பெண்ணுக்கு கிடைக்குமா GUN.?..; லைசென்ஸ் விமர்சனம்

பெண்ணுக்கு கிடைக்குமா GUN.?..; லைசென்ஸ் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நாட்டுப்புறப் பாடகி ராஜலட்சுமி ‘லைசென்ஸ்’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

கதைக்களம்..

சிறு வயதிலேயே தன் உடன் பிறவா சகோதரியை பாலியல் தொந்தரவால் இழக்கிறார். தன் தந்தை ராதாரவி ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தும் அவரால் உதவ முடியவில்லை என்பதால் அவருடன் பேசாமல் வாழ்ந்து வருகிறார்.

தன்னுடைய லட்சிய கனவான போலீஸ் பணியை இதனால் வெறுக்கும் ராஜலட்சுமி ஒரு கட்டத்தில் ஆசிரியராக பணிபுரிகிறார்.

அப்போதும் பள்ளி மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகளைக் கண்டு ஆவேசம் அடைகிறார். இதனால் குற்றவாளிகளை போட்டுத் தள்ள துப்பாக்கி லைசென்ஸ் கேட்கிறார். போலீஸ் மறுக்கவே இதற்காக கோர்ட்டு வரை செல்கிறார் ராஜலட்சுமி.

இறுதியில் என்ன ஆனது? அவருக்கு லைசென்ஸ் கிடைத்ததா? காவல்துறை என்ன செய்தது? நீதித்துறை என்ன செய்தது? நினைத்ததை சாதித்தாரா பாரதி ( ராஜலக்ஷ்மி) என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்…

Rajalakshmi Senthil, Radhravi, N.Jeevanandam, Abi Nakshatra, Vaiyapuri, Namo Narayanan, Geetha Kailasam, Pazha Karuppaiah

முதல் படம் என்றாலும் பாரதி என்ற கேரக்டர் பாரத்தை தன் தோளில் சுமந்து போராடி இருக்கிறார் ராஜலட்சுமி. தன்னால் முடிந்தவரை நடிப்புக்கும் முயற்சித்துள்ளார்.. நேரில் இவரை பார்த்ததை விட முதிர்ச்சியான தோற்றத்தை ஏற்று வலு சேர்த்து உள்ளார்.

இளம் வயது பாரதியாக அபி நட்சத்திரா நடித்துள்ளார். சிறு வயது முதலே போலீசாக வேண்டும் என எண்ணும் அபி ஒரு கட்டத்தில் அதனை வெறுத்து தன் தந்தை ராதாரவியுடன் சண்டை போடும் போது அடடா அருமையான நடிப்பு என்று கைதட்ட வைக்கிறார்.

என்.ஜீவானந்தம், நீதிபதியாக நடித்திருக்கும் கீதா கைலாசம், பழ கருப்பையா, வையாபுரி, நமோ நாராயணன், தன்யா அனன்யா உள்ளிட்டரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

ராஜலட்சுமிக்காக வாதாடும் வக்கீலும் அழுத்தமான வசனங்களை பேசி நம்மை கவனிக்க வைக்கிறார். மேலும் போலீஸ் யூனிபார்ம் எதற்கு ? என அபி நட்சத்திர ராதாரவி இடம் சண்டை போடும்போது வசனங்கள் கைதட்ட வைக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

Directed By : Ganapathy Balamurugan

Music By : Baiju Jacob

Produced By : JRG Productions – N Jeevanandam

காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு & இசையமைப்பாளர் பைஜூ ஜேக்கப்பின் பின்னணி இசையும் பாடல்களும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு வரும் கோர்ட்டு காட்சிகள் பரபரப்பை உண்டாக்குகிறது.

பெண்களை பாதுகாக்க துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கலாம்.. ஆனால் குற்றவாளிகளை தண்டிப்பதற்கு நீங்கள் யார்? அதற்கு காவல்துறை இருக்கிறது என போலீஸ் அதிகாரிகள் செல்லும் போது வருத்தம் அடையும் ராஜலக்ஷ்மி, இறுதியாக எடுக்க முடியும் வித்தியாசமான ஒன்று.

அதேசமயம் பாலியல் வன்முறை செய்யும் சிலருக்கு இயக்குனர் கொடுத்த தண்டனையும் எதிர்பாராத திருப்புமுனை.

