தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கியுள்ள படம் 2.0.
இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டவர்கள் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டு மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் இதில் மீதமுள்ள ஒரு பாடலை இயக்கப் போவதாக ஷங்கர் நேற்று தெரிவித்திருந்தார்.
இதை முழுக்க முழுக்க ஸ்டூடியோவில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டு இருக்கிறாராம்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சொந்தனமா ஒய்.எம்.ஸ்டூடியோவில் அந்த பாடலை படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்டூடியோவில் எடுக்கப்படும் முதல் படம் மற்றும் பாடல் இதுதான் எனவும சொல்லப்படுகிறது.
இதன் இசை வெளியீட்டு விழாவை அக்டோபர் 27-ல் துபாயிலும், டீசர் வெளியீட்டை நவம்பர் 22-ல் ஐதராபாத்திலும், டிரைலர் வெளியீட்டை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
Shankar going to shoot 2point0 movie song in AR Rahman studio