தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

தொடரி இசை பாடல்கள் விமர்சனம்

பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்துள்ள படம் தொடரி.

பிரபு சாலமன் மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது.  இவரின் ஆஸ்தான பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் 2 பாடல்களை பாடியுள்ளார்.

அனைத்து பாடல்களையும் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார்.

பாடல்கள் பற்றிய விவரம்…

 

1) ஊரெல்லாம் கேட்குதே…

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் மரியா ரோ

ஊரெல்லாம் கேட்குதே என் பாட்டுதான்…

குயில் எல்லாம் போகுதே தலையாட்டிதான்…

தென்றல் இசை ஆகுதே… பூக்கள் ஜதி சொல்லுதே..

என இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் நாயகியின்  பாடலுக்கு ஆடுவதாக கவிஞர் யுகபாரதி வர்ணித்துள்ளார்.

இந்த வரிகள் இப்பாடலுக்கு அழகு சேர்த்துள்ளது.

இதில் வரும் ஸ்ரேயா கோஷலின் குரல் இன்னும் இனிமையை கூட்டுகிறது.

இப்படி மெலோடியாக செல்லும் பாடல் இறுதியில் ஆட்டம் போடும் வகையில் வளர்கிறது. இடையில் மற்ற மொழி வரிகள் மற்றும் ஹிந்தி வரிகளும் வந்து நம்மை ஆட்டுவிக்கின்றன.

இப்பாடலை கேரள செண்ட மேளம் இசை கூடுதலாய் கவனிக்க வைக்கிறது.

 

2) அடடா இது என்ன?….

பாடியவர்கள் : ஹரிசரன், வந்தனா சீனிவாசன்

அடடா இது என்ன? இது என்ன எனக்கொன்னும் புரியலையே… புரியலையே

அடியே எனக்கென்ன எனக்கென்ன… நடந்துச்சு தெரியலையே தெரியலையே…

நிழலாக கிடந்தேன் நான்.. நிசமாக நிமிந்தேன் நான்…

உன்ன பாத்து, தொடுவானாய் உசந்தேன் நான்….

என ஹரிசரணின் ஹை பீச்சில் இப்பாடல் தொடங்குகிறது.

நாயகனும் நாயகியும் காதல் வயப்படும்போது உருவாகும் வரிகளால் இப்பாடலை பின்னியுள்ளார் யுகபாரதி. காதலர்களுக்கு பிடிக்கும்.

 

3) மனுஷனும்.. மனுஷனும்…

பாடியவர் : கானா பாலா

மனுஷனும் மனுஷனும் பேசின காலம் போயே போச்சு.. ஐ…ஐ…ஐ….

அவன் முழிச்சதும் முழிக்கிற முகமோ இப்போ செல்போன் ஆச்சு…ஐ.ஐ…ஐ.ஐ…

ஊராங்கூட எப்போ பாரு சாட்டிங்கு…

பெத்து பேரு வச்சா ஆத்தா கூட பைட்டிங்கு….

போனு ஸ்மார்ட்டா ஆச்சு….

உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு…

என்ற வரிகளோடு ஆரம்பம் ஆகிறது. நவீன ஸ்மார்ட் போன்களால் நம் வாழ்க்கை வீணா போச்சு என கருத்துள்ள பாடலாய் இது அமைந்துள்ளது.

இது கானா பாலாவின் குரல் என்றாலும், இதுவரை கேட்காத ஒரு பாணியில் இப்பாடலை பாடியுள்ளார்.  ஆனால் பழைய சுவாரஸ்யம் இல்லை.

 

4) போன உசுரு வந்துருச்சி…

பாடியவர்கள் : ஹரிசரன், ஸ்ரேயா கோஷல்

போன உசுரு வந்துருச்சி… உன்ன தேடி திருப்பி தந்திருச்சி… என்று ஸ்ரேயா குரலில் ஆரம்பிக்கிறது இந்த மெலோடி பாடல்.

காதலனை மிஸ் செய்யும் பெண்களுக்கு ஏற்ற பாடலாய் இது அமைந்துள்ளது. அவனை இனிமே மிஸ் செய்யக்கூடாது என்பதால்.. இனிமேல்  ஒரு நாளும் இதுபோல் அமைய கூடாது என்று தன் வலியை பெண் பாடுவதாக உள்ளது.

இதில் ஹரிசரண் வாய்ஸ் அவ்வளவு பொருத்தமாக இல்லை என்றே தோன்றுகிறது. இந்த மெலோடியை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்வதாய் உள்ளது.

 

5) லவ் இன் வீல்ஸ்….

பாடியவர் : சின்னப் பொண்ணு

 

மைனா, கும்கி, கயல் பட பாடல்களின் ஹிட் உயரத்தை இது தொடுமா? என்பதை படம் வரும்வரை பொறுத்துத்தான் பார்க்கனும்.

Comments are closed.