காலங்காலமாக குற்றவாளிகளை தண்டிக்க காவல்துறை இருந்தாலும் தவறுகள் தொடர்ந்து கொண்டே இருப்பது வேதனையான ஒன்று. இதனை தடுக்க கடுமையான சட்டங்களும் தேவை என்பதை வலியுறுத்தி இருக்கிறார் இயக்குனர் கணபதி பாலமுருகன்..

Licence movie review and rating in tamil

கேவலம்.. இதுல அய்யய்யோ வேற.; ரா ரா சரசுக்கு ரா ரா விமர்சனம் 1/5

கேவலம்.. இதுல அய்யய்யோ வேற.; ரா ரா சரசுக்கு ரா ரா விமர்சனம் 1/5

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற ‘ரா ரா சரசுக்கு ரா ரா..’ என்ற பாடல் 18 வருடங்களை கடந்தாலும் இன்ற அளவிலும் அனைவராலும் முணுமுணுக்க வைக்கும் பாடல் ஆகும்.

வித்யாசாகர் இசையமைத்திருந்த இந்தப் பாடல் தெலுங்கு பாடல் என்றாலும் தமிழ் ரசிகர்களால் பிடித்த பாடலாக அமைந்தது.

தற்போது இதுவே ஒரு படத்தின் தலைப்பு ஆகியுள்ளது. ரா ரா சரசுக்கு ராரா என்ற படத்தை கேசவ் தேபுர் என்பவர் இயக்கியிருக்கிறார். கேஷவ் தெபுர் தமிழ், தெலுங்கு, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 350 படங்களில் நடன இயக்குநராகப் பணியாற்றியவர்.

ஜி.கே.வி இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இதில் கார்த்திக், காயத்ரி பட்டேல் , கே.பி.ஒய் பாலா, மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா,ரவிவர்மா, அபிஷேக், பெஞ்சமின் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்ஏ.ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.

இந்தப் படம் நவம்பர் 3 நேற்று வெளியானது படம் படத்தில் எந்த ஒரு விஷயமும் சுவாரசியமாக இல்லை என்பது வருத்தம்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐந்து தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்திற்கு சென்சாரில் அனுமதி இல்லை. ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல கௌதமி சொன்னார். படத்தில் 60 கட்டுகள் இருந்தன என இயக்குனர் கேசவ் ஆதங்கத்துடன் பேசியிருந்தார்.

நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன்.. எனவே ரஜினி படத்தில் உள்ள பாடலை எனது படத்திற்கு தலைப்பாக வைத்தேன். என்றெல்லாம் பேசி இருந்தார்.

அந்த காலத்து சென்சார் நிபந்தனைகளை இன்னும் வைத்துக் கொண்டிருப்பது ஏன்? சென்சார் விதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என கடுமையாக பேசியிருந்தார்.

இப்படி ஆதங்கமாக பேசி இருக்கிறாரே?! ஒருவேளை நல்ல படைப்பை கொடுத்துள்ளாரோ? என்ற எண்ணத்தில் இந்த படத்திற்கு சென்றோம். இந்த படம் எல்லாம் தேவையா? இந்த கதை எல்லாம் தேவையா என்பதுதான் நமக்கு ஏற்பட்ட எண்ணம்.

இந்த படத்திற்கு சென்சார் கொடுத்தது கூட தேவையில்லாத ஒன்றாகும். இதுபோல நிறைய பிட்டு படங்கள் வந்திருந்தாலும் ஒரு காட்சி அமைப்போ ஒரு வசனமோ அல்லது பாடலோ இப்படி ஏதாவது ஒரு சுவாரசியம் இருக்கும்.

ஆனால் ‘ரா ரா சரசுக்கு ரா ரா’ என்ற படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் இதையே ஒரு விமர்சனமாக இங்கே பதிவிடுகிறோம்.

ஒரு லேடிஸ் ஹாஸ்டலில் உள்ள பெண்கள்.. அங்கே நடக்கும் விஷயங்கள்தான் படத்தின் கதை. ஒரு ஆண் விபச்சாரனை உள்ளே அழைத்து உடலுறவு கொள்ள நினைப்பதும்.. வேறொரு பெண் குளித்துவிட்டு தன் காதலனுடன் கிஸ் அடிப்பதும்.. இப்படியாக சில காட்சிகள் சென்றாலும் கூட எந்த இடத்திலும் சுவாரஸ்யம் இல்லை என்பது தான் வருத்தம்.

