BREAKING எந்திரன் சர்க்கார் பொன்னியின் செல்வன் பட பாடகர் பாம்பா பாக்யா மரணம்.; அவரது வாழ்க்கை குறிப்பு..

BREAKING எந்திரன் சர்க்கார் பொன்னியின் செல்வன் பட பாடகர் பாம்பா பாக்யா மரணம்.; அவரது வாழ்க்கை குறிப்பு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல பின்னணி பாடகர் பாம்பா பாக்யா திடீர் மரணம். இவருக்கு வயது 49.

ஏஆர். ரஹ்மான் வீட்டு டிரைவர் இல்ல திருமண விழாவில் பாக்யராஜ் ஒரு மேடை கச்சேரியில்… “மயிலிறகே மயிலிறகே…” என்ற பாடலை பாடியுள்ளார்.

அந்த விழாவுக்கு வந்திருந்த ரகுமான் இவரது பாடலை கேட்டு பாக்யராஜை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘இராவணன்’ படத்தில் கெடாகறி என்ற பாடலை முதன்முறையாக இவர் பாடினார்.

இவருக்கு பாம்பா என்ற பெயரிட்டவரும் ரஹ்மான்தான். தென் ஆப்பிரிக்காவில் பிரபலமான பாடகர் ஒருவரின் ஒருவரால் கவரப்பட்ட ரகுமான் அவருக்கு இந்த பெயரை சூட்டினாராம்.

பாம்பா பாக்யாவின் இயற்பெயர் பாக்கியராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சினிமாவில் பாடுவதற்கு முன்பு பல மேடை கச்சேரிகளில் பாடியிருக்கிறார்.

முக்கியமாக தேனிசைத் தென்றல் தேவாவின் இசை கச்சேரியில் இவர் முக்கிய நபராக இடம் பெற்றிருந்தார். அதன் பின்னர் விஜய் ஆண்டனி ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டவர்களும் கச்சேரிகளிலும் இவர் பாடியிருக்கிறார்.

இவர் தலைப்பாகை அணிந்தபடி தான் சமீப காலமாக காணப்பட்டார். அதற்கு முக்கிய காரணம் ஏ ஆர் ரகுமான் தான்.

அவர் சொன்னதன் பெயரில் தான் இந்த தோற்றத்தில் அவர் காட்சியளித்து வந்தார்.

சந்தோஷம் தயாநிதி இசையமைத்த ராட்டி என்ற ஆல்பத்தில் “ஏண்டி உன்ன பார்த்தேன்னு நினைக்க வைக்கிறியே…” என்ற பாடல் மிக பிரபலம் ஆனது.

ரஜினி நடித்த எந்திரன் படத்தில்.. “இவன் பேர் சொல்லும்… எந்திரா எந்திரா..” என்ற பாடலை இவர் பாடியிருக்கிறார்.

அதனை தொடர்ந்து ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் “புள்ளினங்காள்…” என்ற பாடலையும் இவர் பாடியிருக்கிறார்.

விஜய்யின் ‘சர்க்கார்’ படத்தில் இடம்பெற்ற “சிம்டங்காரன்….” பாடலையும் பாடியவர் இவரே. பிகில் படத்திலும் பாடியிருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘பொன்னி நதி…..’ என தொடங்கும் பாடல் ஆரம்ப வரிகளை இவர் பாடியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

bamba bakya

Play back Singer Bamba Bakya is no more

RIP singer #BambaBakya .. He is known for his beautiful and unique voice.

Raati, Pullinangal, Simtaangatan and the starting bit of Ponni Nadhi will always be special!

மலையாளத்தில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் தமன்னா

மலையாளத்தில் முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் தமன்னா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை தமன்னா.

இவர் தற்போது மதுர் பண்டார்கர் இயக்கத்தில் நடித்துள்ள ‘பப்ளி பவுன்சர்’ படம் செப்டம்பர் 23-ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் தமன்னா.

