2.0 ஹாட் அப்டேட்ஸ்… டீசர்-ட்ரைலர்-பாடல்கள் ரிலீஸ் தகவல்கள்

2.0 ஹாட் அப்டேட்ஸ்… டீசர்-ட்ரைலர்-பாடல்கள் ரிலீஸ் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie teaser trailer songs release update

லைக்கா நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ள 2.0 படம் அடுத்த ஆண்டு 2018 ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று ரிலீஸ் ஆகவுள்ளது.

ஷங்கர் இயக்கிய இப்படத்திற்கு ஏஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என லைக்கா நிறுவனத்தைச் சேர்ந்த ராஜீ மகாலிங்கம் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படத்தின் பாடல்களை துபாய் நாட்டில் 2017 அக்டோபரில் வெளியிடவுள்ளனர்.

இதனையடுத்து டீசரை நவம்பர் மாதம் ஐதராபாத்திலும், டிரைலரை டிசம்பர் மாதம் சென்னையிலும் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Raju Mahalingam‏ @rajumahalingam
“Festivities to Begin” Come Oct -Audio Release in Dubai!!! Nov-Teaser in Hyderabad and Dec-Trailer in Namma Singara Chennai!!! 2.0 Loading!!

மீண்டும் ரஜினி-விஜய் படத்தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்பிரபு

மீண்டும் ரஜினி-விஜய் படத்தயாரிப்பாளருடன் இணையும் விக்ரம்பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram prabhu producer thanuநடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வளர்ந்துள்ள நெருப்புடா படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆகிறது.

இதனையடுத்து எஸ்எஸ் சூர்யா இயக்கும் பக்கா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நிக்கிகல்ராணி, பிந்துமாதவி, சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க, டி.சிவகுமார் தயாரிக்கிறார். இசை ஷாம்.

இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தையும் முடிவு செய்துவிட்டாராம் விக்ரம்பிரபு.

கபாலி, தெறி படங்களை தயாரித்த கலைப்புலி தாணு தயாரிப்பில் நடிக்கவுள்ளார்.

விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தையும் தயாரித்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

Vikram Prabhus next will be produced by Kalaipuli S Thanu

விவேகம் மாஸ் இல்லை லாஸ்; நஷ்டஈடு கொடுப்பாரா அஜித்..?

விவேகம் மாஸ் இல்லை லாஸ்; நஷ்டஈடு கொடுப்பாரா அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith kajalகடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடிப்பில் உருவான விவேகம் படம் வெளியானது.

சிவா இயக்கிய இப்படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும் லாஜிக் இல்லை என்பதால் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களே வந்தது.

மேலும் கேரளாவிலும் எதிர்பார்த்த லாபத்தை தரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் விவேகம் படத்தால் பெரும் நஷ்டமடைந்துள்ளதாகவும் எனவே தயாரிப்பாளரும் அஜித்தும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதனால் அஜித்திற்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது எனலாம்.

Vivegam movie loss issue Will Ajith settle the loss amount

கல்வியிலும் ஏழை-பணக்காரன் பாகுபாடா..? சூர்யா வருத்தம்

கல்வியிலும் ஏழை-பணக்காரன் பாகுபாடா..? சூர்யா வருத்தம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Suriya talks about Educational system in Indiaநீட் தேர்வு முறையால் தன் மருத்துவ கனவை பறிக்கொடுத்த மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

இது தொடர்பாக பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்றுவரை தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கல்விக்காக பல உதவிகளை செய்துவரும் நடிகர் சூர்யா இதுகுறித்து பிரபல நாளிதழ் ஒன்றுக்கு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… ‘ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி. பிறகு, இருவருக்கும் ஒரே முறையான தேர்வு என்பதை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தரமான கல்வியை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும்.

வசதியில்லாத மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில்தான் கல்வியை கற்கிறார்கள்.

ஆங்கிலம், இந்தி தவிர அந்தந்த மாநில மொழிகளிலும் நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’ எனவும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Actor Suriya talks about Educational system in India

மாணவர்களின் உரிமைக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்.. தங்கர்பச்சான்

மாணவர்களின் உரிமைக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும்.. தங்கர்பச்சான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thangar Bachan talks about Current Politics and NEET Issue in Tamilnadu

நீட் தேர்வு விவாகரத்தாலும் மாணவி அனிதாவின் தற்கொலை சம்வத்தாலும் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து இயக்குனரும் நடிகருமான தங்கர் பச்சான் கூறியுள்ளதாவது…

பாஜக கட்சியின் நேர்மையற்ற அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இழைத்து வந்த துரோகத்திற்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.

இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும்.

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் அடுத்தத் திட்டங்களில் ஒன்று தான் “நீட்” தேர்வு. இந்த சதியை மாணவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள்.

இப்போது அவர்களுக்கு பக்க பலமாக இருந்து இனி எக்காலத்திலும் தமிழகத்திற்குள் அனுமதிக்காத முறையில் சட்டத்தை உருவாக்கி மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராட்டம் நடத்தி வேலை நிறுத்தம் செய்து தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் பகையை மறந்துவிட்டு ஓரணியில் திரண்டு சாதித்துக் காட்ட வேண்டும்.

மாணவர்களும், இளைஞர்களும் காலம் தாழ்த்தாமல் இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் உடனே விடுக்க வேண்டும்.

இதைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் எக்காலத்திலும் நம் உரிமையை பெற முடியாது.

எனவே தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், கட்சி பாகுபாடு கடந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள கேட்டுக்கொள்வோம்! நமது உரிமையை நிலைநாட்டுவோம்!

– தங்கர் பச்சான்.

Thangar Bachan talks about Current Politics and NEET Issue in Tamilnadu

அரசியலிலும் தொடரும் ரஜினி-கமல் போட்டி.?

அரசியலிலும் தொடரும் ரஜினி-கமல் போட்டி.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan and Rajinikanth may clash in Politics tooதமிழ் சினிமாவை பொறுத்தவரை எம்ஜிஆர்-சிவாஜிக்கு அடுத்த போட்டியாளர்கள் என்றால் அது கமல்-ரஜினிதான்.

அது இன்றுவரை சினிமாவில் தொடர்ந்து வருகிறது.

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதுவும் அண்மைகாலமாக அவரது அரசியல் பிரவேசம் உறுதியாகிவிட்டதால் அதற்கான அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் கமல்ஹாசனும் தன் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார்.

அரசியலை கற்க தான் கேரளா சென்று வந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

ஒருவேளை ரஜினியும் கமலும் தனித்தனியாக அரசியலுக்கு வந்தால் நிச்சயம் இவர்களின் போட்டி அங்கும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

Kamalhassan and Rajinikanth may clash in Politics too

More Articles
Follows