகியோர் எனக்கான நீதியை எனக்கு பெற்று தருவார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

மிகப்பெரிய வலி மற்றும் வேதனையுடனும், அதே நேரம் கடும் உறுதியுடனும் இந்த ராஜினாமா கடிதத்தை எழுதுகிறேன்”. இவ்வாறு தனது கடிதத்தில் கூறியுள்ளார் கௌதமி.

கௌதமி

Actress Gauthami quits from BJP party

‘லியோ’ 4 நாட்களில் 400 கோடி வசூல்.; விஜய்யுடன் ஆடியது அதிர்ஷ்டம்.; மனம் திறந்த மடோனா

‘லியோ’ 4 நாட்களில் 400 கோடி வசூல்.; விஜய்யுடன் ஆடியது அதிர்ஷ்டம்.; மனம் திறந்த மடோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசானது. ரிலீசான நான்கு நாட்களில் உலகளவில் ரூ 400 கோடியை வசூலித்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விஜய் பாடி ஆடிய நான் ரெடி என்ற பாடலுக்கு விஜந்யுடன் நடனம் ஆடிய மடோனா செபஸ்டின் பாடல் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது…

விஜய்யுடன் நடித்ததை பெரும் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவர் அதிகம் பேச மாட்டார். அமைதியானவர்.

எங்கள் பாடல் காட்சி மூன்று நாட்களில் படமாக்கப்பட்டது. அப்போதுதான் லோகேஷ் கனகராஜ் என் கேரக்டரை பற்றி தெரிவித்தார்.

இந்த படத்திற்காக ஆக்ஷன் காட்சிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே அன்பறிவு மாஸ்டர்கள் பயிற்சி கொடுத்தனர்.

நான் விஜய்யுடன் நடிப்பது குறித்து யாரிடமும் சொல்லவில்லை. என் நண்பர்களுக்கு கூட தெரியாது.. என் அம்மாவுக்கு மட்டும்தான் தெரியும்” என தெரிவித்துள்ளார் நடிகை மடோனா.

Madonna shares her experience with Vijay in Leo

இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.; மோனிகா சொன்னது பொய் – குட்டி பத்மினி

இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம்.; மோனிகா சொன்னது பொய் – குட்டி பத்மினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோலிவுட்டில் ‘லியோ’ படத்தின் வசூல் பற்றி பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. வசூல் விவரங்களை தயாரிப்பாளர் அறிவித்தாலும் 4 நாட்களில் 400 கோடி எப்படி வசூல்? ஆகும் என சினிமா வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் இமானுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்ற பேச்சும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் இமானுக்கு நெருங்கிய நண்பர் அவர் நல்லது செய்யதான் வந்தார் என இமானின் முதல் மனைவி மோனிகா சமீபத்தில் பேசியிருந்தார்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் – இமான் மோதல் குறித்து நடிகை குட்டி பத்மினி கூறியுள்ளதாவது… இமானின் முதல் மனைவி மோனிகா சொன்னது அனைத்தும் பொய்.. ஏற்கனவே பெண் பார்த்துவிட்டு தன்னை விவாகரத்து செய்தார் இமான் எனக் கூறியிருந்தார். அப்படியெல்லாம் இல்லை.

இப்போது வரை மோனிகாவுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் செலவை இமான் கவனித்து வருகிறார். மேலும் மாதா மாதம் சரியாக ஜீவனாம்சம் கொடுத்து வருகிறார்.

விவகாரத்திற்கு பின் தான் அந்த அமீலியா என்ற பெண்ணை நாங்கள் இமானுக்கு அறிமுகம் செய்து வைத்தோம். பின்பு அவர்கள் இருவரும் பழகிய பின்னர் திருமணம் செய்து கொண்டனர்” என குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.

Actress Kutty Padmini reveals about Sivakarthikeyan and Imman issue

More Articles
Follows