தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே நாயகன் மீது பெட்ரோல் ஊத்தி தீ வைக்கின்றனர் வில்லன் கும்பல். எனவே இது ஒரு ஆக்சன் படம் என்ற முடிவுக்கு நாம் வந்து சீட்டில் அமருகிறோம்.
அதன் பின்னர் படம் தொடங்குகிறது.. சமூக சிந்தனையுடன் கிராமத்தில் நாடகங்களை போடுகிறார் நாயகன்… இது ஒரு சமூக சிந்தனை உள்ள படம் என நாம் நினைக்கிறோம்.
பின்னர் ஐயர் வீட்டு பெண் சஞ்சிதாவுக்கு நாடகம் வசனங்களை எழுதி கொடுத்து கவருகிறார் நாயகன்.
இது ஒரு காதல் படம் என்று நாம் நினைக்கையில் உதவி இயக்குனராக வேண்டும் என வாய்ப்பு கேட்டு பிரபு சாலமனுக்கு கடிதம் எழுதுகிறார் நாயகன். உடனே சென்னைக்கு வர சொல்கிறார் பிரபு சாலமன்.
அங்கு சில படங்கள் பணிபுரிந்த பின் நாயகனாக வேண்டும் என்ற ஆசையில் விஜய் சேதுபதிக்கு கதை சொல்கிறார். எனவே இது உதவி இயக்குனர்களின் சிரமங்களை சொல்லும் படம் என நாம் நினைக்கிறோம்.
இதனிடையில் நாயகியும் சென்னையில் வேலைக்கு செல்கிறார். நாம் ஏன் தனியாக வாடகை கொடுக்க வேண்டும். இருவரும் திருமணம் செய்து ஒரு அப்பார்ட்மெண்ட்டை வாங்கி லோன் கட்டலாம் என்கிறார்.
ஆனால் குழந்தை பிறந்ததால் வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கிறார். இப்படியாக பல குழப்பங்களை ஏற்படுத்தி அவருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் விஜயகுமார்.
கேரக்டர்கள்…
பிரபல பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் இந்த படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஆக்சன் காட்சிகளில் ஓகே ரகம்.. முகபாவனைகளில் கூடுதல் கவனம் தேவை.
ஐயர் வீட்டு பெண்ணாக சஞ்சிதா. எந்த விதத்திலும் மாமி வீட்டு அம்சம் அவருக்கு ஒட்டவில்லை.. நாயகனின் கிராமத்து நண்பனாக அமுதவாணன் நடித்திருக்கிறார். சிட்டி நண்பராக வி ஜே ஆண்ட்ரூஸ் வருகிறார்.. யாருக்கும் பெரிதாக காட்சிகள் இல்லை.
இயக்குனர் பிரபு சாலமன் இயக்குனராகவே வருகிறார்.. அவரது காட்சிகள் செயற்கைத் தனமாக உள்ளது.
சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி வருகிறார். எப்படி கதை கேட்டார்? அவருக்கு பிடித்திருக்கு என்கிறார்.. நமக்கு தான் ஒன்றுமே புரியவில்லை..
டெக்னீசியன்கள்…
சீனு ராமசாமியின் உடன் பிறந்த தம்பி விஜயகுமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். கிராமத்தில் காட்டப்படும் ஆலமரம் மிக அழகு. அதுபோல சென்னை காட்சிகளும் அழகாய் இருக்கின்றன. ஈனால் காட்சிகளில் உயிரோட்டம் இல்லை. எந்த காட்சியிலும் நம்மால் பெரிதாக ஒன்ற முடியவில்லை.
சீனு ராமசாமி தன் தம்பிக்கு திரைக்கதை தீனி போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக ஜெயித்திருப்பார்.
கிராமத்துக் குத்தாட்டம் ஆட்டம் போட வைக்கிறது. அதில் சமூக சிந்தனை வரிகள் மனதில் இடம் பிடிக்கின்றன.
ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது கிளைமாக்ஸ் காட்சி தான் படத்திற்கு பெரிய குறை.. என்ன நடக்கிறது என்பது புரியாமலே நாம் தியேட்டர் விட்டு வெளியே வருகிறோம்.
ஒருவேளை நாம தூங்கி விட்டோமா என பக்கத்தில் இருந்தவரை கேட்டேன்.. இல்லை காட்சியே அப்படித்தான் இருக்கிறது என்றார்.
ஆக இந்த அழகிய கண்ணே.. பெயருக்கு மட்டுமே
Azhagiya Kanne movie review and rating in tamil