தன் முதல் மலையாள படத்திலேயே சூப்பர் ஸ்டார் திலீப் உடன் ஜோடியாக நடிக்கிறார்.

இது திலீப்பின் 147வது படமாகும்

(இவர் மஞ்சுவாரியாரின் முன்னாள் கணவர் என்பதும் நடிகை காவ்யா மாதவனின் தற்போதைய கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

அருண் கோபி இயக்கத்தில் சாம்.சி.எஸ் இசையமைக்கும் படத்தில் தான் தமன்னா நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

கேரளா மாநிலம் கொல்லத்தில் உள்ள கொட்டாரக்கரை ஸ்ரீ மகா கணபதி ஆலயத்தில் இப்பட பூஜை நடைபெற்றது.

ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்ய விவேக் ஹர்சன் எடிட்டிங் செய்கிறார்.

வருகிற செப்டம்பர் 9ஆம் தேதி இதன் ஷூட்டிங் தொடங்கி மூன்று மாதங்கள் வரை நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது.

தமன்னா

Tamannahs first malayalam movie updates

பிரார்த்தனைக்கு சக்தி உண்டு.; பாரதிராஜாவை சந்தித்தபின் ராதிகா பரவசம்

பிரார்த்தனைக்கு சக்தி உண்டு.; பாரதிராஜாவை சந்தித்தபின் ராதிகா பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகர் நடிகைகளை அறிமுகம் செய்தவர் இயக்குனர் பாரதிராஜா.

இதில் மிக முக்கியமானவர் நடிகை ராதிகா.

இவரை ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற படத்தில் 1978 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார் பாரதிராஜா.

தற்போது கடந்த ஒரு வாரமாக உடல்நிலை குறைவால் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனையடுத்து பாரதிராஜா நலம் பெற வேண்டி நடிகை ராதிகா பிரார்த்தனைகளை செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் ராதிகா.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில்…

‘பிரார்த்தனைக்கு சக்தி உண்டு, இன்று எனது இயக்குநரைப் பார்த்ததில் மகிழ்ச்சி. அவர் குணமடையும் பாதையில் இருக்கிறார்.

எப்போதும் நான் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நபர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை பார்க்க முடியவில்லை.

பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் எம்ஜிஎம் மருத்துவமனையின் கவனிப்புக்கும் நன்றி’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார் ராதிகா.

Radhika met Bhatathiraja and updated his health status

Prayers have the power and good vibrations. Sooo happy to see my director today @offBharathiraja , on the road to recovery.Always a person I look upto, can’t bear to see him un well. Thanks to everyone for the prayers and #mgmhospital for the care. https://t.co/ZtXqEBPSiT

நடிகை மகாலட்சுமியை 2வது திருமணம் செய்தார் FAT MAN ரவீந்தர் சந்திரசேகரன்

நடிகை மகாலட்சுமியை 2வது திருமணம் செய்தார் FAT MAN ரவீந்தர் சந்திரசேகரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான மகாலட்சுமி சங்கர் ஆகியோரின் திருமணம் இன்று நடைபெற்றது.

திருப்பதியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற திருமணத்தில் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மகாலட்சுமி சங்கர் குடும்பங்களை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இவர்களின் வாழ்க்கை பற்றிய விவரமான வீடியோ இதோ…

Producer Ravinder Chandrasekar married VJ Mahalakshmi

*1 NEWS 1 MIN* : உனக்கும் 2வது எனக்கும் 2வது l Producer Ravinder Chandrasekar married VJ Mahalakshmi

https://youtube.com/shorts/VyLxT28QJeY?feature=share

தன் காதலியை கரம் பிடித்தார் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

தன் காதலியை கரம் பிடித்தார் ‘குக் வித் கோமாளி’ நடிகர் புகழ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப் போவது யாரூ & குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் புகழ்.