இதுல அய்யய்யோ வேற அம்மம்மா வேற கேசவ் தெபூர் என்ன நினைத்து பேசினாரோ தெரியவில்லை.???!!!

RARA SARASUKKU RARA movie review and rating in tamil

ரூல் நம்பர் 4 விமர்சனம்..; காட்டுக்கள் ஒரு கஜானா

ரூல் நம்பர் 4 விமர்சனம்..; காட்டுக்கள் ஒரு கஜானா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

YSIMY புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘ரூல் நம்பர் 4.’ பாஸர் (Director Bosser) இயக்கியுள்ளார்.

நவம்பர் 3 முதல் தமிழகமெங்கும் படம் வெளிவருகிறது. ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஸ் (An Action Reaction JENISH Distribution ) படத்தை வெளியிடுகிறார்

ஒன்லைன்…

ஒரு வங்கி.. வங்கி ஏடிஎம்.. அது தொடர்பாக பணிபுரியும் ஆபிசர், செக்யூரிட்டி, டிரைவர் உள்ளிட்டோர்.. 5 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் வடஇந்திய கொள்ளையர்கள்.. அவர்களை வேட்டையாடும் போலீஸ்.. பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடும் போலீஸ் இவர்களைச் சுற்றிய கதைதான்.

கதைக்களம்…

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிறான். இவர் ஏடிஎம் வேனில் துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டியின் மகளை காதலிக்கிறார். இவர்தான் கதை நாயகி.

ஒரு சூழ்நிலையில் அதிகாரி செக்யூரிட்டி & அவரது மகள் அக்கவுண்டன்ட் மற்றும் டிரைவர் ஆகிய ஐவரும் அந்த வேனில் பயணிக்கின்றனர்.

ரூ. 5 கோடி பணத்தை ஒரு காட்டுப்பகுதி வழியாக வேனில் கொண்டு செல்லும்போது வட இந்திய கொள்ளையர்கள் அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்.

வனப்பகுதியில் நடக்கும் இந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க வனத்துறையினரும் காவல்துறையினரும் தேடுதல் வேட்டையில் இறங்குகின்றனர்.

அது ஒரு அரசியல்வாதியின் கருப்பு பணம் என்பதால் அதனை கொள்ளை அடிக்க ஒரு போலீஸ் திட்டமிட்டு தன்னுடைய ஆட்களை ஏவி விடுகிறார்.

இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா. டிரைவர் கேரக்டருக்கு அப்படியே பொருந்தி போகிறார்.. நாயகியை கண்டதும் தேடி தேடி உருகுவதும் அவளை வேனில் ஏற்றிக்கொள்ள திட்டம் போடுவதும் என காதலர்களின் குறும்புத்தனத்தை நினைவுபடுத்துகிறார்.

ஆனால் கொள்ளையடிக்கும் போது பெரும்பாலும் இவர் வேனில் இருப்பது ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.. அதற்கு எல்லாம் ஈடு கட்டும் வகையில் கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் இறங்கி அடித்திருக்கிறார் பிரதீப் கிருஷ்ணா.

நாயகி ஸ்ரீகோபிகா.. கேரளத்து வரவு போல.. மாறாத புன்சிரிப்பு.. அழகான கண்களை காட்டி ரசிகர்களை வசியம் செய்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் ஸ்ரீ கோபிகா அடடா இவர் வழக்கமான ஹீரோயின் இல்லப்பா என்று சொல்ல வைக்கிறது..

நாயகியின் அப்பாவாக செக்யூரிட்டி மோகன் வைத்யா. கொள்ளையடிக்கும் காட்சியில் இவரது நடிப்புதான் முழுவதுமாக கவனிக்க வைக்கிறது.. பதட்டம் ஒரு பக்கம்.. மகள் மீது பாசம் ஒரு பக்கம்.. வேலை போய்விடுமோ என்ற பயம் ஒரு பக்கம் என அனைத்தையும் திறமையாக கையாண்டு உள்ளார்.

