Breaking : தமிழர்களுக்காக பேசிய ரஜினியின் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை

Breaking : தமிழர்களுக்காக பேசிய ரஜினியின் காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Kaala movie release into trouble at Karnatakaசூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே தமிழகத்தை தாண்டியும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும்.

எனவே தான் அவர் கடந்த 40 ஆண்டுகளாக தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார்.

தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் உலகமெங்கும் வருகிற ஜீன் 7ல் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் ‘காலா’வை பெங்களூரில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று ரஜினிக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார் வட்டாள் நாகராஜ்.

காவேரி நீர் மேலாண்மை வாரியம் விவகாரத்தில் கன்னட மக்களுக்கு எதிராக அதாவது தமிழக மக்களுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியிருந்தார்.

இது தொடர்பாக சற்றுமுன் கர்நாடக வர்த்தக சபையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காலா படத்திற்கு எதிரான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

Rajinis Kaala movie release into trouble at Karnataka

Breaking: அருவி பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்

Breaking: அருவி பட இயக்குனருக்கு வாய்ப்பளித்த சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aruvi teamசிவகார்த்திகேயன் நடித்த ரெமோ மற்றும் வேலைக்காரன் படங்களை தயாரித்த நிறுவனம் 24 AM STDUDIOS.

தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கி வரும் சீமராஜா படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று மே 29ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி சற்றுமுன் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

‘அருவி படத்தை இயக்கிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்திலும் ‘அருவி’ படத்தில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்த ரேமண்ட் படத்தொகுப்பாளராக பணிபுரியவிருக்கிறார்.

இந்த படத்திற்கு ‘மேயாத மான்’ படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் பூஜை இன்று குமுளி அருகில் ஒரு இடத்தில் நடந்துள்ளது.

இந்த பூஜையில் ‘24 ஏம்.ஸ்டுடியோஸ்’ தயாரிப்பாளர் ஆர்..டி.ராஜா, இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன், எடிட்டர் ரேமண்ட், லயோலா கல்லூரி புரொஃபசர் ராஜநாயகம் முதலானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

காலா படத்தை முதல் காட்சிக்கு முன்பே லீக் செய்வோம்; தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்.!

காலா படத்தை முதல் காட்சிக்கு முன்பே லீக் செய்வோம்; தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kaalaஇயக்குநர் பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியிருக்கும் காலா படத்தில் ரஜினிகாந்துடன் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, ‘வத்திக்குச்சி’ திலீபன், அரவிந்த் ஆகாஷ், ஈஸ்வரிராவ் என பலரும் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் காலா படத்தின் 2-வது ட்ரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர்.

இந்த ட்ரெய்லரை சமூக வலைதளமான யூடியூப் பக்கத்தில் சில நிமிடங்களிலே லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்ததால் தொடர்ந்து அது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸ் , நாங்கள் இப்படத்தை முதல் நாள் முதல் காட்சிக்கு முன்பே வெளியிடுவோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

திருட்டு விசிடி மற்றும் புதிய படங்கள் இணையத்தில் வெளியாவதை முற்றிலும் ஒழிப்பேன் என தயாரிப்பாளர் சங்க தலைவர் அறிவித்திருக்கும் நிலையில் தமிழ்ராக்கர்ஸ் நிர்வாகிகளின் இந்த பகிரங்க அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியுடன் திடீர் சந்திப்பு ஏன்..? ஜேகே. ரித்தீஷ் விளக்கம்

ரஜினியுடன் திடீர் சந்திப்பு ஏன்..? ஜேகே. ரித்தீஷ் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanth and JK Rithishசென்னை போயஸ் தோட்டத்தில் நடிகர் ரஜினிகாந்தை காலை 9 மணியளவில் முன்னாள் எம்பி. ஜே கே ரிதிஷ் நேரில் சந்தித்து பேசினார்…

ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து பேட்டியளித்த ஜே. கே. ரிதீஷ் :-

நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு முற்றிலும் அரசியல் ரீதியானது இல்லை என மறுத்தவர், நடிகர் சங்க தேர்தல் முடிந்து 3 ஆண்டுகளாகியும், விஷால் கால தாமதம் படுத்தி வருகிறார்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டிய பின்பு தான் தேர்தல் நடத்த போவதாக விசால் சொல்வது நடை முறைக்கு சாத்தியம் இல்லை என கருத்து தெரிவித்தவர்.

