தொடரி விமர்சனம்

தொடரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : தனுஷ், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, கணேஷ் வெங்கட்ராமன், கருணாகரன், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், இமான் அண்ணாச்சி, ஆர்.வி. உதயகுமார், கும்கி அஸ்வின், ஏ.வெங்கடேஷ், சின்னி ஜெயந்த் மற்றும் பலர்.
இசை : இமான்
ஒளிப்பதிவு : வெற்றிவேல் மகேந்திரன்
படத்தொகுப்பு : எல்.வீ.கே. தாஸ்
இயக்கம் : பிரபு சாலமன்
பிஆர்ஓ : நிகில் முருகன்
தயாரிப்பாளர் : சத்யஜோதி பிலிம்ஸ், God Pictures

கதைக்களம்…

பூச்சியப்பனாக தனுஷ் – சரோஜாவாக கீர்த்தி சுரேஷ்
டெல்லியிலிருந்து சென்னைக்கு பயணிக்கிறது தொடரி.. (அதாங்க ரயில்)

இந்தியன் ரயில்வேயில் கேண்டின் பாயாக வேலை செய்கிறார் தனுஷ். அதே ரயிலில் சினிமா நடிகையின் டச்சப் கேர்ளாக பணி புரியும் கீர்த்தி சுரேஷ் பயணிக்கிறார்.

ரயில் வேகத்தை விட படுவேகமாக பார்த்ததும் இவர்களுக்குள் காதல் வருகிறது.

ஒரு சூழ்நிலையில் இருவரும் பிரியும் நேரம் வரும்போது, என்ஜின் மாஸ்டருக்கு ஹார்ட் அட்டாக்.

இதனிடையில் தீவிரவாதிகள், கொள்ளையர்கள், அமைச்சர் கடத்தல் என பல பிரச்சினைகளும் வருகிறது. அப்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் செல்கிறது.

அதன்பின் ரயில் பயணிகள் என்ன ஆனார்கள்? இவர்களின் காதல் கைகூடியதா? ரயில் நின்றதா? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கொடுத்து, ஸ்டேஷனில் இறக்கி விடுகிறார் டைரக்டர் பிரபு சாலமன்.
CsJS2srUEAAWCHb
கதாபாத்திரங்கள்..

இதில் முதன்முறையாக காமெடியில் பயணம் செய்துள்ளார் தனுஷ். அவை ரசிக்கும்படியே அமைந்திருப்பது சிறப்பு.

ஒரு அக்மார்க் கேண்டீன் பாயாக வந்து அசத்துகிறார்.

இவருடன் கருணாகரன், தம்பி ராமையா ஆகியோரும் காமெடி காட்சிகளுக்கு கைகொடுத்துள்ளனர்.

ஒரு யதார்த்த பெண்ணாக இருந்தாலும், லட்சியத்தை அடைய போராடும் பெண்ணாக கீர்த்தி. (அவ்ளோ அப்பாவியாக) தன் அழகை போல் நடிப்பிலும் குறை வைக்கவில்லை.

கணேஷ் வெங்கட்ராமன், ஏ. வெங்கடேஷ், ராதாரவி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் பொருத்தமான தேர்வு.

CsI7rzJVUAIMdUU

தொழில்நுட்ப கலைஞர்கள்..

இமானின் பாடல்களும் பின்னணி இசையும் மிகப்பெரிய பலம். அடடா.. இது என்ன? இது என்ன? மற்றும் ஊரெல்லாம் கேட்குதே… பாடல்கள் ரசிக்கும் ரகம்.

போன உசுரு பாடல் எந்த ரயில் பயணம் என்றாலும் நம் நினைவில் நிற்கும். (ஆனால் தேவையில்லாத இடத்தில் இப்பாடல் வந்தது வேதனைதான்)

நாம் என்னதான் ரயில் பயணம் செய்தாலும் இப்படி ஒரு ரூட்ல நாம போனதில்லையே என வியக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர்

கண்களுக்கு போரடிக்காமல் காட்சிகளை நகர்த்தியிருப்பது ஒளிப்பதிவாளரின் கைவண்ணம்.

படத்தொகுப்பாளருக்கு வேலையில்லை. அவ்வளவு வெட்ட வேண்டியிருக்கு.