இந்த சீசனில் கிடைத்த புகழால் வெள்ளித்திரையிலும் இவருக்கு வாய்ப்புகள் வந்தன.

இதனையடுத்து அஜித் அஜித்துடன் வலிமை,சந்தானத்துடன் சபாபதி, அஸ்வின் உடன் என்ன சொல்லப் போகிறாய், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய் உடன் யானை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்

சின்னத்திரையை போல வெள்ளித்திரையில் இவரது காமெடி பெரிதாக எடுபடவில்லை என்றாலும் இவருக்கு வாய்ப்புகள் அவ்வப்போது வருகின்றன.

இந்த நிலையில் பென்சியா என்பவரை காதலித்து வருவதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று செப்டம்பர் 1 ஆம் தேதி புகழ் – பென்சியா காதல் ஜோடியின் திருமணம் திண்டிவனம் பகுதியில் உள்ள தீவனூர் விநாயகர் கோயிலில் எளிமையாக நடைபெற்றது.

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தெரியவந்துள்ளது.

புகழ்

Cook With Comali Pugazh married his girl friend Benziya

*1 NEWS 1 MIN: Exclusive Video* தன் காதலியை மணந்தார் ‘குக் வித் கோமாளி’ புகழ் Cook With Comali Pugazh ? filmistreet ?

https://youtube.com/shorts/LctC2CSTKpc?feature=share

தனது குருநாதர் விக்ரமன் மகனை ஹீரோவாக்கிய கேஎஸ் ரவிக்குமார்

தனது குருநாதர் விக்ரமன் மகனை ஹீரோவாக்கிய கேஎஸ் ரவிக்குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெனாலி, கூகுள் குட்டப்பா படங்களுக்கு பிறகு, RK Celluloids நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக உருவாகிறது “ஹிட்லிஸ்ட்”.

RK Celluloids சார்பில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், மூத்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் “ஹிட்லிஸ்ட்”.

நடிகர் சரத்குமார் முக்கிய கதாப்பத்திரம் ஏற்றிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா மற்றும் பூஜை, இன்று எண்ணற்ற திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் புது வசந்தம் புதிய சரித்திரம் படைத்து பல புதிய இளம் இயக்குநர்கள் உருவாக காரணாமாயிருந்த இயக்குநர் விக்ரமன் அவர்களின் மகன் விஜய் கனிஷ்கா திரையுலகில் நடிகராக அறிமுகமாகிறார்.

ஹிட்லிஸ்ட்

கமர்ஷியல் ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை கமர்ஷியல் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் RK Celluloids நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இயக்குநர்கள் சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்குகிறார்கள்.

இப்படத்தின் பூஜையில் இன்று திரை பிரபலங்கள் RB சௌத்திரி, சத்யஜோதி தியாகராஜன், PL தேனப்பன் சுரேஷ் காமாட்சி, இயக்குநர் எழில் கே.எஸ்.ரவிக்குமார், விக்ரமன், எஸ் ஏ சந்திரசேகர், மனோபாலா, லிங்குசாமி, ஏ ஆர் முருகதாஸ், சீனு ராமசாமி, வெற்றிமாறன், பிரபு சாலமன், பாண்டியராஜன், ஆர் கண்ணன், சரண், ரமேஷ் கண்ணா, பேரரசு, ராஜகுமாரன், தேவயானி, ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் கலந்துகொண்டு, நடிகர் விஜய் கனிஷ்காவை வாழ்த்தியதுடன், படம் வெற்றிபெற படக்குழுவினரை வாழ்த்தினர்.

ஹிட்லிஸ்ட்

இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் ஜனரஞ்சகமாக, காமெடி ஆக்சன் கமர்ஷியல் என அனைத்து அம்சங்களும் நிறைந்த திரைப்படமாக உருவாகவுள்ளது.
படம் குறித்த மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Vikraman son Vijay Kanishka debut in Hit List

More Articles
Follows