தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கதைக்களம்…
மாரிமுத்துவின் மகன் கபாலி விஸ்வந்த். இவர் வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் போது நண்பர் ஒருவர் மூலமாக வேலை தேடி ஆந்திராவுக்கு செல்கிறார்.
அங்கு வேறு வழியில்லாமல் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் இவர் அந்த கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார்.
இந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு பணம் அனுப்பி வைக்கிறார். இந்த நிலையில் மாரிமுத்துக்கு விபத்து ஏற்படவே விஷ்வந்தை தொடர்பு கொள்ள முயல்கின்றனர். ஆனால் அவரை காணவில்லை என தகவல் வருகிறது.
இதனையடுத்து நாயகன் தன் நண்பனை தேடி ஆந்திராவுக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்னர் தான் நண்பனைப் போல பல தமிழர்கள் செம்மரம் கடத்தல் சம்பவத்தில் சிக்கிக் கொண்டனர் என்பது தெரிய வருகிறது. மேலும் அவர்களை என்கவுண்டர் செய்யவும் ஆந்திரா போலீஸ் திட்டமிடுகிறது.
இதற்குப் பின்னணியில் சமூகப் போராளி போர்வையில் ‘KGF’ வில்லன் ராம் ஈடுபட்டுள்ளார் என்ற விவரங்கள் தெரிய வருகிறது.
அதன் பிறகு என்ன நடந்தது.? தன் நண்பனை மீட்டாரா வெற்றி? ஆந்திராவில் இருந்து தமிழர்கள் தப்பித்தார்களா? தமிழர்களை மீட்டுக் கொண்டு வந்தாரா வெற்றி? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த ரெட் சாண்டல் திரைப்படம்.
——
Red Sandal Wood
நடிகர், நடிகைகள் :
வெற்றி (பிரபாகரன்) , தியா மயூரிக்கா ( வினிதா ), கேஜிஎப் ராம் (அரிமாறன் ), எம் எஸ் பாஸ்கர் ( முத்தையா ), கணேஷ் வெங்கட்ராமன்( ராமைய்யா ) , மாரிமுத்து ( இளவரசு ), கபாலி விஷ்வந்த் (கருணா ), ரவி வெங்கட்ராமன் ( SP), மெட்ராஸ் வினோத் ( தீனா ) ,வினோத் சாகர் ( புரோக்கர் பாஸ்கர் ), லட்சுமி நாராயணன்( நரசிம்மன் ), சைதன்யா ,விஜி, அபி , கர்ணன் ஜானகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள் .
கேரக்டர்கள்…
வெற்றி மேல் வெற்றி என்று தன் பெயருக்கு ஏற்ப வெற்றிகளை குவித்து வருகிறார் நாயகன் வெற்றி.
இதற்கு முக்கிய காரணம் அவர் கதாநாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக கதைகளை தேர்வு செய்து அதில் தன்னை பொருத்திக் கொண்டு நடித்து வருவது என்பதுதான் மிகையில்லாத உண்மை.
வேலை கிடைக்காத விரக்தியில் யதார்த்த குடும்ப இளைஞனை பளிச்சிடுகிறார் கபாலி விஸ்வந்த். இவரது காட்சிகள் நம்மை கொஞ்சம் கலங்க அடிக்கிறது.
மாரிமுத்து கொஞ்ச நேரமே வந்தாலும் மனதில் முத்திரை பதிக்கிறார். (தற்போது அவர் மறைந்துவிட்டார்.)
மிரட்டல் வில்லனாக கேஜிஎப் ராம். வேற லெவல் மிரட்டல். ஹீரோயினுக்கு பெரிதாக வேலை இல்லை.. ஆனாலும் கலர் ஆடைகளை விட ஸ்கூல் யூனிபார்மில் அழகாகவே இருக்கிறார் தியா மயூரிக்கா.
தொழில்நுட்ப கலைஞர்கள் :
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – குரு ராமானுஜம்
இசை – சாம் CS
பாடல்கள் – யுகபாரதி
கேமரா – சுரேஷ் பாலா
சவுண்ட் டிசைன் – ஆஸ்கர் நாயகன் ரசூல் பூக்குட்டி.
எடிட்டிங் – ரிச்சர்ட் கெவின்.
சண்டை பயிற்சி – மிராக்கில் மைக்கேல் .
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு மேற்பார்வை – பாண்டியன்
தயாரிப்பு – J.பார்த்தசாரதி
வேலை தேடி வேறு மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் நம் லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் விவரங்களை கொடுத்து விட்டு செல்வது நடைமுறையில் இருந்தாலும் பலருக்கு தெரிவதில்லை. ஆனால் இதை ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறார் இயக்குனர் குரு ராமானுஜம்
நாம் வேறு மாநிலத்திற்கு செல்லும் போது அந்த பகுதி ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்படும். உயிருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இரு மாநில அரசுகளுக்கும் அதில் பங்கு உள்ளது என்பதை இயக்குனர் சொல்லி இருப்பது பல இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
ரெட் சாண்டல்வுட் படம் ஆரம்பிக்கும் போது மரப்பாச்சி பொம்மைகளை காட்டி இருக்கிறார். இயக்குனர் மரத்திலான பொம்மைகளை பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு எந்த விதமான நோயும் ஏற்படுவதில்லை. மாறாக அழகாக காட்டப்படும் சைனீஸ் பொம்மைகளை பயன்படுத்துவதால் பலவிதமான நோய்கள் நம்மையும் தாக்குகின்றன என்பதை அப்பட்டமாக சொன்ன இயக்குனருக்கு ஆயிரம் ஆயிரம் நன்றிகள்.
தொய்வு இல்லாத திரைக்கதை.. மிரட்டலான (சாம் சி.எஸ்) பின்னணி இசை.. சமூக விழிப்புணர்வை சொல்லும் திரைக்கதை என அனைத்திலும் தொழில்நுட்ப கலைஞர்கள் பளிச்சிடுகின்றனர்.
ஆக குறைந்த நேரத்தில் ஒரு நிறைவான படத்தை கொடுத்த படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்..
ஆக ரெட் சாண்டல் வுட்… ரத்த போராட்டம்
Red Sandal Wood review and rating in tamil