இப்படி ஒரு ஜாலியான பேங்க் ஆபீஸர் இருப்பாரா என்று கேட்க வைக்கிறார் ஜீவா ரவி. இப்படி இருந்தால் நிச்சயம் அந்த பேங்க் கலகலப்பாக இருக்கும் என நம்பலாம்.. இவரின் முடிவு பரிதாபமான ஒன்று.

அக்கவுண்டண்டாக வரும் கர்ப்பிணி பெண் கண்களால் நடிப்பாலும் நம்மை கவர்கிறார்.

காட்டிலாக்கா துறை அதிகாரி பிர்லா போஸின் வில்லத்தனம் கெத்து. காவல்துறைக்குள் கருப்பு ஆடு இவரே.

டெக்னீசியன்கள்…

பேங்க் காட்சிகள் கொஞ்சம் என்றாலும் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கேமராவை கொண்டு சென்று படம் பிடித்து இருப்பது பாராட்டுக்குரியது.. வேனை துரத்தும் காட்சி இருட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள் என அனைத்தையும் பதைபதைக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் டேவிட் ஜான்.

‘என்ன கொன்னுபுட்டியே வெச்சு செஞ்சுபுட்டியே’, ‘சஸ்பென்ஸு ஓப்பன் ஆனதே’ பாடல்களில் தீரஜ் சுகுமாறன் நம்மை ரசிக்க வைக்கிறார்..

பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி த்ரில்லருக்கு உண்டான எனர்ஜியை கொடுத்திருக்கலாம்.

வித்தியாசமான கதையை எடுத்திருக்கும் இயக்குனர் அதை சின்ன சின்ன லாஜிக் ஓட்டைகளால் கோட்டை விட்டுள்ளார்.

முக்கியமாக கொள்ளையர்கள் துப்பாக்கி எடுத்துக் கொண்டு மிரட்டும் போது 5 கோடியை கொண்டு செல்லும் செக்யூரிட்டி கையில் துப்பாக்கி இருந்தும் அதை பயன்படுத்தாதது ஏன்?

வேனை சுற்றி தீப்பிடித்து எரியும்போது உள்ளே இருப்பவர்களின் நடிப்பு போதுமானதாக இல்லை.. அதுபோல எடிட்டீங்களிலும்… வெளியே தீப்பிடித்து எறியும்போது அந்த கண்ணாடிக்குள் நெருப்பு கொஞ்சம் கூட காட்டாதது ஏன்?

கொள்ளையர்கள் ஏடிஎம் வேனை 1 மணி நேரமாக தாக்கிக் கொண்டேயிருப்பது ஓவரோ ஓவர்.

சின்ன சின்ன குறைகளை தவிர்த்தால் இந்த ரோல் நம்பர் நான்கை பார்க்கலாம். முக்கியமாக ரூல் நம்பரை நான்கு என்பது என்ன என்பதை நாயகி மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாஸ்கர்.

Rule Number 4 movie review and rating in tamil

மார்கழி திங்கள் விமர்சனம்..; பாரதிராஜாவை மிஞ்சுவாரா மனோஜ்.?

மார்கழி திங்கள் விமர்சனம்..; பாரதிராஜாவை மிஞ்சுவாரா மனோஜ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘தாஜ்மஹால்’ படத்தில் தன்மகன் மனோஜை நடிகராக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் பாரதிராஜா. ஆனால் தன் ஆசை நடிப்பு மீது இல்லை. படம் இயக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை என்றார்.

அதன்படி இந்த மார்கழி திங்கள் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறார் மனோஜ்.

என் இனிய தமிழ் மக்களே.. எனக்கு ஆதரவளித்தது போல தன் மகனுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்ற பாரதிராஜாவின் குரலுடன் படம் தொடங்குகிறது.

இயக்குனர் சுசீந்திரன், கதை திரைக்கதை அமைத்து தயாரித்துள்ளார்.

கதைக்களம்…

நாயகன் வினோத் மற்றும் நாயகி கவிதா இருவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் காதல் மலர்கிறது.