CsIemSUUIAAVbhM

படத்தின் ப்ளஸ்…

  • முழுக்க முழுக்க ரயில் பயணம்
  • டிஆர்பி ரேட்டிங்குங்காக விவாதம் நிகழ்ச்சி நடத்தும் சேனல்கள்
  • இரண்டாம் பாதியின் விறுவிறுப்பான காட்சிகள்
  • ஒளிப்பதிவும் பாடல்களும்

படத்தின் மைனஸ்…

  • பேசிக் கொண்டே இருக்கும் கேண்டீன் ஆட்கள்
  • கிராபிக்ஸ் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்
  • பற்றி எரியும் ரயிலில் டூயட் பாட்டு
  • டிரைவர் இல்லாத ரயிலில் ஜாலியான பயணிகள்
  • ஒரே அடியாக கீர்த்தியை பாட்டு பாடச் சொல்லி லூஸ் பெண்ணாக காட்டியிருப்பது

இயக்குனர் பற்றி…

விவாத மேடை அமைக்கும் டிவி சேனல்கள் இறுதிவரை அதற்கு முடிவு சொல்லாமல் இருப்பதை அப்பட்டமாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.

மேலும் டிஆர்பிக்காக மனிதர் உயிரோடு விளையாடும் சேனல்களையும் வெளுத்து வாங்கியிருக்கிறார்.

முதல் பாதி, காமெடி, பயணிகள் என செல்வதால் ரயில் எதை நோக்கி செல்கிறது என கொஞ்சம் குழப்பம் வரலாம்.

ஆனால் பிற்பாதியில் நம்மை ரயில் பயணத்தில் ஒன்ற வைத்து ஸ்டேஷனில் சேர்கிறார் பிரபு சாலமன்.

இதுநாள் வரை காடு, அழுக்கு மனிதர்கள் என சென்ற இயக்குனர் இம்முறை சற்று வித்தியாச ரயில் களத்தில் கொண்டு சென்று அதை யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்.

இவ்வளவு ரயில் வேகத்தில் இப்படி எல்லாம் சண்டை போட்டு, பாட்டு பாடி ஆட முடியுமா? பயமே இல்லாமல் பயணிக்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.

தேவையில்லாத காட்சிகள் மற்றும் சினிமாவுல லாஜிக் பார்க்கக் கூடாதுன்னா இந்த ரயில் பயணம் சிறக்கும்.

மொத்தத்தில் தொடரி: கெட்டியா புடிச்சிட்டு ஏறுங்க

ரெமோ டிரைலர் விமர்சனம்

ரெமோ டிரைலர் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் ரெமோ.

இதில் இவர் பெண் வேடமிட்டு நடித்துள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் நர்ஸ் வேடம், மர்லின் மன்றோ உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே கிளுகிளுப்பையே உண்டாக்கியுள்ளது எனலாம்.

மேலும் மீசை பியூட்டி, செஞ்சிட்டாளே, சிரிக்காதே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இணையங்களில் டிரெண்டாகி உள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன், சதீஷ், ஆடுகளம் நரேன், ராஜேந்திரன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கௌரவ தோற்றத்தில் ஸ்ரீதிவ்யாவும் நடித்திருக்கிறாராம்.

இந்நிலையில் சற்றுமுன் இதன் டிரைலர் வெளியானது. 2 நிமிடங்கள் 5 நொடிகள் ஓடக் கூடியது. இந்த ட்ரைலர் பற்றிய ஒரு பார்வை இதோ….

இதில் முதல் காட்சியே சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில் கபாலியின் மிகப்பெரிய பேனர் உள்ளது.

அதை பார்க்கும் சிவகார்த்திகேயன், நம்முடைய பேனரும் இங்கு இதுபோல் இருக்கவேண்டும். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை பார்த்து சான்ஸ் கேட்க வேண்டும் என நினைக்கிறார்.

அதற்கு இவரது அம்மா சரண்யாவோ, உனக்கு நடிப்பு வராது என மட்டம் தட்டுகிறார்.

இருந்தாலும் பிடிவாதம் பிடிக்கும் சிவா, கே.எஸ். ரவிக்குமாரை சந்தித்து நடிக்க வாய்ப்பு கேட்கிறார்.

remo ks ravikumar

இப்போ எடுக்கிற படத்துக்கு நர்ஸ் கேரக்டர்தான் இருக்கு. அதுல ஹீரோ அப்படித்தான் இருக்கனும் என்கிறார்.

