தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் ஷங்கர்.
1993ல் வெளியான ‘ஜென்டில்மேன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து காதலன், அந்நியன், இந்தியன் , முதல்வன், சிவாஜி, எந்திரன் என பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தார்.
இறுதியாக தமிழில் லைகா தயாரிப்பில் ரஜினியை வைத்து ‘2.0’ படத்தை இயக்கி இருந்தார்.
கோலிவுட்டில் 2.ஓ பட வசூலை எந்தப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.
தற்போது தெலுங்கில் ஒரு படம் ஹிந்தியில் ஒரு படம் என இயக்குகிறார்.
இன்று ஆகஸ்ட் 17ல் தனது 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் ஷங்கர்.
எனவே ரசிகர்கள் & திரையுலகினர் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரம்மாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குநர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என பதிவிட்டிருந்தார்.
அதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் ஷங்கர்,… ”நிச்சயமாக ‘இந்தியரே’. என் பிறந்தநாளை சிறந்த நாளாக்கியது உங்கள் வாழ்த்து மிக்க நன்றி” என பதிலளித்துள்ளார்.
இதன் மூலம் இவர்கள் இருவரும் இணையும் ‘இந்தியன் 2’ படம் விரைவில் ஆரம்பமாகும் என தெரிகிறது.
இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்க லைகா நிறுவனம் தயாரிக்க இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விவேக், நெடுமுடி வேணு நடிக்க இருந்தனர்.
சில காட்சிகளும் எடுக்கப்பட்டன.
அவர்கள் மறைந்ததால், அவர்களுக்கு பதிலாக ஒரு கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக்கை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
Shankar gave a hint to Kamal on his birthday