இதனையறிந்த கவிதாவின் தாத்தா பாரதிராஜா ஒரு நிபந்தனை விதிக்கிறார். படிப்பு தான் வாழ்க்கை மாற்றும். கல்லூரி படிப்பையும் முழுவதுமாக முடியுங்கள். அதன் பிறகு திருமணம் செய்து வைக்கிறேன் என்கிறார். படிப்பை முடிக்கும் வரை நீங்கள் இருவரும் எந்த தொடர்பிலும் இருக்கக் கூடாது என்கிறார்.

அதன் பிறகு என்ன நடந்தது.? காதலர்கள் நிபந்தனைக்கு ஒத்துக் கொண்டார்களா? படிப்புக்கு பின்னர் இணைந்தார்களா.? தாத்தா பாரதிராஜா சொன்னதை நிறைவேற்றினாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டம் போட்டாரா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

கவிதாவாக ரக்ச்ஷனா… வினோத் ஆக ஷ்யாம் செல்வன்… இருவரும் கிராமத்து இளம்காதலை யதார்த்தமாக வெளிப்படுத்தினர். ஆனால் நாயகனின் நடிப்பில் இன்னும் மெனக்கடல் தேவை. நாயகி கவிதா நாயகனை விட அதிகமாகவே காதல் செய்து நம்மை கவர்கிறார்.

நாயகியின் தாய்மாமனாக இயக்குநர் சுசீந்திரன். கிராமத்து நபராகவே தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்

குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் கவர்ந்த பாரதிராஜா இதில் நம்மை கொஞ்சம் ஏமாற்றி விட்டுள்ளார் என்றே சொல்லலாம்.. ஒருவேளை வயது ஒரு காரணமாக கூட இருக்கலாம்.. தன் தந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வில் கொஞ்சம் கோட்டை விட்டுள்ளார்

இவர்களுடன் அப்புகுட்டி & ஜார்ஜ் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

டெக்னீசியன்கள்…

கிராமத்தை இசையை மண் மணம் மாறாமல் கொடுப்பவர் இளையராஜா. இந்த படத்திற்காக பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாரதிராஜா உடன் இணைந்துள்ளார் இளையராஜா.

இது ஒரு காதல் படம் என்பதை அவரது இசை தான் அடிக்கடி நினைவூட்டுகிறது. 1980களில் இசைஞானி போட்ட மெட்டுக்களின் உணர்வை இதில் கேட்க முடிகிறது.. பின்னணி இசையும் சிறப்பு.

வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவில் கிராம சுற்றுலா சென்ற உணர்வு கிடைக்கிறது. திண்டுக்கல் மாவட்ட அழகை திகட்ட திகட்ட கொடுத்துள்ளார். படத்தின் நீளத்தை குறைத்து இருப்பதால் நிச்சயமாக எடிட்டரை கை குலுக்கி பாராட்டலாம்.

பள்ளி காதல்.. கல்லூரி காதல் என்ற காதலில் ஆணவப்படுகொலையை கொடுத்து கொஞ்சம் வித்தியாசத்தையும் காட்ட முயற்சித்துள்ளார்.

ஆனால் திரைக்கதை செல்லும் விதத்தை முன்பே யூகிக்க முடிவதால் பெரிய சுவாரஸ்யம் ஏற்படவில்லை. புதுப்புது இயக்குனர்களே வித்தியாசமாக யோசிக்கும் போது கலை குடும்பத்தில் வந்த மனோஜ் இன்னும் கூட யோசித்து இருக்கலாம்.

தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையை மாற்றினாலும் இன்னும் ஜாதி உள்ளிட்ட தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருப்பதை தோலுரித்து காட்டியிருக்கிறார் மனோஜ்.

அதேசமயம் காதலர்களுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கு பாடம் எடுத்துள்ளனர் தயாரிப்பாளர் சுசீந்திரன் மற்றும் இயக்குனர் மனோஜ்.

Margazhi Thingal movie review and rating in tamil

லியோ விமர்சனம் 3.75/5… அன்லிமிடெட் ஆக்சன் ட்ரீட்

லியோ விமர்சனம் 3.75/5… அன்லிமிடெட் ஆக்சன் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.

கதைக்களம்…

ஹிமாச்சல் பிரதேசத்தில் கதைக்களம் தொடங்குகிறது. அங்கு அனிமல் பாதுகாவலராக வாழ்கிறார் பார்த்திபன் (விஜய்). இவருடன் மனைவி த்ரிஷா.. ஒரு டீன் ஏஜ் மகன் மகள் என வாழ்ந்து வருகிறார். காபி ஷாப் மூலம் கிடைக்கும் வருமானத்தில் இவர்கள் குடும்பம் வாழ்கிறது.