அதன்பின்னர் சிவா, கீர்த்தி சுரேஷ் பின்னாடி ஜொள்ளு விட்டு அலைவதும், நர்ஸ் வேடம் அணிந்து ரகளை செய்வதும் ரசிக்கும் படி உள்ளது.

இதனிடையே வரும் அனிருத் பின்னணி இசையை ரசிகர்களுக்கு செம ட்ரீட்தான்.

நர்ஸ் ஆக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் யோகி பாபு ஐ லவ் யூ சொல்லி ரோஜா கொடுக்கிறார்.

பிசி ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு ப்ரேமும் பக்கா கலர்புல்லா இருக்கிறது.

remo trailer sivakarthikeyan

சிவா காதலில் ஏதோ பிரச்சினை சந்திக்கிறார். அப்போது அவர் பேசும் வசனம் நிச்சயம் இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

காதலிக்கிறது பொண்னு கிடைக்கம்முன்னு முயற்சி பண்ணாதவன், அந்த பொன்னு கிடைக்கலையேன்னு வருத்தப்படறதுக்கு தகுதியே இல்லாதவன் என்று பன்ச் டயலாக் பேசுகிறார்.

இதில் ஆக்ஷனிலும் குறை வைக்கவில்லை இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்.
ஆண் வேடத்தில் இருக்கும் சிவாவுக்கும் பெண் வேடத்திற்கும் என அதிரடியானை பைட்களை வைத்திருக்கிறார்.

இடையே சதீஷ்ம் மொட்டை ராஜேந்திரனும் வந்து கலகலப்பூட்டி செல்கிறார்கள்.

remo sivakarthi keerthy suresh

இறுதியாக அப்பாடா பெண் வேஷம் போடுறது ரொம்ப கஷ்டம்டா சாமி என்று அலுத்துக் கொண்டே கூந்தல் விக்கை அவுத்து விடுகிறார் சிவா.

அந்நேரம் பார்த்து வரும் கீர்த்தி சுரேஷ், எனக்கு 23 வயசாகியது. அம்மா அப்பா பார்க்கும் பையனைத்தான் கல்யாணம் செய்வேன் என கத்திவிட்டு செல்கிறார்.

அப்போது சிவாவின் ஆண் வேஷத்தை பார்த்து விடுகிறார். ஆனால் ஒன்று சொல்லாமல் செல்லவே… ஐய்ய்யோ பாத்துட்டான் பாத்துட்டான் என ரிக்ஷா மாமா ஸ்டைல் கவுண்டமணி போல் பேசி இன்னும் ரசிக்க வைக்கிறார் சிவா.

ஆக மொத்தம் இந்த 2016 விஜயதசமி நாட்கள், ரெமோ நாயகியால் களை கட்டும் என தெரிகிறது. வாழ்த்துக்கள் ரெமோ டீம்.

உச்சத்துல சிவா விமர்சனம்

உச்சத்துல சிவா விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கரண், நேகா, ஆடுகளம் நரேன், இளவரசு, ரமேஷ் கண்ணா, பேராசிரியர் ஞானசம்பந்தம், கும்கி அஸ்வின், சங்கிலி முருகன், கோவை சரளா (குரல் மட்டும்) மற்றும் பலர்.
இசை : வித்யாசாகர்
ஒளிப்பதிவு : ஹார்முக்
இயக்கம் : ஜேப்பி
பிஆர்ஓ : யுவராஜ்
தயாரிப்பாளர் : கே என்டர்டெயின்மென்ட் – தேவி கரண்

karan uchathula siva 3

கதைக்களம்…

கால் டாக்சி டிரைவர் கரண் ஒரு பகவத் கீதை கிருஷ்ண பக்தர். அம்மா சொல் கேட்டும் பிள்ளை.

நாளை காலை பெண் பார்க்க செல்லவிருக்கும் போது, முதல் நாள் இரவு சவாரிக்கு செல்கிறார்.

அப்போது எதிர்பாரா விதமாக மணப்பெண் (நேகா) ஒருவர் இவர் காரில், தன்னை காப்பாற்ற லிப்ட் கேட்கிறார்.

