ஷங்கரின் 2.0 படத்தில் மீண்டும் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய்

ஷங்கரின் 2.0 படத்தில் மீண்டும் ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aishwarya Rai to pair with Rajinikanth for 2pointOஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது.

இதில் நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார்.

இதன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் ஷங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகி வர, இதை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதில் ரஜினிகாந்துடன் அக்சய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய் சில காட்சிகளில் மட்டும் தோன்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

சில காட்சிகளில் போன் பேசுவது போலவும், க்ளோஸ் அப் ஷாட்டுக்களை மட்டும் வைக்கவுள்ளதாக தெரிகிறது.

முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் இதில் இல்லாவிட்டால், அந்த பாகத்தின் தொடர்ச்சி இல்லாமல் போய்விடும் என்பதால் இந்த ஏற்பாடாம்.

Aishwarya Rai to pair with Rajinikanth for 2pointO

சாமி 2 படத்தில் இரண்டு விக்ரம் கேரக்டர்கள் என்ன.?

சாமி 2 படத்தில் இரண்டு விக்ரம் கேரக்டர்கள் என்ன.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiyaan Vikram plays dual role in Saamy 2ஹரி இயக்கத்தில் உருவான சாமி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, நாயகன் விக்ரமின் மார்கெட்டை உயர்த்தியது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

கைவசம் உள்ள துருவ நட்சத்திரம் மற்றும் ஸ்கெட்ச் ஆகிய படங்களை முடித்துவிட்டு சாமி 2 படத்தில் நடிக்கிறார்.

ஹரி இயக்கவுள்ள இப்படத்தின் அவரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘இருமுகன்’ படத்தை தயாரித்த ‘தமீன்ஸ் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஷிபு தமீன் இப்படத்தை தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இதன் முதல் பாகத்தில் விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா மட்டுமே இருந்தார்.

தற்போது விக்ரமுடன் டூயட் பாட மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இதற்காக மற்றொரு விக்ரம் கேரக்டரை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதல் கேரக்டரான ஆறுச்சாமி பதவி உயர்வு பெறுவதாகவும், அடுத்த விக்ரம் மற்றொரு போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Chiyaan Vikram plays dual role in Saamy 2

30 நாட்கள் டார்கெட்டில் வளரும் ஜீவாவின் ‘கீ‘

30 நாட்கள் டார்கெட்டில் வளரும் ஜீவாவின் ‘கீ‘

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva and Nikki Galrani starrer Kee movie updatesசெல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இயக்கி வரும் படம் கீ.

இதில் ஜீவா நாயகனாக நடிக்க, நிக்கி கல்ராணி மற்றும் அணைகா சோடி நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் R.J. பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இசை விஷால் சந்திரசேகர்.

கடந்த மாதம் ஏப்ரல் 21 ஆம் தேதி சூட்டிங்கை தொடங்கி வருகிற மே 20 இல் சூட்டிங்கை முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் டைரக்டர்.

சிம்பு நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்‘ படத்தை தயாரித்து வரும் குளோபல் இன்போடெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தையும் தயாரித்து வருகிறது.

இப்படம் இந்த நிறுவனத்தின் 10வது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Jiiva and Nikki Galrani starrer Kee movie updates

V சென்டிமெண்டை தக்க வைத்து வெற்றி பெறுவாரா தல.?

V சென்டிமெண்டை தக்க வைத்து வெற்றி பெறுவாரா தல.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and his movies starts with V letterஅஜித் நடித்துள்ள விவேகம் பட டீசர் வருகிற மே 11ஆம் வெளியாகவுள்ளது.

இப்படத்தை சிவா இயக்கி வருகிறார்.

இதற்குமுன் அஜித் நடித்த வீரம் மற்றும் வேதாளம் ஆகிய இரு படங்களையும் இவரே இயக்கியிருந்தார்.

தொடர்ந்து இந்த கூட்டணி வி (V) என்ற செண்டிமென்ட் எழுத்தை குறிவைக்கிறது.

மேலும் இவர்களின் படம் தொடர்பாக டீசர், டிரைலர், பட ரிலீஸ் ஆகியவற்றை (வி) வியாழக்கிழமையே வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் அஜித் நடிப்பில் உருவான சில படங்கள் வி எழுத்தில் தொடங்கப்பட்டு வெற்றிப் பெற்றுள்ளன.

அது எந்தெந்த படங்கள் என்பதை பார்ப்போமோ?

அகத்தியன் இயக்கிய வான்மதி
எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி
கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய வில்லன் மற்றும் வரலாறு
சிவா இயக்கிய வீரம் மற்றும் வேதாளம்.

இந்த வரிசையில் விவேகம் படம் நல்ல வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கணேஷ் வெங்கட்ராமை கட்டித் தழுவி வரவேற்ற அஜித்

கணேஷ் வெங்கட்ராமை கட்டித் தழுவி வரவேற்ற அஜித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ganesh venkatramஅபியும் நானும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன்.

அதனைத் தொடர்ந்து கமலுடன் உன்னை போல் ஒருவன் படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது 7 நாட்கள், இணையத்தளம் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன் பட வெற்றி விழா பார்ட்டியின் போது அஜித்தை சந்தித்த அனுபவம் பற்றி தன் பேட்டியில் கூறியிருக்கிறார்.

அதுபோன்ற சக்ஸஸ் பார்ட்டி எனக்கு புதுசு. சிறிது தயக்கம் இருந்தது. எனவே நான் ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.

அப்போது யாரோ என் பின்னால் தட்டுவதை உணர்ந்தேன். திரும்பினால் அஜித் சார்.

என் சூழ்நிலையை புரிந்துக் கொண்டு, என்னிடம் கை குலுக்கு ஆரத்தழுவி, வெல்கம் டூ தமிழ் சினிமா” என்றாராம் அஜித்.

இதனை இப்போதும் ஒரு மலரும் நினைவாக கூறிவருகிறார் இந்த இணையதள நாயகன்.

சூர்யா நடிக்க மறுத்த வேடத்தில் ஜெயம் ரவி

சூர்யா நடிக்க மறுத்த வேடத்தில் ஜெயம் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and jayam raviஇயக்குநர் விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்தில் ஜெயம் ரவி, சாயிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதில் காட்டு வாசியான ஜெயம்ரவிக்கு வசனங்கள் கிடையாது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இப்டம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது முதலில் சூர்யா தான் இப்படத்தில் நடிக்கவிருந்தாராம்.

ஆனால் அப்போதுதான் 24 என்ற வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருந்தார்.

உடனே அதுபோன்ற கதைக்களம் வேண்டாம் என்பதால்தான் மறுத்துவிட்டாராம்.

ஆனால் தற்போது கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு மீண்டும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்கள் சந்திப்பேன் என்று தெரிவித்தாராம் இந்த சிங்கம்.

More Articles
Follows