ஒரு நாள் இரவில் மிஷ்கின் மற்றும் சாண்டி இவர்களது காபி ஷாப்பில் நுழைந்து அங்கு வேலை செய்யும் பணி பெண்ணையும் விஜய்யின் மகளையும் துன்புறுத்துகின்றனர்.

இதனையடுத்து தற்காப்புக்காக மிஷ்கின் சாண்டி உள்ளிட்ட 5 நபர்களை குறி தவறாமல் சுட்டுக் கொல்கிறார் விஜய்.

ஒரு பயிற்சி பெற்ற போலீஸ்காரனால் கூட சரியாக சுட முடியாது நிலையில் விஜய் சரியாக எப்படி சுட்டார்? என விசாரணையில் போலீஸ் (கவுதம் மேனன்) இறங்குகிறது.

இது ஒரு பக்கம் இருக்க விஜய்யின் போட்டோ மும்பை சேலம் தெலுங்கானா உள்ளிட்ட கேங்ஸ்டர்களுக்கு பரவுகிறது.


அவர்கள் இவன் பார்த்திபன் (அல்ல) லியோ தாஸ் என்கின்றனர். அப்படி என்றால் உண்மையில் விஜய் யார் என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்கள்…

விஜய், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஆக்ஷன் டான்ஸ் பாசம் பொறுப்பு என அனைத்திலும் தெறிக்க விட்டுள்ளார் விஜய். அதே சமயம் விஜய்யின் ஹேர் ஸ்டைல் பெரும் அதிருப்தி.

ஃப்ளாஷ்பேக்கில் நான் ரெடி பாடலில் வரும் விஜய் செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்.

அழகும் அன்பு நிறைந்த நாயகியாக த்ரிஷா. காஷ்மீரில் பழுத்த ஆப்பிள் போல வருகிறார்.

விஜய்யின் கூடப்பிறந்த மடோனா செபஸ்டியன் கொஞ்ச நேரமே என்றாலும் ஆட்டத்திலும் ஆக்சனிலும் அசத்தல்.

தோழியாக பிரியா ஆனந்த். பெரிய காட்சிகள் இல்லை. விஜய் உடன் நடித்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்.

நரபலி கொடுக்கும் மூடநம்பிக்கை கொண்டவராக சஞ்சய் தத். மிரட்டல் வில்லத்தான் என்றாலும் நரபலி கான்செப்ட் நம்ப முடியாத ஒன்று. அதுவும் பெற்ற குழந்தைகளை கொல்ல நினைப்பது எல்லாம் யூகிக்க முடியாத கற்பனை.

வில்லன்களில் சஞ்சய் தத்தை விட அதிகமாகவே ஸ்டோர் செய்கிறார் அர்ஜுன். இளம் வயதிலும் வயசான கேரக்டரிலும் அர்ஜுன் கம்பீரமாகவே காணப்படுகிறார்.

மன்சூரலிகான் வந்து செல்லும் காட்சிகளில் மட்டுமே கொஞ்சம் சிரிக்க முடிகிறது. கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக அவரது ஸ்டைலிஷ் இங்கிலீஷில் பேசி கவனம் இருக்கிறார்.

மரியம் சார்ஜ் படத்தில் நுழையும் போதே அவர் கைதி படத்தின் LCU பாணி என தெரிகிறது.. அதற்கான நாளிதழ் ஆதாரமும் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

டெக்னீசியன்கள்…

அனிருத்தின் மிரட்டலான இசையில் படம் முழுவதும் பயணிக்கிறது. சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கிளைமாக்ஸ் இல் ‘பஞ்சு மிட்டாய் சேலை கட்டி…’ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.. லியோ படத்தில் முக்கியமான ஒரு ஆக்ஷனில் காட்சியில் ‘தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்றைக்கும் சண்டையே…’ என்ற பாடல் ஒலிக்கிறது பாடலை வைத்து இப்போதெல்லாம் ஓட்டி விடுகிறார்கள். பின்னணி இசை அமைக்க தேவையில்லை.