அவர் மீது கரனுக்கு காதலும் வருகிறது. ஆனால் அப்போதுதான் ஹீரோயின் அவர் போதை கும்பலில் சிக்கியது தெரிய வருகிறது.

அந்த பெண்ணை காப்பாற்ற போய், இவர் போலீசில் மாட்டிக் கொள்கிறார்.

அதன் பின்னர் தன்னை நிரபராதி என நிரூபித்தாரா? பெண் பார்க்க போனாரா? அல்லது காதலியை கரம்பிடித்தாரா? என பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் இந்த சிவா.

karan uchathula shiva

கதாபாத்திரங்கள்…

நீண்ட நாட்களுக்கு பின் வந்தாலும், அதே இளமை. ரெப்ரிஜிரேட்டில் இருந்து வந்தவர் போல படு ப்ரெஷ்ஷாக இருக்கிறார்.

ஆக்ஷனில் அனல் பறக்க செய்திருக்கிறார். இதில் கொஞ்சம் காமெடிக்கு டிரை செய்து பாஸ் மார்க் பெறுகிறார்.

காதலுக்கும் காதலிக்கும் பெரிதாக வேலையில்லை. நேகா அழகாக வருகிறார்.

இளவரசு, ரமேஷ் கண்ணா காமெடி போலீசாக வந்தாலும், காமெடிக்கு பஞ்சமே.

கும்கி அஸ்வின் காட்சிகளை அதிகப்படுத்தியிருந்தால் சிரிக்க வைத்திருக்கலாம்.

வெறும் குரலாக மட்டும் வரும் கோவை சரளாவுக்கு காட்சிகள் கொடுத்திருந்தால், அவர் இன்னும் படத்தை கலகலப்பாக்கி இருப்பார்.

ஆடுகளம் நரேன், டானாக வந்து செல்கிறார். சங்கிலி முருகனும் இருக்கிறார்.

uchathula siva stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

டைட்டில் கார்டு பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் வித்யாசாகர். அப்போது வரும் கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தின் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

பேசு பேசு இசை மொழி … உச்சத்துல சிவன் தான் பாடல்கள் கொஞ்சம் ஓகே. வித்யாசாகரின் வழக்கமான மெலோடி இதில் மிஸ்ஸிங்.

பேராசிரியர் ஞானசம்பந்தன் காட்சிகளில் ஒரே அட்வைஸ் மழையாக இருக்கிறது.

ஜேப்பி இயக்கத்தில் சண்டை காட்சிகள் ஆக்ஷன் பிரியர்களுக்கு விருந்துதான். ஒரே இரவில் நடக்கும் கதையில் கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார். இடைவேளை ட்விஸ்ட் ரசிக்க வைக்கிறது.

உச்சத்துல சிவா… ஆக்ஷன் மேஜிக்

பகிரி விமர்சனம்

பகிரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரபு ரணவீரன், ஷ்ரவியா, ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், சரவண சுப்பையா, மாரிமுத்து, டி.பி. கஜேந்திரன், கே.ராஜன், பாலசேகரன், சுப்ரமணியன் மற்றும் பலர்.
இசை : கருணாஸ் எம்எல்ஏ
ஒளிப்பதிவு : வீரகுமார்
இயக்கம் : இசக்கி கார்வண்ணன்
பிஆர்ஓ : A. ஜான்
தயாரிப்பாளர் : லட்சுமி கிரியேஷன்ஸ் (இசக்கி கார்வண்ணன்)

கதைக்களம்…

தாம்பரம் தாண்டி முடிச்சூரிலிருந்து வேலை தேடி சென்னை வரும் இளைஞனின் கதைதான் இந்த பகிரி.

நாஸ்மாக்கில் (டாஸ்மாக் என்று படித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை) வேலையில் சேரவேண்டும் என்பதை வாழ்க்கை லட்சியமாக வைத்திருக்கிறார் ஹீரோ.

இதனிடையில் காதல், விவசாயம் என கதை பயணிக்கிறது.

ஒரு சூழ்நிலையில நாஸ்மாக் திட்டத்தை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. இதனிடையில் வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்களால் தமிழக அளவில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது.

இதனால் ஹீரோவின் லட்சியம் என்ன ஆனது? நாஸ்மாக் திட்டம் மூடப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

Pagiri- Prabhu Ranaveran, Sharviya (2)

கதாபாத்திரங்கள்…

பிரபு ரணவீரன் தன் முதல் படத்திலேயே காதலிப்பதையும் வேலையையும் லட்சியமாக கொண்டு கேரக்டராக வாழ்ந்திருக்கிறார்.