ஆரம்பத்தில் விஷாலை நான் உட்பட அனைவரும் ஆதரித்துவந்தோம்.

ஆனால் விஷால் தனக்கு ஓட்டு போடவில்லை என்பதற்காக நாமக்கல் நடிகர் சங்கத்தின் ஒட்டு மொத்த ஒட்டு உரிமையை நீக்கம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டுவருவதாக குற்றம் சாட்டியவர், விஷால் பதவி ஏற்ற ஒரு வருடத்தில் எந்த முன்னேற்ற நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பதவி விலகுவதாக கூறியதை சுட்டிகாட்டினார்.

ரஜினி கமலில் இருவரில் யாருக்கு திரை துறையை சார்ந்தவர் என்ற அடிப்படையில் ஆதரவப்பீர் என்ற கேள்விக்கு, என்னுடைய ஆதரவு எப்போதுமே எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் ஆன அரசுக்கு மட்டும் தான் மேலும் நடிகர் சங்கம் பொறுத்தவரை கட்சி பேதம் இல்லாமல் அனைவரும் இணைந்து குடும்பமாக செயல்படுவோம் என பதில் அளித்தார்.

ஜூலை 6ல் தன் மகனுடன் இணைந்து வரும் மிஸ்டர் சந்திரமௌலி

ஜூலை 6ல் தன் மகனுடன் இணைந்து வரும் மிஸ்டர் சந்திரமௌலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mrchandramouliமிஸ்டர் சந்திரமௌலி என்ற பெயரை கேட்டாலே எல்லார் நினைவுக்கும் வருவது நவரச நாயகன் கார்த்திக் தான். இப்போது அந்த பெயரில் ஒரு படம் உருவாகியுள்ளது.

இதில் தன் மகன் கவுதம் கார்த்திக் உடன் நடித்துள்ளார் கார்த்திக்.

மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான சந்திரமௌலி படம் தணிக்கை செய்யப்பட்டு ஜூலை 6, 2018ல் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் பாடல்களும், காட்சி விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.

“ஆம், மிஸ்டர் சந்திரமௌலி படம் துவங்கிய நாள் முதல் மிகவும் positive ஆகவே இருந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய உத்தியாகட்டும், படத்தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகட்டும் ஒவ்வொன்றுமே சிறப்பு. இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருந்த வித்தைக்காரர் தயாரிப்பாளர் தனஞ்செயன் தான்.

படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்து வெளியீடு வரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது.

மிஸ்டர் சந்திரமௌலியில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் பார்வையாளர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், அவர்கள் செலவழித்த நேரத்தை நிச்சயம் வீணாக்காது” என்றார் இயக்குனர் திரு.

தொடர்ந்து அவர் கூறும்போது படத்திற்கு முழு ஆதரவை கொடுத்து தூணாக இருந்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

“இந்த பிஸியான நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்த படத்தை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது.

ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் படத்திற்கு கூடுதலாக சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்றன” என்றார்.

எந்த கட்சியுடன் ரஜினி கூட்டணி.?; அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி

எந்த கட்சியுடன் ரஜினி கூட்டணி.?; அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini and sathya narayana raoகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் மத்திகிரி பகுதி மராட்டிய சமுதாய மக்களின் சார்பில், சத்ரபதி சிவாஜி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

இதில் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியின் பெயரை விரைவில் அவரே அறிவிப்பார். கட்சி தொடங்கியதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார்.

எந்த கட்சியுடனும் கூட்டு சேர மாட்டார். தனித்து தான் போட்டியிடுவார்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சட்டம்,ஒழுங்கு பிரச்சினை காரணமாக, அவர் அங்கு நேரில் செல்ல முடியவில்லை.

தற்போது கர்நாடகாவில் நல்ல மழை பொழிந்து வருகிறது. எனவே, காவிரி நீர் தரமுடியாது உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

பேட்டியின்போது, கர்நாடக மாநில ரஜினி மக்கள் மன்ற தலைவர் சந்திரகாந்த் உடனிருந்தார்.

More Articles
Follows