மற்றபடி நான் ரெடி பாடலும்… பேட் ஹாஷ் என்ற பாடலும் ரசிகர்களை தாளம் போட்டு ஆட்டம் போட வைக்கும்..

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது.. ஹிமாச்சல் பிரதேஷ் காட்சிகள் முதல் தமிழக காட்சிகள் என அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வழக்கமான பாணியில் லியோவை கடத்தி (!!!???) புரியுதா?இருக்க்கிறார்.

அவரது படங்களில் எப்போதுமே போதைப்பொருள் வியாபாரம் காட்டப்படும். லியோ படமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

தெறி படத்தில் பேக்கரி வைத்த விஜய் இந்த படத்தில் காபி ஷாப் வைத்துள்ளார். இவர் தான் லியோவா ? பார்த்திபனா? என திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தாலும் ஒரு வகையில் அவரே தான் இவர் என்பது போலவே யூகிக்க முடிகிறது.

ஆனாலும் படத்தின் மேக்கிங்கில் மாஸ் காட்டி இருக்கிறார் லோகேஷ். முதல் பாமியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ஆக்சன் ஆக காட்டப்பட்டாலும் நீளத்தை குறைத்து இருக்கலாம் எடிட்டர்.

படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்களை தவற விடாதீர்கள் என லோகேஷ் தெரிவித்திருந்தார். அது மிகவும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தி விட்டது. ஆனால் அதில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்பது தான் வருத்தம்.

ஆக ‘லியோ’ அன்லிமிடெட் ஆக்சன் ட்ரீட்

Leo movie review and rating in tamil

திரையின் மறுபக்கம் விமர்சனம்..; சினிமான்னா சும்மால்ல

திரையின் மறுபக்கம் விமர்சனம்..; சினிமான்னா சும்மால்ல

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கதைக்களம்…

சினிமாவில் உப்புமா கம்பெனி என்பதை கேள்விப்பட்டிருப்போம்.. இதில் உப்புமா இயக்குநரை நம்பி ஏமாந்து போன தயாரிப்பாளரின் பாவப்பட்ட நிலைதான் திரையின் மறுபக்கம்.

ரஜினிகாந்தை பார்த்து போட்டோ எடுக்க வேண்டும் என சென்னை வரும் தயாரிப்பாளரை.. நீங்கள் ஒரு படத்தை தயாரித்தால் அதை நான் இயக்குகிறேன்.

அந்தப் படத்தின் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் அருகே உங்களை உட்கார வைக்கிறேன் என்கிறார் இயக்குனர். அதை நம்பி படமும் எடுக்கிறார் இந்த விவசாய தயாரிப்பாளர்.

ஆனால் படம் முடிந்து வியாபாரம் செய்ய முடியாமல் கடன் மேல் கடன் வாங்கி வீட்டை விட்டு நிலத்தை விற்று மனைவியின் தாலியை விற்று தற்கொலை செய்து கொள்ளும் ஒரு தயாரிப்பாளரின் கண்ணீர் கதை இது.

திரைக்கும் முன்னால் உருவான படத்தை நாம் பார்த்து இருக்கிறோம்.. திரைக்குப் பின்னால் நடப்பவற்றை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் இப்பட இயக்குநர்.

திரையின் மறுபக்கம்

கேரக்டர்கள்…

சத்யமூர்த்தியாக நடித்தவர் தயாரிப்பாளரின் இன்னல்களை கண்முன்னே கண்ணீரோடு நிறுத்தியிருக்கிறார். பரிதாப கேரக்டரில் முகமது கெளஷ்.

இயக்குனர் போர்வையில் சுற்றித் திரியும் செந்தில்.. இவருக்கு காமெடி கை வந்த கலை. அலட்டலின்றி நடித்திருக்கிறார் நடராஜன் மணிகண்டன். ஆங்காங்கே காமெடி சாரல்களை தெறிக்கவிட்டுள்ளார்.

ஆனாலும் வாய்ப்பு தேடி தவறான வழியில் செல்லவிருந்த ஒரு பெண்ணை நேர்வழிப்படுத்தும் காட்சி ரசிக்க வைக்கிறது.

இளமை துள்ளும் நாயகி ஹேமா ஜெனிலியா.. கொஞ்சம் ரசிக்க வைத்து சூடேற்றுகிறார்.

