வந்தியத்தேவன் – குந்தவையின் அக நக முகநகையே.; அழகான காதல் பாடலானது.!

வந்தியத்தேவன் – குந்தவையின் அக நக முகநகையே.; அழகான காதல் பாடலானது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன் – 2” திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

பிரமாண்ட தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில், மணி ரத்னத்தின் இயக்கத்தில்
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துளிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

“பொன்னியின் செல்வன் – 1” கடந்த செப்டம்பர் 30, 2022 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றது.

இதன் அடுத்த கட்டமாக படத்தின் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில், சக்திஶ்ரீகோபாலன் பாடிய..
வந்தியத்தேவன் (கார்த்தி), குந்தவை (திரிஷா) இவர்கள் இடம் பெறும் காதல் பாடலாக “அக நக முகநகையே” என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரவி வர்மன் ஒளிப்பதிவையும், தோட்டா தரணி கலை இயக்குனராகவும், ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும் மற்றும் பல நட்சத்திர தொழில்நுட்ப வல்லுநர்கள் மணி ரத்னத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.

Aga Naga (Lyrical) – PS2 Tamil

Aga Naga (Lyrical) – PS2 Tamil

Aga Naga song from Ponniyin Selvan is out now

OFFICIAL இளையராஜா – வெற்றிமாறன் இணைந்த ‘விடுதலை 1’ பட ரிலீஸ் அப்டேட்

OFFICIAL இளையராஜா – வெற்றிமாறன் இணைந்த ‘விடுதலை 1’ பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதையின் நாயகனாக சூரி நடிப்பில் உருவான திரைப்படம் ‘விடுதலை’.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களுடன் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இரு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெற்றிமாறன் இயக்க இளையராஜா இசையமைத்துள்ளார்.

விடுதலை

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

அண்மையில் ‘விடுதலை’ படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் மார்ச் 31-ல் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ‘விடுதலை’ படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடுகிறது

மார்ச் 30-ம் தேதி சிம்புவின் ‘பத்து தல’ படமும் தெலுங்கு நடிகர் நானியின் ‘தசரா’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை

vetrimaaran’s ‘viduthalai 1’ movie released in march 31

‘இராவண கோட்டம்’ இசை விழாவில் குஷ்பூ – மீனா.; பட ரிலீஸ் அப்டேட் இதோ..

‘இராவண கோட்டம்’ இசை விழாவில் குஷ்பூ – மீனா.; பட ரிலீஸ் அப்டேட் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் நடிகர் சாந்தனு நடிக்கும் படம் ‘இராவண கோட்டம்’.

இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடிகை ‘கயல்’ ஆனந்தி நடிக்க, நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, இளவரசு, பி.எல்.தேனப்பன், தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.

‘இராவண கோட்டம்’ படம் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றியது என்று கூறப்படுகிறது

இந்நிலையில், ‘இராவண கோட்டம்’ படத்தை மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 18 ஆம் தேதி அன்று துபாயில் நடைபெற்றது.

இதில் பாக்யராஜ், நாசர், பிரசன்னா, சுந்தர் சி, ராதிகா சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், மீனா, குஷ்பு, யுவன் சங்கர் ராஜா மற்றும் திமுக பொதுச்செயலர் துரைமுருகன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.

Shantanu’s ‘Raavan Kottam’ is release in may 12

மோகன் ஜீ இயக்கிய ‘பகாசூரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…

மோகன் ஜீ இயக்கிய ‘பகாசூரன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் ஜி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 17ல் ‘பகாசூரன்’ படம் வெளியானது

இதில் செல்வராகவன், நட்டி நட்ராஜ், கே ராஜன் ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் கூல் சுரேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இது அவரின் நூறாவது படமாக அமைந்தது.

தியேட்டர்களில் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூ. 5 லட்சம் மதிப்புள்ள காஸ்ட்லி வாட்ச்சை இயக்குனர் மோகனுக்கு தயாரிப்பாளர் கௌதம் வழங்கினார்.

இந்நிலையில் வரும் மார்ச் 24-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘பகாசூரன்’ வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Here is the OTT release date of Mohan G’s ‘Bakasuran’

கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் RRR பட நடிகர்.?!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் RRR பட நடிகர்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர் ராம் சரண். இவர் நடிக்க வருவதற்கு முன்பே பிரபலம் தான்.

ஏனென்றால் இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமானார்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு…’ என்ற பாடல் ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் தற்போது உலகெங்கிலும் பிரபலமாக உள்ளார்.

இந்த நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட்டர் வீராட் கோலி பயோபிக்கில் தனக்கு நடிக்க அதிக ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“வீராட் கோலி கேரக்டரில் கண்டிப்பாக நடிப்பேன். ஏனென்றால், அவர் ஊக்கமளிக்கும் நபர். மேலும் நானும் அவரைப் போலவே இருக்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார் ராம்சரண்.

RRR actor wants to act in Virat Kohli biopic

நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கும் 3 பிரபல நிறுவனங்கள்.; ஹீரோ யார்.?

நயன்தாராவின் 75-வது படத்தை தயாரிக்கும் 3 பிரபல நிறுவனங்கள்.; ஹீரோ யார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2022 ஆம் ஆண்டு தன் காதலன் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா.

திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்.

சில மாதங்களாகவே குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இது இவரின் 75வது படமாக உருவாகியுள்ளது.

இதில் நயன்தாரா உடன் ஜெய் மற்றும் சத்யராஜ் இணைகின்றனர்.

ராஜா ராணி படத்திற்கு பிறகு இவர்கள் மூவரும் மீண்டும் இணைகின்றனர்.

காமெடியன் ரெடின் கிங்ஸ்லியும் இதில் நடிக்கிறார்.

இப்படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களான நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ் & டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்..

ஷாருக்கான் உடன் ‘ஜவான்’ & ஜெயம் ரவியுடன் ‘இறைவன்’ ஆகிய படங்கள் நயன்தாரா நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Nayanthara 75 movie updates here

More Articles
Follows