First on Net தொட்ரா விமர்சனம்

First on Net தொட்ரா விமர்சனம்

நடிகர்கள்: பிருத்வி பாண்டிராஜன், வீணா, இயக்குநர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், மைனா சூஸன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா, ராஜேஷ் மற்றும் பலர்.
இசை – உத்தமராஜா
ஒளிப்பதிவு – ஆஞ்சி
படத்தொகுப்பு – ராஜேஷ் கண்ணன்
சண்டைப் பயிற்சி – விக்கி நந்த கோபால்
இயக்கம் – இயக்குநர் பாக்யராஜின் சீடர் மதுராஜ்
பி.ஆர்.ஓ. – அ. ஜான்
தயாரிப்பு – ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் (ஜெய்சந்திரா சரவணக்குமார்)

கதைக்களம்…

தொட்ரா.. தைரியம் இருந்தா தொட்டு பார்ரா என்பார்களாலே அந்த தோனியில் தொட்ரா என்ற தலைப்பில் வந்திருக்கும் படம் தான் இது.

தர்மபுரியில் நடைபெற்ற இளவரசன் திவ்யா ஜாதி கலப்பு திருமணத்தை அடிப்படையாக கொண்டு கமர்சியல் கலந்து ஓர் உண்மைச் சம்பவத்தை படமாக்கியுள்ளார் மதுராஜ்.

அந்த தைரியத்திற்காகவே அவரை பாராட்டி இந்த விமர்சனத்தை தொடங்கலாம்.

தன் ஜாதி கௌரவத்தை காப்பாற்றுவதற்காகவே வாழ்ந்து வருபவர் எம்.எஸ். குமார். இவரின் மனைவி மைனா சூசன்.

குமாருக்கு ஓர் அழகான தங்கை வீணா. அவரை காதலிக்கிறார் நாயகன் பிருத்வி பாண்டியராஜன்.

இவர்களின் காதலுக்கு ஜாதி ஒரு தடையாக இருக்கிறது. இவர்களின் காதலை தெரிந்துக் கொண்ட அண்ணன் தன் தங்கையை அவர்களின் ஜாதியை சேர்ந்த ஒருவருக்கு நிச்சயம் செய்து வைக்கிறார்.

இதனை மீறி வீணாவை அழைத்துக் கொண்டு பறக்கிறார் பிருத்வி.

ஒரு கட்டத்தில் இந்த காதல் ஜோடிக்கு அடைக்கலம் கொடுக்கிறார் வெங்கடேஷ். அதே சமயம் வீணாவை மீது காமம் கொண்டு அவளை அடைய நினைக்கிறார்.

மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவர்களிடம் நடித்து வீணாவின் அண்ணனிடம் இவர்களை காட்டிக் கொடுக்கிறார்.
அதன்பின்னர் என்ன நடந்தது..? வில்லனிடம் சிக்கினாரா பிருத்வி..? தன் மனைவியை எப்படி காப்பாற்றினார்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் விடை கொடுத்துள்ளார் டைரக்டர் மதுராஜ்.

கேரக்டர்கள்…

ஒரு நடுத்தர குடும்பத்து யதார்த்த இளைஞராக பிரகாசிக்கிறார் பிருத்வி. பேப்பர் போட்டு தன் குடும்பதை காப்பாற்று முதல் நாயகியுடன் டூயட் வரை பாடி செல்கிறார். முக பாவனைகளில் இன்னும் முதிர்ச்சி தேவை.

நாயகனை மிஞ்சி தன் மிரட்டல் நடிப்பால் ஜொலிக்கிறார் தயாரிப்பாளரும் வில்லன் நடிகருமான எம்எஸ். குமார். ஜாதி கௌரவம் ஒரு பக்கம், தங்கை பாசம் மறு பக்கம் என மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

தன் மனைவியின் பணத்தாசை மீறி இறுதியில் இவர் எடுக்கும் ஒரு முடிவு ஒரு பாசமலரை நினைவுப்படுத்தும்.
காதல், அண்ணன் பாசம், ஏக்கம், தவிப்பு என அனைத்தையும் கண்களில் காட்டி நம்மை தவிக்க விட்டுள்ளார் வீணா. நைட்டி, சுடிதார், புடவை என அனைத்து உடையில் நம்மை ஈர்க்கிறார்.

அழகும் திறமையும் நிறைந்த இவர் தமிழ் சினிமாவில் ஒரு வலம் வர வாய்ப்பு உண்டு. ஏனென்றால் இவரது பூர்விகம் கேரளா.

நாயகி வீணாவை வைத்து கேமராவில் கவிதை வாசித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆஞ்சி.

கல்யாணம் என்று வந்துவிட்டால் பெரும்பாலான பெண்கள் காதலனா? குடும்பமா? என தவிப்பார்கள். அதையும் நாசூக்காக தன் நடிப்பில் சொல்லிவிட்டார் வீணா,

உதவி செய்வதுபோல் நடித்து டபுள் கேம் விளையாட்டில் வென்றுள்ளார் வெங்கடேஷ். இவருக்கு பக்கபலமாக கூல் சுரேஷ்.

மைனா படத்தில் போலீஸ் மனைவியாக கலக்கிய சூசன் இதிலும் மிரட்டல். தன் கண்களிலேயே அதிரடி காட்டியுள்ளார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர் உத்தம ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கிறது. சிம்பு குரலில் ஒலிக்கும் பக்கு பக்கு என்ற பாடலும் நிச்சயம் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும்.

அதிலும் ஒளிப்பதிவாளர் ஆஞ்சியின் காட்சியமைப்பு அருமை.

படம் முடிகிறது என்று நாம் நினைக்கையில், அதன் பின்னர் ஒரு ட்விஸ்ட் கொடுத்து படத்தை இன்னும் நீட்டிவிட்டார் எடிட்டர். இதனால் இரண்டாம் பாதியில் தொய்வு ஏற்படுவதை தவிர்த்திருக்கலாம்.

பாக்யராஜ் சீடர் என்றாலும் அவரை போல சமாச்சாரங்களை இடம் பெறாமல் செய்துள்ளார் மதுராஜ்.

எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என முதல் படத்தை ஏனோ தானோ கொடுக்காமல் ஜாதியை ஒழிக்க டைரக்டர் எடுத்துள்ள முயற்சிக்கு ஹாட்ஸ் ஆஃப்.

ஜாதி என விஷ காற்றை நாம் சுவாசித்தால் ஆபத்து என்பதையும் அடித்து சொல்லியிருக்கிறார் மதுராஜ்.

ஒரு நல்லவனை அவன் சாதி அதன் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொள்கிறது. ஒரு கெட்டவன் அவன் சாதியை தன் ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொல்(ள்)கிறான் என்பதே டைரக்டர் டச்.

தொட்ரா… ஜாதி வெறியர்களுக்கு காதல் சவுக்கடி

Thodra aka Thodraa movie review rating

Comments are closed.

Related News

ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் ஜே எஸ்…
...Read More
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார்…
...Read More
ஜெ.எஸ்.அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் பிரபல தொழிலதிபர்…
...Read More