கந்துவட்டி பைனான்சியராக அன்பரசன். அதேசமயம் இவரது பெயர் நிஜ சினிமா பைனான்சியரை நினைவுபடுத்துகிறது.. அதற்காக தான் அப்படி ஒரு பெயரை வைத்தாரோ என்னவோ..??

இயக்குநர் நிதின் சாம்சன் படத்துக்குள் உருவாகும் படத்திலும் நாயகன்.

வாழ்க்கையில் 64 கலைகள் இருக்கலாம். சினிமாவில் உள்ள 44 கிராப்டுகளை ஒரே ஆளாக நின்று செய்து காட்டி இந்த படத்தை கொடுத்துள்ளார் நிதின் சாம்சன்.

படம் முடிந்து எண்டு கார்டு போடும்போது லைட் மேன் சப்ளையர் டிரைவர் டீபாய் லைட் மேன் என அனைத்திலும் இவரது பெயரே ஓடிக்கொண்டே இருக்கிறது.

டெக்னீசியன்கள்…

அனில் நலன் சக்ரவர்த்தி, ரித்திக் மாதவன் இசையில் ‘ஏமாந்து போடா முட்டாளே’… ‘ஒருமுறை பார்த்தால் உயிர் போகும்’,… ‘ஆசையிலும் பேராசை’ ஆகிய பாடல்கள் உள்ளன இதில் முட்டாளே பாடல் நிச்சயம் ஒரு விழிப்புணர்வு பாடலாக அமைந்துள்ளது

ஒரு சினிமா உருவான பிறகு அதனை விற்க வியாபாரம் செய்ய ஒரு தயாரிப்பாளர் படும் வேதனைகளை இன்ச் பை இன்ச் ஆக காட்டி இருக்கிறார் இயக்குநர்.

அதே சமயம் படம் எடுக்கும் போது என்னென்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதையே சில காட்சிகளாக வைத்திருக்கலாம்.. முக்கியமாக ஒரு படப்பிடிப்பு நடைபெறும் போது அந்தப் பகுதியில் சூட்டிங் வைக்க காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருந்தாலும் ரவுண்ட்ஸ் வரும் போலீஸ் மாமூல் கேட்கும் காட்சிகளையும் வைத்திருக்கலாம்… அப்பொழுதுதான் ஒரு படம் எடுப்பது எத்தனை வலி மிகுந்தது என்பது மக்களுக்கும் தெரிய வந்திருக்கும்.

ஒரு படம் தயாரிக்க வருபவர்கள் இந்த படத்தை பார்த்து திரையின் மறுபக்கத்தை தெரிந்து கொண்டு படம் எடுக்கலாம். அத்தனை நுட்பமான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.

முக்கியமாக திருமணம் செய்து கொள்ளாத இயக்குனர் வெற்றியை கொடுத்தால் மட்டுமே அவருக்கு பெண் கிடைக்கும் என்பதையும் காட்டியிருக்கிறார்.

அதே சமயம் சினிமாவில் ஹீரோயினாக வளர வேண்டும் என ஆசைப்படும் நாயகிக்கு அவரது வீட்டிலும் மாப்பிள்ளை தேடும் படலம் என குடும்ப சூழ்நிலையும் ஒரு போன் காட்சியில் காட்டி இருக்கிறார்.

இவை எல்லாம் மீறி படுக்கையை பகிர நினைக்கும் நாயகிகள் என்பதை காட்டி அதனை மீறி விருதை வெல்லும் காட்சியை வைத்திருப்பது சிறப்பு.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க.. சென்சாரில் யூ சர்டிபிகேட் கிடைக்க பணம்… படத்தை வெளிநாட்டில் விற்க பணம்.. படத்தை விற்று தருகிறேன் என போலி ஆட்களை வைத்து போடும் நாடகம்.. என புரோக்கர்களின் அட்டூழியத்தையும் அக்குவேறாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.

இத்துடன் ஆங்கில படக் கதைகளை சுட்டு படம் எடுப்பதும்.. இயக்குனர் சங்கத்தில் கதாசிரியர்களின் பிரச்சனை.. என அனைத்தையும் காட்சிகளாக கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

திரையின் மறுபக்கம்

Thiraiyin Marupakkam movie review and rating in tamil

More Articles
Follows