தன் அம்மாவிடம் காதலியை மோதவிட்டு, தன் காதலை சொல்லுமிடத்தில் ரசிக்கி வைக்கிறார்.

நாயகி ஷ்ரவியாவுக்கு அறிமுக காட்சியே அசத்தல். பெண் பார்க்க வந்தவர் இவரது அம்மாவை சைட் அடிக்க, அதன் பின் இவர் எகிறும் காட்சிகள் ரகளை.

இவரிடம் நடிகை விசாகா சிங்கின் சாயல் தெரிகிறது.

காதலனுக்காக இவரும் இவரது அம்மா செய்யும் உதவிகள் ரசிக்க வைக்கிறது.

ரவிமரியா, ஏ.வெங்கடேஷ், டிபி.கஜேந்திரன் ஆகியோர் காமெடி ட்ராக்கை கவனித்து கொள்கிறார்கள்.

அதிலும் ரவி மரியாவின் ஆண்ட்டி சைட் அடிக்கும் காமெடி ‘ஜொள்’ ரகம்.

சரவண சுப்பையா, சுப்ரமணியன் ஆகியோரும் பொருத்தமான தேர்வு.

Pagiri Stills-Prabhu Ranaveera, Shravya, Ravimariya, A (4)

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிகர் கருணாஸ்தான் இதன் இசையமைப்பாளர். இரண்டு பாடல்கள் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை ஓகே.

வீரக்குமாரின் ஒளிப்பதிவில் பார் காட்சிகள் அச்சு அசலாக உள்ளது.

படத்தின் ப்ளஸ்…

  • சரக்கு பாக்டரியை பெண்கள் நடத்தும் போது நாங்க சரக்கு கடை வைக்க கூடாதா? என கேட்பது நச்.
  • மதுவிலக்கை வைத்து தலைவர்கள் ஆடும் அரசியல் விளையாட்டு
  • மக்களை சுரண்டும் ஊழல் வாதிகளை பற்றிய சாட்டையடி வசனங்கள்
  • போராட்டம் நடத்துபவர்கள் அனைவரும் தினக்கூலியை எதிர்பார்த்து செய்வதன் மூலம் அவர்களின் போலித்தனத்தை காட்டியிருக்கிறார்.

படத்தின் மைனஸ்…

  • படம் முழுக்க நாஸ்மாக்கை காட்டிவிட்டு க்ளைமாக்ஸில் ஒரு காட்சியில் விவசாயத்தை காட்டியிருப்பது கொஞ்சம் ஒட்டவில்லை. படம் முடிந்துவிட்டதா? என யோசிக்க வைக்கிறது.
  • விவசாயத்தின் அருமையை இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம்.
  • எடுத்துக் கொண்ட கதையை அரசியல் காரணங்களால் வெட்டி விட்டார்களா? எனத் தெரியவில்லை. கனெக்ஷன் மிஸ்ஸிங்.

Director Esakki Karvannan (3)

இயக்குனர் பற்றி…

படத்தின் ஆரம்பத்தில் வரும் டிவி விவாதங்களும் அதில் முடியும் சண்டை காட்சிகளும் இன்றைய டிவியின் நிலைமையை எடுத்துக் காட்டுகிறது.

பொதுவாக இதுபோன்ற பார் சம்பந்தப்பட்ட படங்களில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருக்கும். ஆனால் இதை குடும்ப கதையோடு கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் இசக்கி.

படம் முழுக்க டாஸ்மாக் காட்சிகள் என்றாலும், ஐட்டம் டான்ஸ் இல்லை என்பது ஆச்சரியம்தான்.

மதுவிலக்கு படத்தை மிக தைரியத்தோடு எடுத்து சொல்லியிருக்கிறார். அதற்கு மஞ்சள் துண்டு போட்ட தலைவர்களை காண்பிப்பதும் ரசிக்க வைக்கிறது.

பகிரி – மது குடிப்பவர்களுக்கும் குடிக்காதவர்களுக்கும் பிடிக்கும்.

ரெமோ இசை பாடல்கள் விமர்சனம்

ரெமோ இசை பாடல்கள் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக அமைந்துள்ளது ரெமோ.

சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளதால் இப்படத்தின் பாடல்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகிவிட்டது.

மேலும் இவர்களுடன் பாடல் ஆசிரியர்களாக விக்னேஷ் சிவன், விவேக் உள்ளிட்டோரும் இணைந்துள்ளனர்.
இதில் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார்.

பாடல்கள் பற்றிய ஒரு பார்வை…

1) ரெமோ நீ காதலன்…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : அனிருத்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 03 நொடிகள்

பாஸ்ட் பீட்டில் இப்பாடல் ஒலிக்கிறது. இப்பாடலின் சிங்களி முன்பே வெளியானதால் பெரும் வரவேற்பு உள்ளது. மேலும் இது அவ்வை சண்முகி படத்தில் உள்ள வேலை.. வேலை… என்ற பாடலை போல படத்தில் ஒலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2) செஞ்சிட்டாளே…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : அனிருத்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 11 நொடிகள்

இந்த பாடலை வச்சி செய்யாதே இளைஞர்களே இல்லை என்னுமளவுக்கு ஹிட்டடித்துள்ளது.
அனிருத் விக்னேஷ் சிவன் கூட்டணி இப்பாடலை செமயா செஞ்சிருக்காங்க.

3) சிரிக்காதே…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : ஸ்ரீநிதி மற்றும் அர்ஜீன் கனுங்கோ
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 06 நொடிகள்

ஒரு அழகான பெண் சிரித்தால், என்ன மாதிரியான மாற்றங்கள் ஒரு இளைஞனின் மனதில் உருவாகும் என்பதை சொல்லி, இனி அப்படி உன் சிரிப்பால் என்னை கொல்லாதே என்கிறார் இந்த பாடல் ஆசிரியர்.
ஸ்ரீநிதியின் குரலும் இப்பாடலுக்கு இதமான உணர்வை கொடுக்கிறது.

4) மீசை ப்யூட்டி…..
பாடல் ஆசிரியர் : விவேக்
பாடியவர்கள் : ரிச்சர்ட் மற்றும் அனிருத்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 10 நொடிகள்

ஆண் மகன் ஒருவன் பெண் வேஷமிட்டு வந்து, தன் அழகால் இளைஞர்களை சுண்டி இழுக்கிறான். இந்த மீசை ப்யூட்டியை பார்த்தால் ஆசை வரும். லூட்டி அடிக்க தோனும்.
அனிருத் மற்றும் ரிச்சர்ட்டின் குரல்கள் இப்பாடலை அடிக்கடி கேட்க செய்யும்.

5) தாவுயா…..
பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக்
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன்
பாடல் நேரம் : 4 நிமிடங்கள் 27 நொடிகள்

கானா கிங் தேவா பாடலை கேட்ட போல ஒரு உணர்வு. இது இப்படம் வெளியானால் இது இளைஞர்களின் மற்றொரு சூப் பாடலாக மாறும்.

6) வாடீ என் தமிழ் செல்வி…..
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் சிவன்
பாடியவர்கள் : நகாஷ் அஷிஷ்
பாடல் நேரம் : 3 நிமிடங்கள் 50 நொடிகள்

நகாஷ் அஷிஷ் குரல் இப்பாடலுக்கு அழகு சேர்க்கிறது. இனி தமிழ் செல்வி பெயர் வைத்தவர்களுக்கு எல்லாம் இப்பாடலை அடிக்கடி நினைவுக்கு வரும்.

கிடாரி விமர்சனம்

கிடாரி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சசிகுமார், நிகிலா விமல், நெப்போலியன், சுஜா வருணி, வேல ராமமூர்த்தி மற்றும் பலர்.
இசை : தர்புகா சிவா
ஒளிப்பதிவு : எஸ் ஆர் கதிர்
படத்தொகுப்பு : பிரவீன் ஆண்டனி
இயக்கம் : பிரசாத் முருகேசன்
பிஆர்ஓ : நிகில்
தயாரிப்பாளர் : சசிகுமார்

 கதைக்களம்…

வழக்கமான கிராமத்து வன்முறை களம்தான். இதில் கொஞ்சம் மாறுபட்ட திரைக்கதையுடன் ஆரம்பிக்கிறார் இயக்குனர்.

