நேர்முகம் விமர்சனம்

நேர்முகம் விமர்சனம்

நடிகர்கள் : ரஃபி, மீரா நந்தன், பாண்டியராஜ், கூல் சுரேஷ், மீனாட்சி, ஆதித்யா, நெல்லை சிவா, சிசர் மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் : முரளி கிருஷ்ணா
இசை : முரளி கிருஷ்ணா
ஒளிப்பதிவாளர் : கோபி
எடிட்டிங்: அத்தியப்பன் சிவா
பி.ஆர்.ஓ.: ஜான்
தயாரிப்பாளர் : ஹை டெக் பிக்சர்ஸ் ரஃபி

ner mugam audio

கதைக்களம்…

மனோதத்துவ டாக்டர் ஆதித்யா மேனனிடம் ட்ரீட்மெண்ட்டுக்காக செல்கிறார்கள் ஹீரோ ரபி மற்றும் ஹீரோயின் மீனாட்சி.

ஆனால் அவர்களை வளைத்து, தனக்கு சொந்தமான காட்டு பங்களா ஹெஸ்ட் அவுஸ் அடைத்து வைக்கிறார் டாக்டர்.

அங்கு பார்த்தால் இவர்களைப் போன்று பல காதல் ஜோடிகள் அடைக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் ட்ரீட்மெண்டுக்கு பதில், அடியாட்களின் அடி மிரட்டல் மட்டுமே அங்கு கிடைக்கிறது.

டாக்டர் அப்படி செய்ய என்ன காரணம்? என்ற ப்ளாஷ்பேக்கும் வருகிறது.

ஆனால் அதில் ட்விஸ்ட் வைத்து ஹீரோ டச்சோடு படத்தை முடிக்கிறார் இயக்குனர் முரளி கிருஷ்ணா.

ner mugam stills

கதாபாத்திரங்கள்…

படத்தின் புரொயூசர் ஹீரோ எல்லாம் ரஃபிதான். வருகிறார் செல்கிறார். நடிப்பில் இன்னும் பல படிகளை தாண்ட வேண்டும்.

இரண்டு ஹீரோயின் இருந்தும் காதல் காட்சிகளில் ஒரு கெமிஸ்ட்ரியும் இல்லை.

நாயகிகள் மீரா நந்தன், மீனாட்சி… ஒருவர் ஹோம்லியாக வருகிறார். மற்றொருவர் க்ளாமராக வருகிறார்.
கூல் சுரேஷ் கத்தி கத்தி பேசிக் கொண்டே இருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக பாண்டியராஜன். இவருடன் நெல்லை சிவா, சிசர் மனோகர். கொஞ்சம் காமெடி. கொஞ்சம் போர்.

டாக்டராக வரும் ஆதித்யா மிரட்டலாக வந்தாலும் க்ளைமாக்ஸில் கம்பீரம் இல்லை.

படத்தின் முதல் பாதியில் ஆக்ஷன் த்ரில்லரை சொல்லிவிட்டு இரண்டாம் பாதியில் கலகலப்பாய் பாட்டு, ஆட்டம் என கொண்டு செல்கிறது.

பார்வை ஒன்றே போதுமே படத்தின் பலமே பாடல்கள்தான். இதிலும் அதில் ஜஸ்ட் பாஸ் மார்க் பெறுகிறார்.

‘கண்ணுக்கு’, ‘போறவளே’ ஆகிய பாடல்கள் நிச்சயம் கேட்கலாம்.

மொத்தத்தில் நேர் முகம்… உங்கள் சாய்ஸ்

Comments are closed.