தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் ஷங்கர். (இயக்குனர் ஷங்கர்)
இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களில், அவர் எழுதத் தொடங்கினார் மற்றும் கலை நிகழ்ச்சிகள் பலவற்றை நிகழ்த்தினார்.
இவரின் திறமை இவரை தனித்து அடையாளப் படுத்தி பல கைதட்டளையும் விருதுகளையும் கொண்டுவந்து குவித்தது. இது இவருக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டியது. பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார், அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நன்கு பயிற்சிப் பெற்றார்.
இவரின் திறமை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. எனவே அவர் இவரை உதவியாளராக அழைத்துக் கொண்டார்.
1986 – 87 களுக்குப் பிறகு, இவர்தம் சொந்த முயற்சியில் சிறு சிறு விளம்பரப் படங்களை எடுத்து திரை இயக்குநரானார்.
1993 இல் வெளியான ஜென்டில்மேன், என்ற திரைப்படம் இயக்குனர் ஷங்கர் என்ற ஜாம்பவானை தமிழ்த் திரையுலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
தொடர்ந்து வெளி வந்த காதலன், இந்தியன், ஜீன்ஸ், அந்நியன், முதல்வன், சிவாஜி, எந்திரன், நண்பன்… என இவர் எடுத்த பல திரைப்படங்கள் வணிகரீதியாக மாபெரும் வெற்றிபெற்றன.
தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’, ராம்சரண் நடிப்பில் ஒரு படம் மற்றும் ரன்வீர் நடிப்பில் ‘அந்நியன்’ பட ஹிந்தி ரீமேக் எனத் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை இயக்கி வருகிறார்.
இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையதளபதி விஜய் என இன்றைய திரை உலகின் சூப்பர்ஸ்டார்களை கொண்டு வெற்றிமேல் வெற்றி சூடியவர்.
அவரது படங்கள் பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் என அனைத்துத் தரப்புகளிலும் விருதுகளை வென்றுள்ளன.
இன்றைய இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கிவரும் தமிழ் சினிமாவின் பிரமாண்டப் பெருமிதம் எப்போதும் தமது இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி பறக்க நினைக்கும் கலைஞன் தயாரிப்பாளராகயும் பரிமாணங்களைப் பெற்ற இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது.
சமீபத்தில் நடிகர் சிலம்பரசனுக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக ஐசரி கணேசன் டாக்டர் பட்டம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vels university will confer honorary doctorate to director shankar