படத்தின் முதல்காட்சியே ரத்தம் தெறிக்க ஒரு மனிதர் உயிருக்கு போராடுகிறார். அவர்தான் வேல ராமமூர்த்தி. குத்துயிரும் கொலையிருமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

ஊரில் மிகப்பெரிய பஞ்சாயத்து முதல் அனைத்தையும் செய்து வந்த இவரை கொன்ற எதிரிகள் யாராக இருக்கக்கூடும் என பக்கம் பக்கமாக ப்ளாஷ்பேக் காட்சிகள் விரிகிறது…

kidari stills

கதாபாத்திரங்கள்…

(கி)ராமராஜன் போல், கிராமத்து கேரக்டருக்கும் சசிகுமாருக்கும் அப்படியொரு பொருத்தம். கிராமத்து மண் வாசனை தகுந்த மாதிரி விளாசி தள்ளியிருக்கிறார்.

ஆனால் என்ன, அழகான ஹீரோயின்கள் இருந்தாலும் மனிதர் கெத்து மெயிண்ட் பன்னும் கேரக்டர்களாக செய்து கொண்டிருக்கிறார். கொஞ்சம் இறங்கி வாங்க சார்.

கெமிஸ்ட்ரி க்ளாசில ஜாய்ண்ட் பன்னுங்க சீக்கிரம்.

வெற்றிவேலை விட இதில் கூடுதல் அழகையும் நடிப்பையும் கொடுத்திருக்கிறார் நிகிலா விமல்.  வீட்டைவிட்டு சென்ற கிடாரி, திரும்பி வந்த பின், அவரை மடக்கி கொஞ்சும் காட்சியில் தன் குறும்பான நடிப்பால் நிகிலா அங்கே நிற்கிறார். சபாஷ்.

Kidari-Movie-Stills-3

கொம்பையா பாண்டியனாக வரும் வேலராமமூர்த்திதான் படத்தின் ஆணிவேர்.  படம் முழுவதும் ஆட்சி செய்கிறார். இவரது கம்பீர குரலும் படத்திற்குபக்க பலம்.

சட்டையை கழட்டி போட்டு விட்டு வீரத்துடன் நடந்து வரும் காட்சிகளில் அசத்துகிறார்.

பல படங்களில் சின்ன கேரக்டர்களை செய்த சுஜா வருணிக்கு இதில் சிறப்பான வேடம். நிறைவாக செய்திருக்கிறார். இனி வாய்ப்புகள் நிச்சயம் தேடிவரும்.

நாம் பெரிதும் எதிர்பார்த்த நெப்போலியன் கேரக்டர் படத்தின் இறுதியிலே வருகிறது.  மனிதரிடம் அதே அமைதியான நடிப்பு உள்ளது. ஆனால் காட்சிகளில் அழுத்தமில்லை.

ஜோக்கரில் கலக்கிய மு. ராமசாமி இதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ப்ளாஷ்பேக் காட்சியிலும் கெட்டப் நன்றாக பொருந்தி இருக்கிறது.  இவரது குரலே படம் முழுக்க ஒலிக்கிறது.

இவர்களுடன் வக்கீல், போலீஸ் கேரக்டர்கள் வரை அனைவரும் கச்சிதம்.

kidari stills 1

தொழில்நுட்ப கலைஞர்கள்…

படத்தின் மிகப்பெரிய பலம் பின்னணி இசைதான். கிடாரிக்கு காட்சிகளில் வெயிட் இருக்கிறதோ இல்லையோ இசையில் வெயிட் கொடுத்திருக்கிறார் தர்புகா சிவா. கிடாரியே உன் போல பாடல் தாளம் போட வைக்கிறது.

எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவில் கிராமத்து மனிதர்கள், வீடுகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

எடிட்டர் பிரவீன் ஆண்டனி நிறைய காட்சிகளை வெட்டியிருக்கலாம். நிறைய ப்ளாஷ்பேக் கொடுத்து, ட்விஸ்ட் என்ற பெயரில் பொறுமையை சோதித்துவிட்டனர்.

பழிவாங்கும் கிராமத்து கதையாக தொடங்கினாலும், க்ளைமாக்ஸில் கதைக்கு கூடுதல் பலம் கொடுத்து நிறைவான முடிவை தந்திருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன்.

மொத்தத்தில் கிடாரி… கிராமத்து டான்

More Articles
Follows